Panam Vara Enna Seiya Vendum Tamil
பொதுவாக நமக்கு தேவையான பணமோ அல்லது நகையோ வேண்டும் என்றால் அதற்கு கண்டிப்பாக உழைப்பு என்பது இருக்க வேண்டும். ஏனென்றால் நாம் உழைப்பதினால் வரும் பணத்தை வைத்து மட்டுமே இத்தகைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். அந்த வகையில் சிலர் பணம் பெருக வேண்டும் என்பதற்கான கடினமாக உழைப்பார்கள். ஆனால் அவர்கள் சம்பாதிக்கும் பணமானது எப்படி தான் எந்த பக்கம் செல்கிறது என்று தெரிந்துக்கொள்ள முடியாத அளவில் பணம் செலவாகிவிடும். இவ்வாறு தொடர்ச்சியாக செலவாகி கொண்டே இருந்தால் நமக்கு தேவைப்படும் போது தக்க நேரத்தில் பணம் கிடைக்காமல் போய் விடலாம். ஆகவே இன்று ஆன்மீகத்தில் உள்ள ஒரு பரிகாரத்தை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். அதாவது வீட்டில் உள்ள கஷ்டங்கள் நீங்கி பணம் சேர என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
பணம் சேர என்ன செய்ய வேண்டும்:
வெந்தயத்தில் எண்ணற்ற சத்துக்கள் இருப்பதனால் அதனை ஆரோக்கியம் ரீதியாக பல வகையாக பயன்படுத்தி கொள்வார்கள். ஆரோக்கியத்தில் வெந்தயத்தில் எவ்வளவு முக்கியதுவம் உள்ளதோ அதே அளவில் ஆன்மீகத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.
அதாவது வீட்டில் உள்ள கஷ்டங்கள் நீங்கி பணம் சேர வெந்தயத்தை வைத்து பரிகாரம் செய்யலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- வெந்தயம்- கைப்பிடி அளவு
- வெள்ளி நாணயம்- 1
- பச்சைநிற நிற துணி
- பச்சை நிற நூல்
பரிகாரம் செய்யும் முறை:

முதலில் நீங்கள் பச்சை நிற துணியை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த துணியில் எடுத்துவைத்துள்ள பொருட்கள் அனைத்தினையும் சேர்த்து பச்சை நிற நூலினால் கட்டி கொள்ள வேண்டும்.
இப்போது அந்த முடிச்சினை ஒரு கிண்ணத்தில் வைத்து உங்களது வீட்டில் உள்ள பூஜை அறையிலோ அல்லது மற்றவர்கள் கண்களில் படாதவாறும் பார்த்துகொள்ளங்கள்.
மேலும் இந்த பரிகாரத்தை புதன் கிழமையில் மட்டுமே செய்ய வேண்டும். எனவே இந்த பரிகாரத்தை செய்து முடித்த கையோடு வீட்டில் பண வரவு அதிகரிப்பதற்கான முயற்சியினையும் தொடர்ந்து செய்து வருவதினால் பணம் சேர ஆரம்பிக்கும்.
கடன் பிரச்சனை தீர வெற்றிலை மட்டும் போதும்..
| இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |










