கடன் தீர பணம் சேர பரிகாரம்
நமக்கு தேவையான பணத்தினை பிறரிடம் எப்படியாவது எடுத்து சொல்லி கடனாக வாங்கி விடலாம். அதுவே கொடுத்த கடனை திருப்பி கேட்கும் போது நம்மால் எந்த விதமான காரணமும் சொல்லி தட்டிக் கழிக்க முடியாது. ஏனென்றால் பணம் கொடுத்தவர்கள் இப்போது இல்லை என்றாலும் கூட எப்போதாவது கேட்க தான் செய்வார்கள். சரி கடன் வாங்குவதை திருப்பி கொடுப்பதில் மட்டும் இவ்வளவு சொல்கிறீர்களா அதற்கான ஒரு வலியை மட்டும் கூறுங்கள் பார்ப்போம் என்று நீங்கள் கேட்கலாம். அதனால் இன்று வீட்டில் கடன் பிரச்சனை தீர்ந்து பணம் சேர ஆன்மீகம் ரீதியாக என்ன பரிகாரம் எந்த நேரத்தில் எந்த கிழமையில் சொல்ல வேண்டும் என்பதை தான் பார்க்கப்போகிறோம்.
பணக்கஷ்டத்தையும் போக்கி பணவரவை அதிகரிக்க இந்த ஒரு வேர் போதும்
Panam Sera Sakkarai Pariharam:
வீட்டில் இருக்கும் எந்த விதமான கஷ்டமாக இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கி பணம் சேருவதற்கு செய்ய வேண்டிய சர்க்கரை பரிகாரத்தை விரிவாக கீழே பார்க்கலாம் வாங்க..!
முதலில் நீங்கள் பரிகாரம் செய்வதற்கு முன்பாக பூஜை அறையினை சுத்தம் செய்து விட்டு பின்பு குளித்து முடித்து விட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி கொள்ளுங்கள்.
- சர்க்கரை- 1 கைப்பிடி அளவு
- இலவங்கப்பட்டை- 5
- கண்ணாடி பாட்டில்- 1
அடுத்து எடுத்து வைத்துள்ள கண்ணாடி பாட்டிலில் சக்கரையை முழுவதுமாக நிரப்பி கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த சர்க்கரையின் மேலே இலவங்கப்பட்டையை செருகி வைத்து விடுங்கள்.
இதனை செய்து முடித்த பிறகு கண்ணாடி பாட்டிலை சமையல் அறையில் யாருடைய கையும் படாதவாறு மறைத்து விடுங்கள். பின்பு 1 மாதம் சர்க்கரையை காக்கைக்கு உணவாக அளித்து விடுங்கள். மேலும் இலவங்கப்பட்டையை யாருடைய காலிலும் படாத இடத்தில் போட்டு விடுங்கள்.
பரிகாரம் செய்யும் கிழமை:
இந்த சர்க்கரை பரிகாரத்தை வெள்ளிக்கிழமையில் செய்யுங்கள். மேலும் காலை 6 TO 7 மணி அல்லது மதியம் 12 TO 1 மணி இந்த இரண்டு நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தில் செய்யுங்கள்.
இத்தகைய பரிகாரத்தை செய்து முடித்து விட்டு கடன் தீர்ந்து பணம் சேருவதற்கான முயற்சியினையும் விடாமல் செய்து வருவதன் மூலம் கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்கும்.
அக்டோபர் 14 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு கைமேல் பலன் கிடைக்கப்போகிறது.
என்றும் வற்றாத பண வரவிற்கு 1 கைப்பிடி மிளகை இந்த இடத்தில் வையுங்கள்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |