அதிவேகத்தில் பணக்காரர் ஆக பச்சை கற்பூரத்தை இப்படி பயன்படுத்துங்கள்..!

Advertisement

Panam Sera Pachai Karpooram

இன்றைய ஆன்மிகம் பதிவில் பணக்கஷ்டம் நீங்கி பணம் பலமடங்கு அதிகரிப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் கையில் தங்குவதே இல்லை என்று பலரும் புலம்புகிறார்கள். இன்றைய நிலையில் அனைவருக்கும் இருக்க கூடிய பிரச்சனை தான் இது.

சம்பாதிக்கும் பணம் அனைத்தும் கடன் கொடுக்கவே சரியாக இருக்கிறது. பணம் சேர வேண்டும் என்பதற்காக எத்தனையோ பரிகாரங்கள் செய்தோம். ஆனால் அவை பலனளிக்கவில்லை என்று சொல்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

வீட்டில் பணவரவு பலமடங்கு அதிகரிக்க இதை மட்டும் செய்தால் போதும்..!

பணம் சேர பச்சை கற்பூரம்: 

பணம் சேர பச்சை கற்பூரம்

பணவரவு அதிகரிக்க வேண்டும், கடன் தொல்லை நீங்க வேண்டும் என்று சொல்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். பச்சை கற்பூரத்திற்கு பணத்தை ஈர்க்கும் சக்தி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

இந்த பரிகாரத்தை நீங்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் செய்ய வேண்டும்.

 இந்த பரிகாரத்தை நீங்கள் செவ்வாய் கிழமை செய்ய போகிறீர்கள் என்றால், அதற்கு முதல் நாளே ஒரு செம்பில் சுத்தமான தண்ணீர் ஊற்றி, அதில் 1/2 ஸ்பூன் அளவிற்கு சீரகம் மற்றும் 1/2 ஸ்பூன் அளவில் மஞ்சள்தூள் சேர்த்து கொள்ளவும். பின் அதில் ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை போட்டு உங்கள் வீடு பூஜை அறையில் வைத்து விடுங்கள்.  

இந்த தண்ணீரை மறுநாள் காலையில் அதாவது செவ்வாய் கிழமை அன்று காலையில் இந்த தண்ணீரை நீங்கள் வாசல் தெளிக்கும் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.

அதேபோல இந்த தண்ணீரை உங்கள் வீட்டில் இருக்கும் உள் பகுதிகளிலும் தெளிக்க வேண்டும்.

இதுபோல செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் செய்து வந்தால் உங்கள் வீட்டிற்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும். இதனால் வீட்டில் இருக்கும் கடன் தொல்லை நீங்கி பணவரவு அதிகரிக்கும்.

பச்சை கற்பூரத்தை உங்கள் வீட்டில் பணம் மற்றும் நகை வைக்கும் இடங்களில் வைக்க வேண்டும். இதனால் பணவரவு குறையாமல் இருக்கும். அதுபோல பணவரவு பலமடங்கு அதிகரிக்கும்.

வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க பீரோவில் இந்த பொருட்களை வைத்து பாருங்கள்..!

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement