உங்களுடைய வருமானத்தை இரட்டிப்பாக்க ஒரு செம்பருத்தி பூ மட்டும் போதும்..

Advertisement

பணவரவு அதிகரிக்க பரிகாரம்

இன்றைய காலத்தில் பணத்தை சம்பாதிப்பதற்காக ஓடி ஓடி உழைக்கின்றனர். ஆனால் அன்றைய நாள் செலவுகளை சமாளிப்பதற்கே பணம் சரியாகிறது. யாராக இருந்தாலும் சம்பாதிக்கின்ற பணமானது இரட்டிப்பாக வேண்டும் என்று தான் நினைப்பார்கள். இதற்காக கோயில்களுக்கு சென்று பரிகாரமும் செய்வார்கள். ஆனால் அவையாவும் தகுந்த பலனை தராமல் இருக்கும். அதனால் தான் இந்த பதிவில் பணவரவு அதிகரிக்க என்ன பரிகாரம் செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..

பரிகாரம் செய்வது எப்படி.?

பணவரவு அதிகரிக்க பரிகாரம்

பரிகாரம் செய்வதற்கு காப்பர் சொம்பு, ஒரு இதழ் செம்பருத்தி பூ போன்றவை தேவைப்படும்.

நீங்கள் பரிகாரம் செய்வதற்கு முதல் நாளே செம்பருத்தி பூவை மொட்டாக பறித்து வர வேண்டும்.

இரவு தூங்குவதற்கு முன்பு காப்பர் சொம்பில் முழுவதும் தண்ணீரை எடுத்து கொள்ள வேண்டும். இதில் பறித்து வைத்த செம்பருத்தி பூவை சேர்த்து மூடி போட்டு மூடி விட வேண்டும்.

சுக்கிர பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்ட போகிறது..

இவை அப்படியே ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே இருக்க வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து குளித்து முடித்தவுடன் பூஜை அறையில் தீபம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும்.

உங்களுக்கு பிடித்த தெய்வம் அல்லது மகாலட்சுமி கடவுளை மனதில் நினைத்து சம்பாதிக்கின்ற பணமானது இரட்டிப்பாக வேண்டும், கடன் பிரச்சனை இருக்க கூடாது என்று மனதார வேண்டிகொள்ளுங்கள்.

கடவுளை பூஜித்த பிறகு சொம்பில் உள்ள பூவை கடவுளுக்கு அணிய வைக்க வேண்டும். சோம்பு தண்ணீரை நீங்கள் குடித்து விட வேண்டும். அதுவும் இந்த தண்ணீரை வெறும் வயிற்றில் தான் குடிக்க வேண்டும்.

இந்த பரிகாரத்தை இது போல ஒரு மண்டலம் அதாவது 48 நாட்களுக்கு தொடர்ந்து செய்ய வேண்டும். இது போல செய்து வந்தால் வீட்டில் பணம் இரட்டிப்பாக மாறுவதை நீங்களே காணலாம்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement