Panam Sera Sarkari Pariharam
இந்த உலகத்தில் பல விதமான பொருட்கள் இருந்தாலும் கூட பணத்திற்கு என்று ஒரு தனி முக்கியத்துவம் இருக்கிறது. ஏனென்றால் பணத்தினை தேவையும், அதற்கு ஏற்றவாறு செலவுகளும் அதிகரித்து கொண்டே போவதும் தான் இதற்கு காரணமாக உள்ளது. இத்தகைய நிலை காணப்படுவதனால் வழக்கமாக நமக்கு தேவைப்படும் பண வரவினை கூடுதலாக தற்போது தேவைப்படுகிறது. இவ்வாறு பண வரவு அதிகரிக்க வேண்டும் என்றால் காருக்கு என்று ஆன்மீகத்தில் சில பரிகாரங்கள் உள்ளது. அதாவது பெண்கள் வீட்டில் செல்வம் பெருக வேண்டும் என்று நினைப்பார்கள். இவ்வாறு நினைக்கும் பட்சத்தில் சமையல் அறையில் நாம் பயன்படுத்தும் ஒரு பொருளான சர்க்கரையினை வைத்து எப்படி பரிகாரம் செய்வது என்று பார்க்கலாம் வாங்க..!
வீட்டில் சர்க்கரை பரிகாரம்:
சர்க்கரை என்பது இனிப்பு சுவையினை உடைய ஒரு பொருளாக இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் சுக்கிர பகவானுக்கு இனிப்பு சுவை என்பது மிகந்த ஒன்றாக கருதப்படுகிறது.
அதனால் இத்தகைய சர்க்கரையுடன் பண வரவை ஈர்க்கும் இலவங்கப்பட்டையை சேர்த்து பரிகாரம் செய்வது என்று விரிவாக பார்க்கலாம் வாங்க..!
- சர்க்கரை- 3 கைப்பிடி அளவு
- இலவங்கப்பட்டை- 3
இப்போது ஒரு கிண்ணம் அல்லது கண்ணாடி பவுலில் 3 கைப்பிடி அளவு சர்க்கரையினை சேர்த்து அதில் 3 இலவங்கப்பட்டியினை சேர்த்து பூஜை அறையில் வைத்து விடுங்கள்.
தீராத கடன் பிரச்சனையும் தீர்ந்து போக செய்ய வேண்டிய கொள்ளு பரிகாரம்.
சர்க்கரை பரிகாரத்தை செய்து முடித்த கையோடு இந்த கிண்ணத்தினை சமையல் அறையில் யார் கண்களுக்கும் படாதவாறு ஒரு மூலையில் வைத்து விடுங்கள்.
மேலும் பூஜை செய்து சரியாக 1 மாதம் கழித்த பிறகு இந்த சர்க்கரை மற்றும் இலவங்கப்பட்டையினை நீர் நிலைகளில் அல்லது பூச்செடிகளில் ஊற்றி விடுங்கள். பின்பு இதே மாதிரி அடுத்த 1 மாதம் கழித்து செய்யுங்கள்.
பரிகாரம் செய்யும் நேரம்:
இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று காலை 6 முதல் 7 மணி வரை அல்லது மாலை இரவு 8 முதல் 9 மணி வரை என எப்போது வேண்டுமானாலும் செய்யுங்கள்.
இவ்வாறு பரிகாரம் செய்த முடித்த பிறகு பண வரவு அதிகரிப்பதற்கான முயற்சினையும் விடாமல் செய்து வருவதன் மூலம் விரைவில் பண வரவு ஏற்படும்.
செல்வ செழிப்பை அதிகரிக்க பச்சை கற்பூரத்தை இப்படி பயன்படுத்தினால் போதும்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |