உங்களுக்கு உள்ள எவ்வளவு பெரிய பணக்கஷ்டத்தையும் போக்கி பணமழையில் நனைய வைக்க இந்த ஒரு வேர் மட்டும் போதும்..!

Advertisement

Parihara to Increase Money Revenue in Tamil

இன்றைய சூழலில் இந்த உலகில் பணம் என்பது தான் மிகவும் முக்கியமானதாக உள்ளது. அதாவது நாம் வாழ்க்கையை பணம் இல்லாமல் நடத்தவே முடியாது என்றாகி விட்டது. அதனால் அனைவருமே பணத்தை தன்னிடம் தக்க வைத்து கொள்ள பல வகையான முயற்சிகளை எடுப்போம். ஒரு சிலர் நானும் கடினமாகத்தான் உழைக்கின்றேன். அப்படி உழைத்தும் கூட என்னிடம் பணம் என்பது எனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் அளவுக்கு கூட இருக்க மாட்டேங்கிது என்று கூறுவதை நாம் கேட்டிருப்போம். அப்படி மனம் வருந்துவர்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் உங்களுக்கு உள்ள அனைத்து பணக்கஷ்டங்களையும் போக்கி பண வரவை அதிகரிக்க உதவும் ஒரு பரிகாரத்தை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள பரிகாரத்தை செய்து பயன் பெறுங்கள்.

வீட்டில் எண்ணி வைக்க இடமில்லாத அளவிற்கு பணம் வர வேண்டுமா அப்போ இதை செய்ய மறக்காதீர்கள்

வீட்டில் செல்வம் அதிகரிக்க பரிகாரம்:

Home remedies to attract money in tamil

உங்கள் வீட்டில் உள்ள அனைத்து பணக்கஷ்டங்களையும் போக்கி உங்கள் வீட்டின் பணவரவை அதிகரிக்க உதவும் ஒரு பரிகாரத்தை பற்றி விரிவாக இங்கு காண இருக்கின்றோம்.

முதலில் இந்த பரிகாரம் செய்வதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. குப்பைமேனி வேர் – 1
  2. சோம்பு – 1/2 டீஸ்பூன் 
  3. ஏலக்காய் – 3 
  4. பச்சை கற்பூரம் – 1
  5. மஞ்சள் துணி – சிறிய துண்டு

பரிகாரம் செய்யும் முறை:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள சிறிய துண்டு மஞ்சள் துணியை எடுத்து கொள்ளுங்கள். பின்னர் அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1/2 டீஸ்பூன் சோம்பு, 3 ஏலக்காய் மற்றும் 1 பச்சைக்கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து கொள்ளுங்கள்.

பின்னர் நாம் எடுத்து வைத்துள்ள 1 குப்பை மேனி வேரை நன்கு சுத்தம் செய்து விட்டு அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து அதனுடனே சேர்த்து ஒரு சிறிய மூட்டை போல் கட்டி கொள்ளுங்கள்.

பரிகாரம் செய்யும் நாள் மற்றும் நேரம்:

இப்பொழுது இந்த மூட்டையை உங்கள் வீட்டின் பூஜை அறையில் வைத்து நன்கு பூஜை செய்யுங்கள். அதே போல் இந்த பரிகாரத்தை நீங்கள் பௌர்ணமி நாளன்று மாலை 6.00 மணிக்கு மேல் 7.00 மணிக்குள் செய்ய வேண்டும். அதே போல் இந்த மூட்டையில் உள்ள அனைத்து பொருட்களையும் மாற்றி கொள்ளுங்கள்.

எப்பேர்ப்பட்ட பணக்கஷ்டமும் தீர்ந்து போக வேண்டுமா அப்போ செவ்வாய்க்கிழமை தோறும் இதை மட்டும் செய்யுங்கள் போதும்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement