Pariharam for 27 Nakshatras in Tamil
ஆன்மீக அன்பர்கள் அனைவர்க்கும் வணக்கம். பொதுவாக ஒவ்வொரு நாளும் நமக்கு எப்படி இருக்கப்போகிறது என்பதை அறிவதற்கு தினமும் ராசிபலன்கள் பார்ப்போம். ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகளும் 27 நட்சத்திரங்களும் உள்ளது. கிரகங்களின் பெயரிச்சியின்படி ஒவ்வொரு ராசி நட்சத்திரனருக்கும் ஒவ்வொரு விதமான வாழக்கை முறை அமையும். அதாவது, ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரத்தின்படி பலன்கள் மாறுபடும்.
அவ்வாறு நமக்கு ஏற்படும் அணைத்து விதமான மோசமான பலன்களை போக்க ஜோதிடத்தில் பல்வேறு வகையான பரிகாரம் உள்ளது. என்பது அந்த வகையில், 27 நட்சத்திரங்களுக்கு ஏற்ற பரிகாரம் செய்ய வேண்டியது அவசியம். அதாவது, 27 நட்சத்திரக்கர்களும் வாழ்வில் சுப பலன்களை பெற்று முன்னேற பரிகாரம் செய்ய வேண்டும். ஆகையால், 27 நட்சத்திரக்கார்களும் என்னென்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.
27 நட்சத்திரங்கள்:
- அசுவினி
- பரணி
- கார்த்திகை
- ரோகிணி
- மிருகசீரிடம்
- திருவாதிரை
- புனர்பூசம்
- பூசம்
- ஆயில்யம்
- மகம்
- பூரம்
- உத்திரம்
- அஸ்தம்
- சித்திரை
- சுவாதி
- விசாகம்
- அனுஷம்
- கேட்டை
- மூலம்
- பூராடம்
- உத்திராடம்
- திருவோணம்
- அவிட்டம்
- சதயம்
- பூரட்டாதி
- உத்திரட்டாதி
- ரேவதி
27 நட்சத்திர பழங்கள் பட்டியல்..!
நட்சத்திரங்களின்படி பரிகாரம்:
அசுவினி நட்சத்திரம்:
அசுவினி நட்சத்திரக்காரர்கள் வாழ்நாளில் நற்பலன்களை பெற முருங்கை மரத்திற்கு நீருற்றி வர வேண்டும்.
பரணி நட்சத்திரம்:
பரணி நட்சத்திரக்காரர்கள் வாழ்க்கையில் முன்னேற ஆல மரத்திற்கு நீருற்றி வர வேண்டும்.
கார்த்திகை நட்சத்திரம்:
கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் சுபமான வாழ்க்கையை வாழ எலுமிச்சை செடிக்கு தண்ணீர் ஊற்றி வர வேண்டும்.
ரோகிணி நட்சத்திரம்:
ரோகிணி நட்சத்திரக்காரர்கள் காளை மாட்டிற்கு அகத்திக்கீரை உணவாக அளித்து வர வேண்டும்.
மிருகசீரிடம் நட்சத்திரம்:
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு கோதுமையையே தானமாக கொடுத்து வர வேண்டும்.
திருவாதிரை நட்சத்திரம்:
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வில்வமரத்திற்கு தண்ணீர் ஊற்றி வருவதன் மூலம் வாழ்க்கையை நற்பலன்களை பெறலாம்.
புனர்பூசம் நட்சத்திரம்
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறருக்கு தேன் தானம் செய்து வர வேண்டும்.
பூசம் நட்சத்திரம்:
பூதம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்கள் அல்லது ஆசிரியர்களுக்கு உடை தானம் செய்து வர வேண்டும்.
ஆயில்யம் நட்சத்திரம்:
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தினமும் அனுமனை வழிபாடு செய்து வர வேண்டும்.
மகம் நட்சத்திரம்:
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மும்மூர்த்திகள் தளத்திற்கு சென்று மும்மூர்த்திகளை வழிபாடு செய்து வர வேண்டும்.
பூரம் நட்சத்திரம்:
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மரத்தடியில் உள்ள விநாயகரை வழிபாடு செய்து வர வேண்டும்.
உத்திரம் நட்சத்திரம்:
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செவிடர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
அஸ்தம் நட்சத்திரம்:
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பசுமாட்டிற்கு அகத்திக்கீரையை உணவாக அளித்து வருவதன் மூலம் நற்பலன்களை பெறலாம்.
சித்திரை நட்சத்திரம்:
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீரங்கம் தளத்திற்கு சென்று வழிபாடு செய்யவேண்டும்.
சுவாதி நட்சத்திரம்:
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் முன்னேற காளி வழிபாடு செய்து வர வேண்டும்.
விசாகம் நட்சத்திரம்:
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கோவில்களுக்கு எண்ணெய் அளித்து வர வேண்டும்.
அனுஷம் நட்சத்திரம்:
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாமரத்திற்கு மஞ்சள் நீர் இட வேண்டும்.
கேட்டை நட்சத்திரம்:
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேப்ப மரத்திற்கு மஞ்சள் நீர் இட வேண்டும்.
மூலம் நட்சத்திரம்:
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காலணி தைப்பவர்களுக்கு உதவி செய்து வர வேண்டும்.
கடன் தீர எளிமையான பரிகாரம் 11 வாரம் செய்தால் போதும்..
பூராடம் நட்சத்திரம்:
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நாவிதர்களுக்கு உதவி செய்து வர வேண்டும்.
உத்திராடம் நட்சத்திரம்:
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துர்க்கை அம்மனுக்கு வழிபாடு செய்து வர வேண்டும்.
திருவோணம் நட்சத்திரம்:
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிரிவலம் வருவதன் மூலம் நற்பலன்களை பெறலாம்.
அவிட்டம் நட்சத்திரம்:
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஊமை நபர்களுக்கு உதவி செய்து வர வேண்டும்.
சதயம் நட்சத்திரம்:
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்து வர வேண்டும்.
பூரட்டாதி நட்சத்திரம்:
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெருநாய்களுக்கு உணவளித்து வர வேண்டும்.
உத்திரட்டாதி நட்சத்திரம்:
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சமையல் தொழிலாளர்களுக்கு உதவி செய்து வர வேண்டும்.
ரேவதி நட்சத்திரம்:
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அரச மரத்திற்கு நீருற்றி வர வேண்டும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |