Panam Tharum Pathigam in Tamil
இவ்வுலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே இருக்க கூடிய மிகப்பெரிய மற்றும் முக்கிய தேவை என்றால், அது பணத்தேவை தான். பணத்திற்காக இவ்வுலகில் மனிதர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். காரணம் பணம் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.
முன்பெல்லாம் உயிர் வாழ்வதற்கு முக்கிய தேவை எது என்றால், உணவு, நீர், காற்று என்று சொல்வார்கள். ஆனால் இன்றைய சூழலில் அந்த உணவையும் நீரையும் நாம் காசு கொடுத்து தான் வாங்குகிறோம். அந்த அளவிற்கு பணத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதனால் இப்பதிவின் வாயிலாக அல்ல அல்ல குறையாத பணத்தை பெற்று தரும் பணம் தரும் பதிகம் பற்றி பார்க்கலாம் வாங்க.
வீட்டில் எண்ணிப்பார்க்க முடியாத அளவு பணம் சேர வேண்டுமா ? ஒரு கைப்பிடி உப்பு இருந்தால் மட்டும் போதும்
பணம் தரும் பதிகம்:
பொதுவாக பணம் தான் மனிதனின் வாழ்க்கையாகவே இருக்கிறது. அதனால் பணத்தை சேர்க்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதங்களில் செயல்படுகிறார்கள். ஆகவே இப்பதிவில் கூறியுள்ள பதிகத்தை நீங்கள் படித்து வந்தாலே உங்கள் வீட்டில் பணம் குறையாமல் சேர்ந்து கொண்டே இருக்கும்.
ஆகவே தினமும் குளித்து விட்டு திருநீறு பூசிக்கொண்டு சிவபெருமானை நினைத்து கீழே உள்ள பதிகத்தை சொல்லுங்கள்.
இந்த பதிகத்தை அருளியவர் திருஞானசம்பந்தர் ஆவார். அவர் சிவ பெருமானை நோக்கி இந்த பதிகத்தை பாடிய போது அவருக்கு சிவபெருமான், ஆயிரம் பொன் கொண்ட ஒரு பாத்திரத்தை கொடுத்தாராம். அதுமட்டுமில்லாமல், அந்த பாத்திரத்தில் உள்ள பொற்காசுகளை எவ்வளவு எடுத்தாலும் அதில் இருக்கும் பொற்காசுகள் குறையவே குறையாது என்று அருளினார். ஆகவே இந்த பதிகத்தை நாம் தினமும் துதித்து வந்தால் நம் வீட்டிலும் பணம் குறையவே குறையாது.
வீட்டில் பணம் சேர மண் சட்டியை இவ்வாறு பயன்படுத்துங்கள் போதும்..
இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உன்கழல் தொழு தெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கி வேதியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனேவாழினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உன்கழல் விடுவேன் அல்லேன்
தாழிளம் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனேநனவினும் கனவினும் நம்பா உன்னை
மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்
புனல்விரி நறுங் கொன்றப் போதணிந்த
கனலெரி அனல்புல்கு கையவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடு துறை அரனே
தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றாதென் நா
கைம்மல்கு வரிசிலைகி கனை ஒன்றினால்
மும்மதில் எரிஎழ முனிந்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்றெமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனேகையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன்
கொய்யணி நறுமலர் குலாய சென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனேவெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய் உன்னடியலால் ஏத்தாதென் நா
ஐந்தலை அரவு கொண்டு அரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் அடியலால் அரற்றாதென் நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படிஅழல் எழ விழித்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடு துறை அரனே.பேரிடர் பெருகியோர் பிணிவரினும்
சீருடைக் கழலலால் சிந்தை செய்யேன்
ஏருடை மணிமுடி யிராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன் றெமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனேஉண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண்மலர் அடியலால் உரையாதென் நா
கண்ணனும் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன் றாமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே.
பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தா உன்னடி யலால் அரற்றாதென் நா
புத்தரும் சமணரும் புறன் உரைக்கப்
பத்தர்பட் கருள்செய்து பயின்றவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன் றெமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனேஅலைபுனல் ஆவடுதுறை அமர்ந்த
இலைநனை வேற்படை எம்மிறையை
நலமிகு ஞான சம்பந்தன் சொன்ன
விலையுடை அருந் தமிழ் மாலைவல்லார்
வினையாயின நீங்கிப் போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாக முன்னேறுவர் நிலமிசை நிலையிலரே.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |