பங்காளிகள் தீட்டு | Pangali Thettu
அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக பங்காளி தீட்டு எத்தனை நாள் என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப்போகின்றோம். ஆனால் பங்காளி தீட்டு எத்தனை நாள் என்பதை பார்ப்பதற்கு முன்னர் யார் இந்த பங்காளிகள், அவர்களால் நமக்கு ஏன் தீட்டு என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த பதிவு எதற்காக உருவாக்கப்பட்டதென்றால் மக்கள் சில விஷயங்களில் குழம்பியதுண்டு. அதில் ஒரு விஷயம் தான் இந்த Pangali Thettu, ஆகவே நீங்கள் இந்த தகவலை பெற விரும்புகிறீர்கள் என்றால் இந்த பதிவை முழுவதுமாக பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
பங்காளி என்றால் என்ன | பங்காளிகள் யார்
பொதுவாக பங்காளிகள் என்றால் ஏழு தலைமுறையில் இருந்து வரும் ஆண் வாரிசுகளே பங்காளிகள் என்பார்கள். அந்த ஆண் வாரிசுகள் இவர்களே மகன், பேரன், கொள்ளு பேரன், எள்ளு பேரன் அந்த எள்ளு பேரனுடைய மகன் மற்றும் அவருடைய மகன் ஆவர்.
எந்த ஒரு காரியமாக இருந்தாலும் சரி பிறப்போ/ இறப்போ அந்த தீட்டு இந்த ஏழு தலைமுறை ஆண் வாரிசுகளுக்கும் இது பொருந்தும்.
தீட்டின் விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா!
தீட்டு நாட்கள்
தீட்டு என்பது மூன்று நிகழ்வுகளுக்கு நடக்கும்
- இறப்பு தீட்டு
- குழந்தை பிறப்பு தீட்டு
- பங்காளிகளின் மகள் பூப்படையும் தீட்டு
இந்த தீட்டு ஏழு தலைமுறைகளுக்கும் வரும் ஆண் வாரிசுகளுக்கு பொருந்தும், ஒவ்வொரு தீட்டிருக்கும் ஒவ்வொரு நாள் குறிப்பு சொல்வார்கள். அவற்றை எல்லாம் கீழே பார்த்து தெரிந்து கொள்வோம்.
பங்காளி இறந்தால் எத்தனை நாள் தீட்டு
சிலர் பங்காளி இறந்தால் எத்தனை நாள் தீட்டு என்று தேடி வருகின்றார்கள், அதற்கான பதில் இங்கே..
உங்கள் பங்காளி வீட்டில் யாரெனும் இறந்து விட்டார்கள் என்றால் அதற்கு நாம் 30 நாட்கள் தீட்டு கடைபிடிக்க வேண்டும். இந்த 30 நாட்களும் நீங்கள் அவர்களிடம் touch-ல் இருக்கிறீர்கள் என்றால் இதனை கடைபிடிக்கலாம். அப்படி இல்லையென்றால் 16 நாட்கள் இருந்தால் போதும்.
நீங்கள் அவர்கள் இறந்ததற்கு போகவில்லை வெறும் வாய்வழி செய்தி தான் கேள்விப்பட்டீர்கள் என்றாலும் நீங்கள் 16 நாள் தீட்டு கடைபிடிக்க வேண்டும்.
குழந்தை பிறப்பு தீட்டு
உங்கள் பங்காளிகள் வீட்டில் குழந்தை பிறந்தாள் அதற்கும் நீங்கள் தீட்டு கடைபிடிக்க வேண்டும்.
குழந்தை பிறப்பு தீட்டு 16 நாட்களாகும்.
பெண்கள் பூப்படையும் தீட்டு
பெண்கள் பூப்படைந்து விட்டால் அந்த ஏழு தலைமுறை ஆண் வாரிசுகள் 11 நாட்கள் தீட்டு கடைபிடிக்க வேண்டும்.
இந்த மாதிரி நாம் தீட்டு கடைபிடிக்கும் போது கோவில்களுக்கு செல்ல கூடாது, குலதெய்வ கோவில்களுக்கு செல்ல கூடாது, வீடுகளில் சாம்பிராணி போட்டு பூஜை செய்வது, அபிஷேகம் செய்வது இப்படி ஏதும் செய்ய கூடாது.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |