Panguni Uthiram Mantra in Tamil
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நாம் பங்குனி உத்திரம் அன்று சொல்லவேண்டிய மந்திரம் பற்றி பார்க்கலாம் வாங்க. பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தில் பங்குனி உத்திரம் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்நாளில், முருகன் கோவில்கள் மற்றும் சிவன் கோவில்களில் சிறப்பு ஆராதனை நடைபெறும்.
பங்குனி உத்திரம் அன்று முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக இருக்கிறது. அன்றைய தினத்தில் கோவிலில் நடக்கும் அபிஷேகத்திற்கு பொருட்கள் வாங்கி கொடுத்து வழிப்படுவதன் மூலம், நற்பலன்களை பெறலாம். ஓகே வாருங்கள், பங்குனி உத்திரம் அன்று சொல்ல வேண்டிய மந்திரம் என்ன என்பதை இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம்.
பங்குனி உத்திரம் மந்திரம்:

பங்குனி உத்திரம் அன்று முருகனுக்கு உகந்த மந்திரமான ஓம் சரவணபவ என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். மேலும், கிழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தையும் பங்குனி உத்திரம் அன்று உச்சரிக்க வேண்டும்.
படிக்கின்றிலை பழநித் திருநாமம், படிப்பவர் தான்
முடிக்கின்றிலை முருகா என்கிலை, முசியாமல் இட்டு
மிடிக்கின்றிலை, பரமானந்தம் மேற்கொள், விம்மி விம்மி
நவிக்கின்றிலை, நெஞ்சமே தஞ்சம் ஏதுநமக்கு இனியே!
இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் அனைத்து சுப காரியங்களும் கைகூடும். உடல் நலம் நன்றாக இருக்கும். நினைத்தது நடக்கும். பங்குனி உத்திரம் அன்று தான் பெரும்பாலான தெய்வங்களுக்கு திருமணம் நடந்தது என்று புராண கதைகள் கூறுகிறது. அதாவது, சிவன்- பார்வதி, ராமர்- சீதைக்கும் மற்றும் முருகன் – தெய்வானைக்கும், பெருமாள் –மகாலட்சுமிக்கும் திருமணம் நடந்தது.
இந்நாளில், முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து, முருகப்பெருமானுக்கு உகந்த நெய் வேத்தியங்களை படைத்து, திருமுருகாற்றுப்படை மற்றும் கந்த சஷ்டி கவசம் போன்ற பதிகங்களை படித்து வழிபடுவதன் மூலம், நற்பலன்களை பெறலாம். முக்கியமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். பெண்கள், இன்றைய தினத்தில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம், மனதில் நினைத்தவர்களை திருமணம் செய்து கொள்ளலாம்.
பொதுவாக, பௌர்ணமி நாளில் இறைவனை வழிபடுவதன் மூலம் நற்பலன்களை பெறலாம். அதிலும், பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் இறைவனை வழிபடும்போது, இன்னும் அதிகமான பலன்களை பெறலாம்.
திருமணஞ்சேரி மந்திரம்:
பங்குனி உத்திரம் என்றாலே திருமண தடைகள் ஏதும் இருந்தால் அவை நீங்கி திருமண வரன் அமையும். இந்த நாளில் விரதம் இருந்து வழிபடுபவர்கள் திருமணஞ்சேரி சென்று பதிகத்தை பாடி பூஜை செய்தால் சிவனின் அருளால் திருமணம் கைகூடி வரும். திருமண பரிகார கோவில்களில் முக்கியமாக இருப்பது திருமணஞ்சேரி. இந்த தளத்தில் தினமும் சிவபெருமானுக்கும், அம்பாளுக்கும் திருமணம் நடைபெறும். இந்த திருமணத்தில் கலந்து கொண்டாலே திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் ஆண்களுக்கு திருமணம் நடக்கும்.
அயிலாரும் அம்பதனாற்புர மூன்றெய்து
குயிலாரும் மென்மொழியாளொரு கூறாகி
மயிலாரும் மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றிநின்ற றார்க்கில்லை பாவமே.
2. விதியானை விண்ணவர் தாந்தொழு தேத்திய
நெதியானை நீள்சடை மேல்நிகழ் வித்தவான்
மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்
பதியானைப் பாடவல்லார்வினை பாறுமே.
3.எய்ப்பானார்க் கின்புறு தேனளித் தூறிய
இப்பாலா யெனையும் ஆள வுரியானை
வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
மெய்ப்பானை மேவிநின்றார்வினை வீடுமே.
4. விடையானை மேலுலகேழுமிப் பாரெலாம்
உடையானை ஊழிதோறூழி உளதாய
படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி
அடைவானை யடையவல்லார்க்கில்லை யல்லலே.
5. எறியார்பூங் கொன்றையினோடும் இளமத்தம்
வெறியாருஞ் செஞ்சடையார் மிலைத்தானை
மறியாருங் கையுடையானை மணஞ்சேரிச்
செறிவானைச் செப்பவல்லார்க் கிடம் சேராவே.
6. மொழியானை முன்னொரு நான்மறை யாறங்கம்
பழியாமைப் பண்ணிமையான பகர்வானை
வழியானை வானவரேத்து மணஞ்சேரி
இழியாமை யேத்தவல்லார்க்கெய்தும் இன்பமே.
எண்ணானை யெண்ணமர் சீரிமை யோர்கட்குக்
கண்ணானைக் கண்ணொரு மூன்று முடையானை
மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப்
பெண்ணானைப் பேசநின்றார்பெரி யோர்களே.
8. எடுத்தானை யெழில்முடியெட்டும் இரண்டுந்தோள்
கெடுத்தானைக் கேடிலாச் செம்மை யுடையானை
மடுத்தார வண்டிசை பாடும் மணஞ்சேரி
பிடித்தாரப் பேணவல்லார்பெரியோர்களே.
9. சொல்லானைத் தோற்றங்கண்டானும் நெடுமாலும்
கல்லானைக் கற்றன சொல்லித் தொழுதோங்க
வல்லார்நன் மாதவரேத்தும் மணஞ்சேரி
எல்லாமாம் எம்பெருமான் ஏத்துமே.
10. சற்றேயுந் தாமறிவில்சமண் சாக்கியர்
சொற்றேயும் வண்ணமொர் செம்மை யுடையானை
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி
பற்றாக வாழ்பவர் மேல்வினை பற்றாவே.
11.கண்ணாருங் காழியர் கோன்கருத் தார்வித்த
தண்ணார்சீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை
மண்ணாரும் மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி
பண்ணாரப் பாடவல்லார்க்கில்லை பாவமே.
பங்குனி உத்திரம் அன்று நினைத்து நடக்க இந்த விரதத்தை கடைபிடிக்கவும்..!
| இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |












