Panam Vara Pariharam
பொதுவாக பெரும்பாலான வீடுகளில் பணவரவு என்பதே இருக்காது. என்னதான் கடினமாக உழைத்து சம்பாதித்தாலும் கையில் ஒரு ருபாய் கூட இருக்காது. எனவே வீட்டில் பணவரவு அதிகரிக்க நாம் சில பரிகாரங்களை செய்ய வேண்டும். அதனை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இப்பரிகாரத்தை செய்து பாருங்கள். நீங்கள் எதிர்பார்த்த பணம் உங்களை வந்து சேரும். ஓகே வாருங்கள் வீட்டில் கடன் தொல்லை நீங்கி எப்போதும் வீட்டில் பணம் நிலைத்து இருக்க சந்தனத்தை வீட்டில் எங்கு வைக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் இந்த மூன்று ராசிக்காரர்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம்..!
பணவரவு அதிகரிக்க பரிகாரம்:
தேவையான பொருட்கள்:
- சந்தனம்
- ஏலக்காய்
- மல்லிகை பூ
- வில்வ இலை
முதலில் ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்து கொள்ளுங்கள். அதில் சந்தனம், ஏலக்காய், மல்லிகைப்பூ, வில்வ இலை இவை அனைத்தையும் வைத்து முடிச்சு போட்டு கொள்ளுங்கள்.
இந்த முடிச்சினை உங்கள் வீட்டில் உள்ள பணப்பெட்டியில் வைத்து ஒவ்வொரும் வெள்ளிக்கிழமையும் பூஜை செய்து வந்தால் உங்கள் வீட்டில் பணவரவு அதிகரிப்பதை நீங்களே உணரலாம்.
பணவரவு அதிகரிக்க பின்பற்ற வேண்டிய விஷயங்கள்:
உங்கள் வீட்டு பூஜை அறையில் ருத்ராட்சம், அருட் பிரசாதம், எலுமிச்சை பழம், மஞ்சள் காப்பு மற்றும் குங்குமம் போன்ற பொருட்களை வைத்து தினமும் வழிபாடு செய்து வர வேண்டும்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் அரசமரத்திற்கு தீபம் ஏற்றி வழிபட்டு 108 முறை சுற்றி வர வேண்டும்.
மஹாலக்ஷ்மியின் அம்சமாக விளங்கும் உப்பினை வெள்ளிக்கிழமை அன்று வீடுகளில் வாங்கி வந்து வைக்க வேண்டும்.
வீட்டில் பணமழை கொட்ட இந்த பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள் போதும்..!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |