கிருஷ்ண ஜெயந்தி அன்று இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் போதும் செல்வ செழிப்பு அதிகரிக்கும்..!

Pana Varavu Peruga Tips in Tamil

Pana Varavu Peruga Tips in Tamil

நமது முன்னோர்களின் காலகட்டத்தில் ஒரு மனிதன் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் அதற்கு மிகவும் முக்கியமாக தேவைப்பட்டது உணவு, உடை, உறையுள்(வீடு) ஆகியவை தான். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்த மூன்றும் நமக்கு சரியாக கிடைத்து நாம் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் அதற்கு முதலில் நமக்கு தேவைப்படுவது பணம். அப்படி நமக்கு தேவைப்படும் பணத்தை நாம் நாமல் இயன்ற அளவிற்கு சம்பாதிப்போம். ஆனால் நமக்கு தேவைப்படும் நேரத்தில் அது நம்மிடம் இருக்காது. அதனால் இன்றைய பதிவில் மிகவும் எளிமையான முறையில் உங்கள் வீட்டில் பணம், செல்வம் பெருக உதவும் கிருஷ்ண ஜெயந்தி பரிகாரத்தை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன பரிகாரம் என்று அறிந்து கொண்டு அதனை செய்து பயன் பெறுங்கள்.

செல்வ செழிப்பை அதிகரிக்க கல் உப்பில் இதை மட்டும் மறைத்து வையுங்க

பண வரவு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்..?

பண வரவு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்

இன்றைய காலகட்டத்தில் பணம் தான் அனைத்தும் என்றாகிவிட்டது. அதனால் பணத்தை நமது வசத்தில் வைத்து கொள்வதற்கு நாமும் கடினமாக உழைப்போம். ஆனாலும் நமக்கு தேவைப்படும் பொழுது அந்த பணம் நம்மிடம் இருக்காது.

அதனால் தான் கருணை கடவுளான கிருஷ்ணர் பிறந்த நாளான ஆவணி மாதத்தில் வருகின்ற தேய்பிறை அஷ்டமி அன்று ஒரு எளிமையான பரிகாரத்தை செய்திர்கள் என்றால் கிருஷ்ண பகவான் நமக்கு உள்ள அனைத்து பண கஷ்டங்களையும் போக்கிவிடுவார்.

அது என்ன பரிகாரம் என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க..

முதலில் இந்த பரிகாரத்திற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை பார்க்கலாம் வாங்க..

  1. அரச மரம் அல்லது ஆலமர இலை – 1
  2. மண்விளக்கு – 1
  3. பஞ்சித்திரி – 1
  4. நெய் – தேவையான அளவு
  5. பூக்கள் – தேவையான அளவு
  6. மஞ்சள் – தேவையான அளவு
  7. குங்குமம் – தேவையான அளவு

கடுகு டப்பாவில் இதை மட்டும் மறைத்து வையுங்க வீட்டில் வைக்க இடமில்லாத அளவிற்கு பணம் சேரும்

பரிகாரம் செய்யும் முறை:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 அரச மரம் அல்லது ஆலமர இலையை நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு அதற்கு மஞ்சள் குங்கும போட்டு வைத்து கொள்ளுங்கள்.

அதேபோல் நாம் எடுத்து வைத்து மண்விளக்கிற்கும் மஞ்சள் குங்கும போட்டு வைத்து கொள்ளுங்கள். பிறகு அதில் தேவையான அளவு நெய் ஊற்றி பஞ்சித்திரி போட்டு விளக்கினை ஏற்றுங்கள்.

பின்னர் அந்த விளக்கினை சுற்றி பூக்களினால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

பரிகாரம் செய்யும் நேரம்:

இந்த பரிகார விளக்கினை நீங்கள் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்யும் நேரத்தில் ஏற்றி வைத்த பிறகு பூஜை செய்வது மிக மிக மிக நல்ல பலனை அளிக்கும்.

செல்வ செழிப்பு உண்டாக கோகுலாஷ்டமி அன்று 12 ராசியினரும் இப்படி பூஜை செய்யுங்க போதும்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்