Panam Sera Valigal
பெரும்பாலான வீடுகளில் பணவரவு என்பதே இருக்காது. சம்பாதிக்கும் அனைத்து பணமும் போன இடம் தெரியாமல் போய்விடும். பொதுவாக வீட்டில் எப்போதும் வறுமை நிலை நீடித்தால் நாம் பணத்தை ஈர்க்கும் சில பரிகாரங்களை வீட்டில் செய்து வர வேண்டும். அப்போதுதான் வீட்டில் பணவரவு அதிகரித்து வீட்டில் செல்வ செழிப்பு உண்டாகும். எனவே பணத்தை ஈர்க்கக்கூடிய நம் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து எப்படி வீட்டில் பணவரவை அதிகரிப்பது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Pana Varavu Pariharam:
பரிகாரம் செய்ய தேவையான பொருட்கள்:
- பச்சை கற்பூரம் – 3 துண்டு
- கிராம்பு – 3
- ஏலக்காய் – 3
- மஞ்சள் துணி அல்லது மஞ்சள் நூல்
முதலில் மஞ்சள் துணி அல்லது மஞ்சள் நூலை எடுத்து கொள்ளுங்கள்.
இதில் பச்சை கற்பூரம், கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து ஒரு முடிச்சாக கட்டி கொள்ளுங்கள்.
வைக்கும் இடங்கள்:
பீரோ அலல்து பணம் வைக்கும் இடம்:
இந்த முடிச்சியினை வீட்டின் பீரோ அல்லது பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் அதிக பணத்தை ஈர்த்து கொடுக்கும். இதனால் உங்கள் பணப்பெட்டியில் அதிக பணம் சேரும்.
தொழில் செய்யும் இடம்:
இந்த முடிச்சியினை தொழில் செய்யும் இடத்தில் உள்ள கல்லா பெட்டியில் வைப்பதன் மூலம் உங்களின் வருமானம் அதிகரித்து காணப்படும்.
நகைப்பெட்டி:
இந்த முடிச்சியினை உங்கள் வீட்டின் பணப்பெட்டியில் வைப்பதன் மூலம் உங்களுக்கு தங்கநகை வாங்குவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
பிரச்சனை எதுவாக இருந்தாலும் இந்த பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள்.. எளிதில் பிரச்சனை நீங்கிவிடும்..!
இதுதவிர பணவரவு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்.?
வீட்டில் நேர்மறை சக்திகள் அதிகரித்தாலே வீட்டில் பணவரவு அதிகரிக்கும்.
நேர்மறை சக்தி அதிகரிக்க வேண்டுமென்றால், வீட்டில் நல்ல சொற்களையே பேச வேண்டும்.. அசுப சொற்கள் பேசுவதை தவிர்க்க வேண்டும்.
வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கக்கூடிய பொருட்களை வைத்து பரிகாரம் செய்வதோடு நேர்மறை எண்ணங்களையும் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகி செல்வ செழிப்பு உண்டாகும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |