Veetil Panam Sera Enna Seivathu
நாம் அனைவருமே நமது வீட்டில் பணம் அதிகமாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவோம். இதனால் கடினமாக உழைக்கக்கூட செய்வோம். ஆனால் ஒரு சில வீடுகளில் என்னதான் கடினமாக உழைத்தால் கூட பணம் என்பதே தங்காது. எனவே அப்படி இருக்கும் வீடுகளில் நாம் சில பரிகாரங்களை செய்வதன் மூலம் வீட்டில் பணவரவை அதிகரிக்கலாம். ஓகே வாருங்கள் வீட்டில் பணமழை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்.? என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.
பணம் சேர பரிகாரம்:
இந்த பரிகாரத்தை நீங்கள் வெள்ளிக்கிழமை அன்று மாலை 06 மணிக்கு மேல் செய்ய வேண்டும்.
முதலில் பூஜை அறையை சுத்தம் செய்து பூஜை செய்வதற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்து விடுங்கள்.
அதன் பிறகு, ஒரு கண்ணாடி கிண்ணம் அல்லது வெள்ளி கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். இதில் அரிசி, சர்க்கரை மற்றும் உப்பினை சம அளவில் எடுத்து கொள்ளுங்கள். அதன் பிறகு இதில் ஒரு குத்தூசியை மேல்நோக்கியவாறு நோக்கி குத்தி வைத்து விடுங்கள்.
இப்போது, பூஜை அறையில் விளக்கேற்றி, இந்த கிண்ணத்தின் மீது கைவைத்து உங்களின் குலதெய்வம், இஷ்டதெய்வம் போன்ற தெய்வங்களை நினைத்து உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வீட்டில் பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று வேண்டி கொள்ளுங்கள்.
அடுத்து, இந்த கிண்ணத்தை எடுத்து உங்கள் வீட்டின் மறைவாக இருக்கும் தென்மேற்கு மூலம் அல்லது வடமேற்கு மூலையில் வைக்க வேண்டும்.
இந்த பரிகாரத்தை நீங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செய்து வர உங்கள் வீட்டில் பணவரவு அதிகரிக்கும்.
வீட்டில் இந்த மரத்தை மறந்தும் நட்டு விடாதீர்கள்.. பணக்கஷ்டம் இருந்து கொண்டே இருக்குமாம்..!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |