வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வது ஏன் தெரியுமா?

Updated On: September 23, 2025 11:43 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

 

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாமாங்கம் செய்வது  ஏன்?

இன்றைய பதிவில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏன் கும்பாபிஷேகம் செய்கிறார்கள் என்பதை பற்றி பார்க்க போகிறோம். கும்பாபிஷேகம் என்பது புதிதாக கட்டப்பட்ட கோவில் அல்லது புதுப்பிக்கபட்ட கோவில்களில் தெய்வ சிலைக்கு வழிபாடு செய்யும் முறையாகும். கும்பாபிஷேகம் செய்பவர்கள் 12 வருடங்களுக்கு ஒரு முறை  கும்பாபிஷேகம் செய்வது முதல் மூன்று ஆண்டுகள் தெய்வம் கருவறையில் இருக்கும்.அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தெய்வம் பலிபீடத்தில் இருக்கும்.அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தெய்வம் கொடி மரத்தில் இருக்கும். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தெய்வம் கோபுர கலசத்தில் இருக்கும்.கோபுர கலசத்தில் இருக்கும் தெய்வத்தை மீண்டும் கருவறைக்குள் அழைத்து வரவே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழக்கு செய்யப்படுகிறது.

மேலும், கோவில்களில் அஷ்டபந்தனம் வழிபாடு செய்திருக்கும்போது அடுத்த பன்னிரெண்டு ஆண்டுகளுக்குள் தெய்வம் அதன் சக்தியை இழக்கும் தன்மையை கொண்டுள்ளதால் தெய்வீக சக்தியை அதிகரிப்பதற்காகவும், குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றோரு ராசிக்கு செல்வதற்கு 12 ஆண்டுகள் ஆகும் என்பதால் ஆன்மீக நோக்கதின் படி  12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்கின்றனர். மேலும் இதனை பற்றிய முழு விவரங்களை கீழே தெரிந்துகொள்ளலாம் வாங்க…..

அஷ்டபந்தனம்:

புதிதாக குடமுழக்கு செய்பவர்கள் 12 ஆண்டுகளில் அஷ்டபந்தனம் செய்து பிரதிஷ்டை செய்திருக்கும்போது அதிலிருக்கும் மருந்து அதன் சக்தியை இழக்க கூடும். கருவறையில் இருக்கும் மூலவரின் சக்தியை அதிகரிப்பதற்காக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.

அஷ்டபந்தன மருந்து:

அஷ்டபந்தன மருந்து என்பது  கொம்பரக்கு ,சுக்கான் தூள் , சாதிலிங்கம் , செம்பஞ்சி , தேன்மிளகு, குங்கிலியம்,எருமை வெண்ணை,கற்காவி  போன்ற எட்டுவகையான பொருட்களை கொண்டு வழிபாடு செய்து கும்பாபிஷேகம் செய்யும் முறையாகும்

ராசியின் அதிபதி :

ராசியின் அதிபதியான குருபகவான்  12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றோரு ராசிக்கு இடம்பெயர்வதை ஆன்மீகத்தில் தெய்வீக காலமாக கருதப்படுவதால், குருபகவானின் அருளை வேண்டி அஷ்டபந்தன கும்பாபிஷேகம் செய்யபடுகிறது.

தெய்வ சக்தி :

ஆன்மீக கருத்தின்படி 12 ஆண்டுகள் என்பது தெய்வீகம் காலம் என்பதால், இந்த காலத்திற்குள் தெய்வீக சக்தி அதிகரிக்கும் என்றும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தெய்வீக சக்தியை புனிதப்படுத்தி அதிகரிக்க முடியும் என்று கருதப்படுகிறது.

தெய்வீக சக்தி இழப்பை தடுத்தல்:

பன்னிரெண்டு ஆண்டுகளில் அஷ்டபந்தன மருந்து உதிர்ந்து யந்திரங்களில் பாசி  படிந்துவிடும். இதனை தவிர்த்து தெய்வீக சக்தியை புனிதப்படுத்துவதற்காக அஷ்டபந்தன கும்பாபிஷேகம் செய்யபடுகிறது.

கோவில் கோபுரம் :

கோவில் கோபுரங்களில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அல்லது சேதமடைந்தால், பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே கும்பாபிஷேகம் செய்யலாம்.

கும்பாபிஷேகம் சிறப்புகள்:

கும்பாபிஷேகம் என்பது இந்து கோவில்களில் நடத்தப்படும் ஒரு முக்கிய வழிபாடு ஆகும். இந்த முறையானது கோவிலில் இருக்கும் விக்ரஹங்கள் மற்றும் கும்பங்கள் ஆகியவற்றை புனிதப்படுத்தும் நிகழ்வாகும். இது தெய்வீக சக்தியை அதிகப்படுத்தும் நோக்கத்திற்காக செய்யப்படுகிறது. இந்த அஷ்டபந்தன கும்பாபிஷேகம் ஆனது கும்பங்களின் வழியாக அபிஷேகம் செய்யப்படுவதால் இதற்கு கும்பாபிஷேகம் என்று அழைக்கப்படுகிறது.

கும்பாபிஷேகத்தின் போது பருந்து ஏன் பறக்கிறது தெரியுமா.? இதுதான் காரணம்..!

கும்பாபிஷேகம் நன்மைகள்:

  • கும்பாபிஷேகத்தின் போது கோவில் கட்டிடங்கள் மற்றும் சிற்பங்கள் மாற்றியமைக்கப்பட்டு புதுப்பிக்கபடுகின்றன. இதன் மூலம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவில்கள் பராமரிக்கபட்டு புதுப்பிக்கப்படுகின்றன.
  • கும்பாபிஷகம் செய்வதன் மூலம் பக்தர்களுக்கு ஆன்மீக சக்தியை அதிகரிக்க செய்கிறது. இதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில்  வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது. 
  • கும்பாபிஷேகத்தின் போது அனைவரும் ஒன்றாக செயல்படுவதன் மூலம் சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டாடுகிறார்கள்.
  • கும்பாபிஷேகத்தின் போது பூஜை செய்து தெளிக்கப்படும் புனித  நீரானது தீய சக்திகளை விலக்கி நல்ல ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் மற்றும் அதிர்ஷ்டத்தை தரவும் செய்கிறது. 

கும்பாபிஷேகம் யாரெல்லாம் பார்க்க கூடாது ?

  • கர்ப்பிணி பெண்கள் கும்பாபிஷகத்தின் போது கோவில்களுக்கு சென்று கும்பாபிஷேகத்தை பார்க்க கூடாது.
  • திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகாதவர்கள் கும்பாபிஷேகத்தை பார்க்க கூடாது.
  • வீட்டில் துக்க காரியங்கள் அல்லது பெண்கள் வீட்டில் பூப்படைதல் ஆனால்  அவர்கள் வீட்டில் இருப்பவர்கள் கும்பாபிஷேகம் பார்க்க கூடாது.



மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now