பண வரவு வீடு தேடி வர வாசலில் இதை மறக்காமல் கட்டி வைய்யுங்கள் போதும்..!

Advertisement

Panam Sera Pariharam

அனைவருடைய வீட்டிலும் பண புழக்கம் என்பது இருக்கும். ஆனால் சிலரது வீட்டில் பணப் புழக்கம் இருந்தாலும் கூட பணம் வந்த இடம் தெரியாத அளவிற்கு செலவாகிவிடும். இவ்வாறு பணம் வந்த இடம் தெரியாமல் செலவாகி கொண்டே இருந்தால் ஏதோ திருஷ்டி இருப்பதாக நினைத்து நிலை வாசல் படியில் சில பொருட்களை கட்டி வைப்போம். அதுமட்டும் இல்லாமல் வீட்டில் சிலரது பார்வை படக்கூடாது என்று சில படங்கள் அல்லது பொருட்களை நிலை வாசலில் கட்டி வைப்பார்கள். இத்தகைய வரிசையில் ஒன்றாக இன்றைய பதிவில் வீட்டில் பண வரவு அதிகரித்து பணம் சேர நிலவாசலில் கட்டி வைத்து வழிபடக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

பண செல்வம் பெருக பரிகாரம்:

பணம் சேர

இந்த பரிகாரத்தை எப்போதும் குளித்து முடித்துவிட்டு தான் செய்ய வேண்டும். அதேபோல் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

  • வெள்ளெருக்கு குச்சி- 3
  • சிவப்பு நிற துணி- 1

மேலே சொல்லப்பட்டுள்ள இரண்டு பொருட்களையும் எடுத்து வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு குளித்து விட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டு கொள்ளுங்கள்.

இப்போது தரையில் ஒரு விரிப்பு போட்டு மேற்கு திசையினை நோக்கி அமர்ந்து கொள்ளுங்கள். அதன் பிறகு சிவப்பு நிற துணியினை விரித்து அதில் 3 வெள்ளெருக்கு குச்சியினை வைத்து கொள்ளுங்கள்.

ஓம் க்லாம் க்லீம் கம்
கணபதயே வரவரத மம
தன தான்ய சம்ருத்திம்
தேஹி தேஹி ஸ்வாஹா

அடுத்து மேலே சொல்லப்பட்டுள்ள மந்திரத்தை 108 முறை உச்சரித்து விட்டு சிவப்பு நிற துணியினை நன்றாக முடிச்சு போட்டு வீட்டில் நிலை வாசலின் மேலே கட்டி வைத்து விடுங்கள்.

மேலும் வருடத்திற்கு 1 முறை இந்த தாந்திரீக முட்டையினை மாற்றி விட வேண்டும்.

துளசி செடியுடன் இந்த ஒரு செடியை சேர்த்து வைத்தால் அள்ள அள்ள குறையாத செல்வம் வருமாம்..

தாந்திரீகம் செய்யும் நேரம்:

இந்த தாந்திரீகம் பரிகாரத்தை அதிகாலை 4:30 மணி முதல் 6 மணி வரை உள்ள பிரம்ம முகூர்த்த நேரத்தில் மட்டும் தான் இதை செய்ய வேண்டும்.

மேலும் இந்த தாந்திரீக பரிகாரத்தை அமாவாசை நாட்கள் அல்லது பௌர்ணமி நாட்களில் தான் இதை செய்ய வேண்டும்.

இத்தகைய தாந்திரீக செய்து முடித்த கையோடு பணம் வீட்டில் பெருகுவதற்கான முயற்சியினையும் தொடர்ந்து செய்வதன் மூலம் வீட்டில் பண வரவு அதிகரிக்க ஆரம்பித்து விடும்.

வீட்டில் செல்வம் சேர கல் உப்பை பயன்படுத்துங்க..

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement