பணம் கிடைக்க கல் உப்பு பரிகாரம் | Panam Kidaikka Uppu in Tamil
கடல் தண்ணீரில் மலிந்து கிடக்கும் உப்பை கடல் தங்கம், சமுத்திரமணி, பூமிகற்பம், சமுத்திர ஸ்வர்ணம், ஜலமாணிக்கமென்று வர்ணிக்கிறார்கள் மீனவ நண்பர்கள். இந்த உப்பை வைத்து ஒரு உயர்வான பிரார்த்தனை முறை செய்து, பலர் வெற்றியும் கண்டுள்ளனர். அப்படி என்ன பிரார்த்தனை என்று தானே யோசிக்கிறிர்கள் வாருங்கள் அதற்கான பதிலை இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்துகொள்வோம்.
உடனடியாக பணம் கிடைக்க மந்திரம்:
- இயற்கையாகவே கல் உப்பில் நல்ல ஆற்றல் உள்ளது. இந்த உப்பை வைத்து நாம் எது வேண்டி கொண்டாலும் நமக்கு கிடைக்கும் என்று ஐதீகம். கல் உப்பினால் நம்முடைய பொருளாதார பிரச்சனையை நொடியில் தீர்க்க முடியும்.
- நமக்கு நல்லது நடக்க வேண்டுமென்றால் சந்திரனின் ஆற்றலும், சுக்கிரனின் ஆற்றலும் முதலில் கிடைக்க வேண்டும். இந்த இரண்டு ஆற்றலையும் பெற்றுவிட்டாலே நாம் எந்த காரியம் நினைத்தாலும் அதில் வெற்றி கிடைக்கும்.
- இந்த இரண்டு பகவானையும் ஒன்று சேர்ப்பதற்கு கல் உப்பு உங்களுக்கு உதவும் வாருங்கள் அதை பற்றி பார்க்கலாம். அதிகாலையில் எழுந்து, குளித்து விட்டு இரண்டு கைகளிலும் சம அளவு கல் உப்பை எடுத்து கொள்ளவும்.
- பின் நேராக நிமிர்ந்து உட்கார்ந்து இரண்டு கைகளையும் உங்கள் இரண்டு தொடைகளின் மேல் வைத்துக்கொள்ளுங்கள். கையை மூடியவாறு வைத்துக்கொள்ளுங்கள்.
- பிறகு சந்திர பகவானின் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். அதன் பிறகு சுக்கிரனின் மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும். நேரம் இல்லாதவர்கள் 11 முறை உச்சரிக்கலாம். இதை நீங்கள் 48 நாட்கள் செய்ய வேண்டும்.
காலை எழுந்தவுடன் எதை முதல் பார்த்தால் அதிர்ஷ்டம் தெரியுமா? |
சந்திர பகவானின் மந்திரம்:
- ஓம் ஷ்ராம் ஸ்ரீம் சஹ்ரும் சஹ் சந்திராய நமஹ.
சுக்கிர பகவானின் மந்திரம்:
- ஓம் த்ராம் த்ரீம் த்ரௌம் சஹ் சுக்ராய நமஹ.
பணம் கிடைக்க உப்பு மந்திரம்:
- இந்த மந்திரங்களை உச்சரித்த பின்பு உங்களின் வேண்டுதலை நல்ல எண்ணத்துடன் வேண்டி கொள்ளுங்கள். இந்த வேண்டுதல் மூலம் உங்களின் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும்.
- முக்கியமாக பண வரவு அதிகரிப்பதற்கும், கொடுத்த கடன் திரும்ப கிடைப்பதற்கும் உதவியாக இருக்கும். இதை நீங்கள் 48 நாட்கள் செய்து வரும்போது இருபத்தொன்றாவது நாள் உங்களுடைய வேண்டுதல் பாதி நிறைவடைந்திருக்கும். 48 நாட்களும் நீங்கள் ஒரே கோரிக்கையை தான் வைக்க வேண்டும்.
- தியானம் முடிந்த பிறகு கையில் உள்ள உப்பினை கரைத்து விடலாம், அந்த தண்ணீரை அசுத்தமான இடத்தில் ஊற்றாமல், சுத்தமான மண்ணில் ஊற்றி விடலாம். இதை பெண்களும் செய்யலாம். பெண்கள் மாதவிடாய் உள்ள காலத்திலும் செய்யலாம்.
நினைத்தது நிறைவேற கல் உப்பை வீட்டில் இந்த இடத்தில் வைத்து பாருங்கள்..! |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |