வீட்டில் வைக்க இடமில்லாத பணத்திற்கு செம்பருத்தி பூ மட்டும் போதும்…

panam peruga enna seiya vendum

வீட்டில் பணம் தங்க என்ன செய்ய வேண்டும்

பொதுவாக வீட்டில் எவ்வளவு பணம் இருந்தாலும் போதும் என்ற மனநிலை வராது. பணம் நிறைய வைத்திருப்பவர்களே இப்படி நினைத்தால் பணம் இல்லாத ஏழ்மையான மக்கள் பணத்தை எப்படி பெருக்குவது என்று தான் யோசிப்பார்கள். அதிலும் பணத்தை சம்பாதிப்பார்கள் அவை அந்த பணம் எங்கே போகிறது என்றே தெரியாது. அப்படி சம்பாதிக்கின்ற பணமானது வீட்டில் தங்கி பணத்தை பெருக்குவதற்கு ஆன்மிகத்தில் ஏதும் வழிகள் இருக்கிறதா என்று தான் யோசிப்பார்கள். அந்த வகையில் அவர்களுக்கு உதவிடும் வகையில் வீட்டில் பணம் தங்குவதற்கு எளிமையான பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

பணவரவை அதிகரிக்க பரிகாரம்:

வீட்டில் பணம் தங்க என்ன செய்ய வேண்டும்

பணவரவை அதிகரிக்க தேவையான பொருட்களாக செம்பருத்தி பூ மற்றும் சொம்பு தேவைப்படும். அதுவும் காப்பர் சொம்பாக இருந்தால் இதனுடைய பலனை நன்றாக அடையலாம்.

பரிகாரம் செய்வதற்கு செம்பருத்தி மொட்டு, ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும். இந்த தண்ணீரில் செம்பருத்தி மொட்டை வைத்து அதை ஒரு தட்டை பயன்படுத்தி மூடி விட வேண்டும். இந்த சொம்பை பூஜை அறையில் வைக்க வேண்டும்.

கல் உப்பு ஜாடி கீழே இந்த பொருளை மறைத்து வைய்யுங்க கஷ்டம் நீங்கி பணம் பெருகும்..!

மறுநாள் காலையில் எழுந்து குளித்து விட்டு பூஜை அறைக்கு சென்று உங்களது கடன் பிரச்சனை, பணவரவு அதிகரிக்க மாட்டிக்கிறது, சம்பள உயர்வு, வருமானத்தில் தடை போன்ற எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதனை மனதார நினைத்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

பிறகு பூஜை அறையில் சொம்பில் உள்ள பூவை எடுத்து தண்ணீர் இல்லாமல் பூஜை அறையில் உள்ள சாமி படமான மகாலட்சுமி படம் அல்லது இஷ்ட தெய்வம் போன்றவற்றில் ஏதவாது வைத்து விட வேண்டும். தண்ணீரை குடித்து விட வேண்டும்.

இது போல இந்த பரிகாரத்தை 48 நாட்களுக்கு தொடர்ந்து செய்ய வேண்டும். காலையில் குளித்து விட்டு இந்த பரிகாரத்தை செய்யலாம். காலம், நேரமெல்லாம் இல்லை.

பெண்கள் மாதவிடாய் நேரத்தில் மட்டும் இந்த பரிகாரத்தை செய்ய கூடாது. அசைவம் சாப்பிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை.

இந்த பரிகாரத்தை  செய்வதோடு மட்டுமில்லாமல் பணவரவை அதிகரிக்க வழிகளையும் பார்க்க வேண்டும்.

தீராத கடன் பிரச்சனைக்கு இந்த கோவிலுக்கு சென்று வந்தால் மட்டும் போதும்..

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்