இந்த 3 விஷயங்களை மட்டும் செய்யுங்கள் உங்கள் வீட்டில் எப்போதும் பணக்கஷ்டம் வரவே வராது..!

Advertisement

Parihara to Solve Money Problems in Tamil

இன்றைய சூழலில் பணம் தான் அனைத்து இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது. அதாவது நாம் நமக்கு தேவையான ஒரு சிறிய பொருளை வாங்க வேண்டும் என்றாலும் நமக்கு பணம் தான் முதலில் தேவைப்படும். அதனால் இன்றைய சூழலில் அனைவருக்குமே தங்களின் வாழ்க்கையை சீராக நடத்தி செல்வதற்கு பணம் தான் அதிக அளவு தேவைப்படுகின்றது. எனவே அனைவருமே தங்களுக்கு தேவையான பணத்தை நாம் நம்மிடம் வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் அது முடியாத காரியமாகவே உள்ளது. அதாவது நானும் நன்றாக தான் உழைக்கிறேன், ஆனால் எனக்கு தேவையான பணம் மட்டும் சரியான அளவில் கிடைக்கவே இல்லை என்று ஒரு சிலர் கூறுவதை நாம் கேட்டிருப்போம். அப்படிப்பட்டவர்களுக்கு இன்றைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் உங்கள் வீட்டில் என்றும் பணம் இருந்து கொண்டே இருப்பதற்கான ஒரு சில குறிப்புகளை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்புகளை பயன்படுத்தி உங்கள் வீட்டின் பணவரவை அதிகரித்து கொள்ளுங்கள்.

கடுகு டப்பாவில் இந்த ஒரு பொருளை மட்டும் வையுங்கள் போதும் வீட்டில் உள்ள அனைத்து பணக்கஷ்டங்களும் நீங்கும்

வீட்டில் பணவரவு அதிகரிக்க:

வீட்டில் பணம் தங்க என்ன செய்ய வேண்டும்

உங்கள் வீட்டில் உள்ள அனைத்து பணகஷ்டங்களும் நீங்கி உங்கள் வீட்டில் பணம் அதிக அளவு புழங்க வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்று வழிகளை பின்பற்றுங்கள்.

குறிப்பு – 1

முதல் குறிப்பு என்னவென்றால் உங்கள் வீட்டின் பூஜை அறையில் அல்லது வரவேற்பு அறையில் 2 யானை சிலை அல்லது 2 குதிரை சிலைகளை வைக்க வேண்டும். இந்த சிலைகள் இரண்டும் பணவரவை அதிகரிக்க உதவும். அதனால் நீங்கள் இதனை தினமும் பார்ப்பது உங்களுக்கு ஒரு நன்மையை விளைவிக்கும்.

நீங்கள் மனதில் நினைத்துள்ள அனைத்து காரியங்களும் உடனடியாக நடப்பதற்கு இதை மட்டும் செய்யுங்கள் போதும்

குறிப்பு – 2

அடுத்த குறிப்பு உங்கள் வீட்டின் வாசலில் அல்லது உங்கள் கண்களில் படுமாறு குதிரைப்படம் அல்லது காளைமாடு படம் வாங்கி வைத்து அதனை தினமும் பார்ப்பதால் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். அதாவது பொதுவாகவே ஆன்மிகத்தில் இவ்விரண்டு படங்களும் உங்கள் வீட்டில் உள்ள பணக்கஷ்டங்களை குறைக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் நீங்களும் இந்த இரண்டு படங்களை உங்கள் வீட்டில் வைத்து தினமும் பார்ப்பது பணக்கஷ்டங்களை குறைக்கும்.

குறிப்பு – 3

இந்த குறிப்பில் நீங்கள் என்ன பண்ணவேண்டும் என்றால் வெள்ளிக்கிழமை தோறும் வரக்கூடிய சுக்கிரஹோரையில் காலை 6 மணியில் இருந்து 7 மணிகுள் உங்கள் வாசலில் ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் பூக்களை போட்டு வைப்பதும் உங்கள் வீட்டின் பணவரவை அதிகரிக்கும்.

36 ஆண்டுக்குப் பிறகு ஏற்படும் குரு ராகு சேர்க்கையால் இந்த 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement