Panam Sera Pariharam
இன்றைய ஆன்மீகம் பதிவில் வீட்டில் பணம் சேருவதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். பணக்கஷ்டம் மற்றும் கடன் தொல்லை அனைவருக்குமே இருக்கும். வீட்டு செலவு, குழந்தைகளின் படிப்பு செலவு, மருத்துவ செலவு என்று மக்கள் பல கடன்கள் வாங்குகிறார்கள். அதுபோல சிலர் எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் வீட்டில் தங்குவதே இல்லை என்று பலரும் புலம்புகிறார்கள். அதனால் பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று பல பரிகாரங்களை செய்து வருகிறார்கள். பரிகாரங்கள் செய்து பலனில்லை என்று சொல்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
ஏழைகளை பணக்காரர்களாக மாற்றும் வசம்பு பரிகாரம் |
Panam Sera Vasambu Pariharam in Tamil:
வீட்டில் பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று பலரும் விரும்புவோம். பணம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்ற காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இன்றைய நிலையில் பணம் தான் எல்லாமாகவும் இருக்கிறது. அந்த வகையில் பணவரவை அதிகரிக்க செய்வதற்கு வசம்பு மட்டும் போதும்.
வசம்பு தெய்வீக அம்சமாக பார்க்கப்படுகிறது. வசம்பு ஒரு சிறந்த மருத்துவ பொருளாகவும் பார்க்கப்படுகிறது. வசம்பை வைத்து பல பரிகாரம் செய்வார்கள். வசம்பு பல சக்திகளை கொண்டுள்ளது என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.
அதாவது வசம்பு இருக்கும் வீட்டில் எந்தவொரு கெட்ட சக்தியும் நெருங்காது என்றும் கூறுவார்கள். கெட்ட கனவுகள் வருகிறது என்று சொல்பவர்கள் இந்த வசம்பை தலையணைக்கு கீழ் வைத்து தூங்குவது நல்ல பலனளிக்கும் என்று சொல்லப்படுகிறது.
வற்றாத பண வரவிற்கு கல் உப்பு மந்திரம் |
இப்படி எல்லாவற்றிலும் சிறந்த வசம்பு பணத்தை ஈர்க்கும் தன்மையை கொண்டுள்ளது. இந்த வசம்பை நீங்கள் உங்கள் வீட்டில் இந்த 3 இடங்களில் வைத்து பாருங்கள். கடன் பிரச்சனை அனைத்தும் நீங்கி விடும். பணவரவு பலமடங்கு அதிகரிக்கும்.
- பச்சை நிற துணியை எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் 9 வசம்பை மட்டும் வைத்து கட்டி உங்கள் வீட்டின் நிலவாசல் மேல் கட்டி தொங்க விட வேண்டும். இதுபோல செய்வதால் கடன் தொல்லை நீங்கி பணவரவு பலமடங்கு அதிகரிக்கும்.
- இரண்டாவதாக நீங்கள் பணம் வைக்கும் இடம் மற்றும் நகை வைக்கும் இடத்தில் 2 துண்டு வசம்பை வைக்க வேண்டும். இதுபோல வைப்பதால் வீட்டில் பணவரவு அதிகரிக்க தொடங்கும்.
- ஒரு கண்ணாடி அல்லது சில்வர் பாக்ஸ் எடுத்து கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை எடுத்து போட வேண்டும். பின் அதில் 9 நாணயங்களை போட வேண்டும். அதன் பிறகு இந்த பாக்சில் 2 துண்டு வசம்பை வைக்க வேண்டும். பின் இந்த பாக்ஸை நன்றாக மூடி சமையலறையில் உப்பு வைக்கும் இடத்திற்கு பக்கத்தில் வைக்க வேண்டும். இதுபோல செய்வதால் உங்கள் வீட்டில் பணவரவு அதிகரிக்க தொடங்கும். கடன் தொல்லை நீங்கும்.
உங்கள் வீட்டில் செல்வம் பெறுக வெள்ளிக்கிழமை கல் உப்பு வாங்கினால் போதும்..! |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |