வீடு மற்றும் தொழில் செய்யும் இடத்தில் பணவரவு ஏற்பட இந்த ஒரு இலை மட்டும் போதும்..!

Advertisement

Panam Peruga Tips in Tamil

மனிதன் என்று பணத்தை உருவாக்கினானோ அன்றிலிருந்து பணம் தான் இந்த உலகில் அனைத்தும் என்றாகிவிட்டது. அதனால் அந்த பணத்தை தங்கள் வசத்தில் வைத்து கொள்வதற்காக. இரவு பகல் பார்க்காமல் அனைவருமே கடுமையாக உழைகின்றார்கள் ஆனால் அவ்வாறு நாம் கடினமாக உழைத்த அனைத்து பணமும் நம்மிடம் நிரந்தரமாக நிலைப்பதில்லை என்பது தான் கசப்பான உண்மை. அதேபோல் நாம் செய்யும் தொழிலும் நமக்கு நல்ல லாபம் கிடைக்கும் திடிரென்று ஒரு காலகட்டத்தில் நமது தொழில் நஷடப்பட ஆரம்பிக்கும். இதனால் நமக்கு தேவையான பணத்தை நம்மால் சம்பாதிக்கவோ சேமிக்கவோ முடியாது. இப்படிப்பட்ட சூழலில் நாம் நாம் சில ஆன்மிக பரிகாரங்களை செய்து தான் நம்மை நாம் காப்பாற்றி கொள்ள முடியும் மற்றும் நமக்கு தேவையான பணத்தை சம்பாதிக்கவோ சேமிக்கவோ முடியும். அதனால் தான் இன்றைய பதிவில் வீடு மற்றும் தொழில் செய்யும் இடத்தில் பணவரவு ஏற்பட மிகவும் எளிமையான ஒரு பரிகாரத்தை பற்றி பார்க்க இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள பரிகாரத்தை செய்து பயன் பெறுங்கள்.

எப்பேர்ப்பட்ட கண்திருஷ்டியானாலும் இதை மட்டும் ஒருமுறை செய்யுங்க உடனடியாக நீங்கிடும்

Pana Varavu Athikarikka Tips in Tamil:

Pana Varavu Athikarikka Tips in Tamil

வீடு மற்றும் தொழில் செய்யும் இடத்தில் பணவரவு ஏற்பட வீட்டில் உள்ள ஒரு சில பொருட்களை வைத்து மிகவும் எளிமையான பரிகாரம் செய்வது எப்படி என்பதை பற்றி இங்கு காணலாம்.

முதலில் இந்த பரிகாரம் செய்வதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. பிரிஞ்சி இலை – 1
  2. சூடம் – 1
  3. அகல்விளக்கு – 1

வீட்டில் வைக்க இடம் இல்லாத அளவிற்கு பணவரவு அதிகரிக்க சீரகம் மட்டும் போதும்

பரிகாரம் செய்யும் முறை:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 பிரிஞ்சி இலையில் நமது தேவையை எழுதி கொள்ளுங்கள். பின்னர் அதனை உங்கள் வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடத்தில் பணம் வைக்கும் இடத்தில் வைத்து கொள்ளுங்கள்.

நீங்கள் எழுதி வைத்துள்ளது நிறைவேறும் வரை நீங்கள் இதேபோல் வார வாரம் எழுதி வைக்க வேண்டும். அதாவது ஒரு வாரம் எழுதியதை மறுவாரம் ஒரு அகல் விளக்கில் ஒரு சூடத்தை ஏற்றி அதில் அந்த இலையை போட்டு எரித்துவிட்டு ,அதன் பிறகு புதியதாக ஒன்றை எழுதி உங்கள் வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடத்தில் பணம் வைக்கும் இடத்தில் வைத்து கொள்ளுங்கள்.

பரிகாரம் செய்யும் நாள் மற்றும் நேரம்:

அதாவது இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமையில் பிரம்ம முகூர்த்த நேரமான 3 மணி முதல் 5.30 மணிக்குள் உள்ள நேரத்தில் செய்யுங்கள். அப்படி இல்லையென்றால் வெள்ளிக்கிழமை சுக்ர ஹோரை நேரமான 6 மணியில் முதல் 7 மணிக்குள் அல்லது , மதியம் 1 முதல் 2 மணிக்குள் உள்ள நேரத்தில் செய்யுங்கள்.

பணவரவு அதிகரிக்க 5 ரூபாய் நாணயம் மட்டும் போதும் 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement