வீட்டில் இந்த பறவை கூடு கட்டினால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்..

Advertisement

வீட்டில் தேன் கூடு கட்டினால் என்ன பலன்

ஜோதிடத்தில் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உள்ளது. அதே போல இந்து மதத்தில் மரங்கள், செடிகள், பறவைகள் போன்றவை மங்களகரமானதாக கருதப்படுகிறது. சில வீடுகளில் வீட்டில் கூடு கட்டியிருக்கும் அதனை பார்த்து ரசித்திருப்போம். சில நபர்கள் வீட்டில் கூடு கட்ட கூடாது, அதனை கலைத்து விடுங்க என்று கூறுவார்கள். நாம் அந்த கூட்டை கலைக்க முடியாமல் கவலையோடு இருப்போம். இனி கவலைப்படாதீங்க வீட்டில் எந்த பறவை கூடு கட்டினால் என்ன பலன் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

வீட்டில் எந்த பறவை கூடு கட்டினால் என்ன பலன்:

வீட்டில் எந்த பறவை கூடு கட்டினால் என்ன பலன்

இந்த ராசிக்காரர்கள் மே 30 வரை காத்திருக்கவும்..ஏனென்றால் பணமழை பொழிய போகிறது 

சிட்டுக்குருவி வீட்டில் கூடு கட்டினால் என்ன பலன்:

வீட்டில் சிட்டுக்குருவி கூடு கட்டினால் மங்களகரமானதாக கருதப்படுகிறது. வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும், செல்வ செழிப்போடு இருக்கலாம். சிட்டுக்குருவி கூடு கட்டுவது நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது.

வீட்டில் புறா கூடு கட்டினால் நல்லதா:

வீட்டில் எந்த பறவை கூடு கட்டினால் என்ன பலன்

வீட்டில் புறா கூடு கட்டுவது பணவரவை அதிகரிப்பதற்கான அறிகுறியாக இருக்கிறது. புறாவை லட்சுமி தேவியாக கருதப்படுகிறது. புறா வீட்டில் கூடு கட்டினால் மகிழ்ச்சியும், செல்வமும் அதிகரிக்கும்.

தேன் கூடு கட்டினால் என்ன பலன்:

வீட்டில் தேனீக்கள் கூடு கட்டுவது நல்லதல்ல. இவை வீட்டில் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். வீட்டில் உள்ளவர்களிடம் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். கடன் பிரச்சனை அதிகரிக்கும்.

அணில் வீட்டில் கூடு கட்டினால் என்ன பலன்:

அணில் வீட்டில் கூடு கட்டினால் வீட்டில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் வராமல் பாதுகாத்து கொள்ளும். பிரிந்து சென்ற உறவினர்கள் சேருவார்கள்.

வௌவால் வீட்டிற்குள் வந்தால்:

வீட்டிற்குள் வௌவால் வந்தால் நல்லதல்ல. ஏனென்றால் பாழடைந்த வீடு மற்றும் கோவில்களில் தான் வௌவால் வாழும். அதனால் தான் வீட்டிற்குள் வௌவால் வந்தால் அந்த வீடானது பாழடைவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

பிறந்ததிலிருந்து இந்த ராசிக்காரர்களுக்கு குபேரரின் அருள் இருக்குதாம் உங்க ராசி இருக்கான்னு தெரிஞ்சுக்கோங்க

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement