பாஞ்சராத்திர தீபம் என்றால் என்ன..! | Panjarathra Deepam Endral Enna In Tamil..!
கார்த்திகை மாதம் என்றாலே விஷேஷம் தான், கார்த்திகை மாதத்தன்று நாம் கார்த்திகை தீபத்தை வெகு சிறப்பாக கொண்டாடுவோம். ஏன்னென்றால் நம் அனைவரும் ஒன்று கூடி வீடு வாசல்களில் இருந்து சாமி அரை வரை விளக்கு ஏற்றி வழிபடுவோம். மூன்று நாள் தொடர்ந்து விளக்கு ஏற்றுவோம் முதல் நாள் பரணி தீபம், இரண்டாம் நாள் கார்த்திகை தீபம், மூன்றாம் நாள் பௌர்ணமி அன்று பாஞ்சராத்திர தீபம் கொண்டாடுவோம்.
மூன்றாம் நாள் கொண்டாடும் பாஞ்சராத்திர தீபம் என்றால் என்ன அதை எதற்காக கொண்டாடுகிறோம் என்பதை பற்றி தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள். பாஞ்சராத்திர தீபம் என்றால் என்ன அதை எப்படி கொண்டாடவேண்டும் என்ற முறையை தெரிந்த பிறகு. உங்கள் நண்பர்களுக்கும் அதை பற்றி சொல்லி கொடுங்கள்.
பரணி தீபம் வரலாறு In Tamil | Barani Deepam History In Tamil
பாஞ்சராத்திர தீபம் என்றால் என்ன?
கார்த்திகை மாதம் என்றாலே மிகவும் சிறப்பு வாய்ந்தது தான் அதுவும் கார்த்திகை மாத பௌர்ணமி இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி வருகிறது. மகா விஷ்ணு ஜோதி வடிவமாக தோன்றி உலகத்தை காத்த தினத்தை தான் விஷ்ணு கார்த்திகை என்று கொண்டாடுகிறோம். இந்த நாளில் ஏற்றப்படும் தீபத்திற்கு ஸ்ரீ பாஞ்சராத்திர தீபம் என்றும் கூறுவார்கள். கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்துக்கு முந்தைய நாள் பரணி தீபம், இரண்டாம் நாள் திருக்கார்த்திகை தீபம், மூன்றாம் நாள் பௌர்ணமி திதி கார்த்திகை நட்சத்திரம் அன்று பாஞ்சராத்திர தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.
பாஞ்சராத்திர தீபம் வரலாறு:
பாஞ்சராத்திர தீபம் என்பது பகவான் விஷ்ணுக்காக ஏற்றப்படும் தீபம் என்று கூறுவார்கள். ஒருமுறை பிரமன் கலைமகளுக்கு தெரியாமல் யாகம் ஒன்று நடத்திகிறார். இதை அறிந்த கலைமகள் எனக்கு தெரியாமல் என் கணவன் யாகம் நடத்துகிறார் என்று கோபம் கொள்கிறாள். பெரும்பாலும் கலைமகளுக்கு கோபம் வராது என்று கூறுவார்கள். ஆனால் அன்றைக்கு எனக்கு தெரியாமல் என் கணவன் யாகம் வளர்க்கிறார் எதற்காக இந்த யாகத்தை வளர்க்கிறார் என்று மிகவும் சினம் கொண்டு ஒரு அரக்கனை அவளோடு சக்தியினால் உருவாக்கி அந்த அரக்கனை ஏவி விடுகிறாள்.
அந்த அரக்கன் உலகை இருள் சூழ வைக்குறான், உலகம் முழுதும் இருள் சூழ்ந்ததால் பிரம்மனால் யாகம் நடத்த முடியவில்லை. அப்பொழுது பிரமதேவன் வருத்தம் அடைந்து சிவனிடம் உதவி கேட்கலாம் என்று என்னும் பொழுது சிவபெருமான் வேறொரு தவத்தில் இருக்கிறார். உடனே பிரமதேவன் நாம் சிவபெருமான் தவத்தை இடையூறு ஏற்படுத்த கூடாது என்று யோசிக்கும் பொழுது விஷ்ணுவும் அங்கு இருக்கிறார் பிரமன் விஷ்ணுவிடம் உதவி கேட்கிறார்.
அப்பொழுது காக்கும் கடவுளான விஷ்ணு ஜோதி எடுத்து ஜோதியாக மாறி உலகத்துக்கு வெளிச்சம் அளிக்கிறார். கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று தான் இந்த விஷேஷம் நடந்தது என்பதால் இதை போற்றும் வகையில் கார்த்திகை மாத பௌர்ணமி அன்று வைணவ கோவில்களில் பாஞ்சராத்திர தீபம் கொண்டாடுகிறோம்.
இந்த பாஞ்சராத்திர தீபம் பகவான் விஷ்ணுவுக்கு நன்றி செலுத்தும் விதமாக அந்நிகழ்வை நினைவூட்டும் விதமா கொண்டாடப்படுகிறது.
பாஞ்சராத்திர தீபம் ஏற்றும் முறை:
கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று கொண்டாடப்படும் இந்த பாஞ்சராத்திர தீபம், உங்கள் வீடுகளில் மாலை 6 மணிக்கு பூஜை அறையில் 5 விளக்குகள் ஏற்ற வேண்டும். 5 விளக்குகள் என்ன அடிப்படையில் என்றால் ஐம்பூதங்களும் இந்த அண்டத்தையும் பிண்டத்தையும் ஆளுகின்றன என்பதை உணர்த்துகிறது. குறைந்தது 5 விளக்குகள் ஏற்ற வேண்டும் அதற்கு பிறகு எத்தனை விளக்கு வேண்டுமானாலும் ஏற்றலாம்.
வீடுகளில் மட்டுமில்லாமல் நாம் பெருமாள் கோவில்களுக்கும் சென்று 5 விளக்குகள் ஏற்றினால் நமக்கு நற்பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
5 விளக்குகள் ஏற்றிய பிறகு விஷ்ணு பரமாத்மாவை வழிபாடு செய்ய வேண்டும். இதனால் உங்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும்.
கார்த்திகை தீபம் வரலாறு | Karthigai Deepam History in Tamil
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |