Pazhani Thangather Valipadu In Tamil
ஆறுபடை முருகன் கோவிலின் மூன்றாம் படையான பழனி முருகன் கோவிலில் தங்கத்தேர் பவனி உற்சவமும் நடத்தப்படுகிறது. இந்த தங்கத்தேர் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. குழந்தை இல்லாதவர்கள் பழனி முருகன் கோவிலுக்கு சென்று முருகனை வேண்டி குழந்தை வரம் கேட்பார்கள். தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பிறகு பழனி கோவிலில் தங்கத்தேர் இழுத்து நேத்திக்கடன் செலுத்துவார்கள்.
முருகப்பெருமான் நாம் எதைக்கேட்டாலும் கொடுக்கக்கூடியவர், அவரிடம் தம்பதிகள் குழந்தை வேண்டி வேண்டுதல் வைத்தாலே போதும் முருகப்பெருமானே வந்து குழந்தையாக பிறப்பதாக நம்பப்படுகிறது. பழனி கோவிலின் தங்கத்தேர் பற்றியும் தங்கத்தேர் வழிபாடு பற்றியும் இன்றைய பதிவில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
பழனி முருகன் கோவில்:
அதிசயங்கள் பல நிறைந்தது பழனி மலை என்று அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார். இங்கு முருகப்பெருமான் கையில் தண்டம் ஏந்தி ஆண்டி கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள முருகன் சிலை போகர் சித்தரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. நவபாஷாணத்தால் ஆன இந்த சிலையில் பட்டு, பெற்றப்படும் பிரசாதங்கள் அனைத்தும் பல விதமான நோய்களை தீர்க்கும் என்று சோப்படுகிறது. மலை மீது போகர் சித்தருக்கு ஜீவ சமாதி உள்ளது.
குழந்தை வரம் கேட்ட முருகன் பக்தர்:
பழனியில் சாது சாமி என்ற முருகன் பக்தர் ஒருத்தர் இருந்தார், அவர் தினமும் பழனி மலை ஏறி முருகப்பெருமானை தரிசனம் செய்வார். முருகனை தரிசித்து விட்டு, கண்ணீர் விட்டு அழுவார். ஏன் அழுகிறீர்கள் என கேட்டால், “இனி மீண்டும் முருகனை நாளை தானே தரிசனம் செய்ய முடியும். அது வரை நான் முருகனை பிரிந்து இருக்க வேண்டுமே” என்று கூறுவார். அந்த அளவிற்கு தீவிர முருகன் பக்தர். ஒரு நாள் சாது சாமியை பெரும் செல்வந்தரான முருகேச முதலியார் சந்தித்தார். முருகேச முதலியார் பழனி கோவில் நிர்வாகியாக இருந்தார். சாது சாமியிடம் சென்று, “சாமி, என்னிடம் அளவில்லாமல் செல்வம் இருக்கிறது. ஆனால் பல காலமாக எனக்கு குழந்தை இல்லை. என்னுடைய குறை போக நான் என்ன செய்ய வேண்டும்? அதற்கு ஏதாவது வழி சொல்லுங்கள்” என கேட்கிறார்.
இதைக் கேட்ட சாது சாமி, “இந்த மலையே நிரம்பி வழியும் அளவிற்கு பால் அபிஷேகம் செய்” என்றார். சிறிதும் யோசிக்காத முருகேச முதலியார், பல ஊர்களில் இருந்தும் பால் வரவழைத்து, முருகனுக்கு பாலால் அபிஷேகம் செய்கிறார். அந்த அபிஷேக பால் வழிந்து மலையே நனைகிறது. மலையில் வழிந்து ஓடும் அளவிற்கு அபிஷேகம் செய்கிறார். சிறிது நாட்களில் முருகேச முதலியாருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறக்கிறது. பேரானந்தத்தில் பழனி மழைக்கு ஓடி வைத்த முருகேச முதலியார், சாது சாமி காலில் விழுந்து, ” சாமி, நான் ஒன்று கேட்டேன். ஆனால் முருகன் எனக்கு இரண்டாக கொடுத்து விட்டார். முருகப் பெருமானுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என சொல்லுங்கள். செய்கிறேன்” என்கிறார்.
அதற்கு பதிலளித்த சாது சாமி, ” நீ கொடுத்தா முருகன் வாழ போகிறான்? அனைத்தும் அவனுடையது. உன்னுடைய மன திருப்திக்காக அவனுக்கு தங்கத்தேர் செய்து வை” என்றார். உடனே முருகேச முதலியாரும் தங்கத் தேர் செய்து வந்து கோவிலுக்கு காணிக்கையாக அளித்தார். அவர் அன்று காணிக்கையாக அளித்த தங்கத் தேர் தான் இன்றும் பழனி மலையில் பவனி வருகிறது.
பழனி தங்கத்தேர் வழிபாடு:
பழனி மலை கோவிலில் நடைபெறும் மிக முக்கியமான வழிபாடு தங்கத்தேர் வழிபாடு ஆகும். முதன் முதலில் பழனி மலை கோவிலில் தான் தங்கத்தேர் அமைக்கப்பட்டது. அதன்பிறகு தான் மாற்ற முருக கோவிலில் தங்க ரத்தம் அமைக்கப்பட்டது.
குழந்தை இல்லாதவர்கள் பழனி முருகனிடம் வேண்டுவார்கள், வேண்டுதல் நிறைவேறிய பிறகு, பழனி கோவிலில் தங்கத்தேர் இழுப்பது இன்றும் முக்கிய வழிபாடாக நடந்து வருகிறது. தங்கத்தேர் இழுப்பதற்கு ரூ.2000 தேவஸ்தானத்தில் செலுத்த வேண்டும். தினமும் மாலையில் நடக்கும் தங்கத்தேர் உற்சவத்தில் அந்த குடும்பத்தை சேர்ந்த 2 நபர்கள் தங்கத் தேரை வடம் பிடித்து இழுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
குழந்தை இல்லாதவர்கள் உங்கள் வேண்டுதலை பழனி முருகனிடம் வையுங்கள் முருகனே உங்களுக்கு மகனாக வந்து பிறப்பார்.
Murugan Kovil Kanavil Vanthal Enna Palan
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |