Panam Sera Pariharam
பொதுவாக அனைவருடைய வீட்டிலும் பணக் கஷ்டம் என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதாவது நாம் சம்பாதிக்கும் பணத்தினை விட அதிகமான செலவுகள் வரும் போது கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இது தான் பெரும்பாலான நபர்களுக்கு கடன் வாங்குவதற்கான சூழலை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற சூழநிலைகளால் பணத்தினை கடனாக பெற்றாலும் கூட அதனை திருப்பி அளிப்பதற்கான சூழல் என்பது ஏற்படாமலே போய்விடுகிறது. மேலும் வீட்டிலும் பணம் தங்கவே இல்லை என்பதும் நிறைய நபர்களின் கவலையாக இருக்கிறது. அதனால் இன்றைய ஆன்மீக பதிவில் வீட்டில் பணம் மலைபோல் குவித்த தீராத கடனையும் தீர்ப்பதற்கான ஒரு பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பணம் சேர தாந்த்ரீக பரிகாரங்கள்:
இந்த நாணய தாந்த்ரீக பரிகாரத்தை செய்வதற்கு முதலில் தலை குளிக்க வேண்டும். அதேபோல் இந்த பரிகாரத்தை செய்யும் போது அசைவம் சாப்பிட கூடாது.
- ஏதேனும் நாணயங்கள்- 5
- பன்னீர்- 1 டம்ளர்
- சந்தனம் பவுடர்- 2 ஸ்பூன்
- துளசி இலை- 5
மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தினையும் சுத்தமான முறையில் பரிகாரம் செய்வதற்கு எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
பரிகாரம் செய்முறை:
நீங்கள் பரிகாரம் செய்வதற்கு முதல் நாளன்று டம்ளரில் எடுத்துவைத்துள்ள பன்னீருடன் சந்தன பவுடரை நன்றாக கரைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு டம்ளரில் உள்ள பொருளுடன் துளசி இலை மற்றும் நாணயங்களையும் அதில் போட்டு விட வேண்டும்.
இப்போது பரிகாரத்திற்கு தயார் செய்து வைத்துள்ள தாந்த்ரீகத்தை உங்களுடைய வீட்டில் உள்ள பூஜை அறையில் ஏதாவது ஒரு சாமி படத்திற்கு அருகில் வைத்து டம்ளரை மூடி விடுங்கள்.
மறுநாளன்று குளித்த விட்டு அதிகாலை 4 மணி முதல் 6 வரை அல்லது மாலை 6 மணி முதல் 8 மணிக்குள் விளக்கேற்றி வழிபட்டு விட்டு டம்ளரில் இருக்கும் துளசி இலையினை வெளியே எடுத்து உங்களுடைய வீட்டில் உள்ள மணி பர்சில் வைத்து விடுங்கள்.
அதன் பிறகு நாணயங்களை வெளியே எடுத்து உங்களுடைய வீட்டில் 5 வெவ்வேறு இடங்களில் யாரு கண்களுக்கும் படாதவாறு மறைத்து வைத்து விடுங்கள். பின்பு பன்னீரை வீட்டில் இருக்கும் பூச்செடிகளில் வைத்து விடுங்கள்.
மூன்று மாதம் வரை இந்த நாணயம் அப்படியே இருக்க வேண்டும். பின்பு அந்த நாணயத்தை எடுத்து கோவில் உண்டியலில் போட்டு விடுங்கள்.
எந்த கிழமையில் செய்வது:
நீங்கள் வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி நாட்களில் மட்டுமே இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.
இந்த தாந்த்ரீகத்தை செய்ததோடு மட்டும் இல்லாமல் வீட்டில் பணம் சேர்ந்து கடனை அடைப்பதற்கான முயற்சியினை தொடர்ந்து செய்து வந்தால் வீட்டில் பணம் சேர்ந்து கடன்கள் அடைந்து விடும்.
வீட்டில் பணக்கஷ்டம் நீங்கி செல்வ செழிப்போடு வாழ்வதற்கு ஏலக்காய் மட்டும் போதும்..
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |