பீடை என்றால் என்ன.? பீடை நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்.!

Advertisement

பீடை என்றால் என்ன.? 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பீடை என்றால் என்ன.? பீடை விலக என்ன பரிகாரம் செய்யவேண்டும்.? என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம். ஆன்மீகத்தின் படி, நாம் செய்யும் சில செயல்கள் நமக்கு தீங்கு விளைவிப்பதாகவும், ஒரு சில செயல்கள் நன்மை அளிப்பதாகவும் கருதப்படுகிறது. அவ்வாறு நாம் செய்யும் சில தவறான செயல்களால்/தவறான குணத்தால் நமக்கு துன்பம் உண்டாகிறது.

மனதில் எதிர்மறை எண்ணங்கள் என்பதே இருக்க கூடாது. என்னதான் பிரச்சனை இருந்தாலும், அடுத்தவர்களிடம் கோபமாகவும் அடுத்தவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் விதமாக நடந்து கொள்ளுதல் கூடாது. நம்மை சிலர் பீடை என்று சொல்லி திட்டியிருப்பார்கள் அல்லது நாம் பிறரை பீடை என்று கூறி திட்டி இருப்போம். ஆனால், நம்மில் பலருக்கும் பீடை என்றால் என்ன.? என்பதே தெரியாது. தெரியாமலே அந்த வார்த்தையினை சொல்லிகொண்டிருப்போம்.

பீடை தமிழ் அர்த்தம்:

 பீடை என்றால் துன்பம், கஷ்டம், நோய் மற்றும் கிரகத்தின் பாதிப்பால் ஏற்படும் தீமை ஆகியவை பீடை ஆகும்.  துன்பம் மிகுந்த நிலை பீடை நிலை ஆகும். அதனால் தான், நம் ஏதேனும் ஒரு பிரச்சனையில் இருந்து துன்பத்தில் இருந்து மீண்டு வந்தால், “உன்னை பிடித்திருந்த பீடை ஒழிந்தது” என்று கூறுவார்கள். எனவே, பீடை என்பது துன்பம், கஷ்டம், தீமை போன்ற நிலைமைகளை குறிக்கிறது. சோதிடத்தில், கிரகத்தினால் நமக்கு ஏற்படும் பாதிப்பினையும் பீடை என்று கூறுவார்கள்.

பீடை ஏற்பட்டால் உடல் சோர்வாக இருக்கும், எப்போதும் நோய் வாய்ப்பட்டு இருப்பார்கள், எப்போதும் சோகமாக இருப்பார்கள். இதுபோன்ற நிலை நீடித்தால் பரிகாரம் செய்ய வேண்டியது அவசியம்.

புத்திர தோஷம் என்றால் என்ன..? புத்திர தோஷம் நீங்க என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும்..?

பீடை என்றால் என்ன ராசி பலன்:

ராசிபலனில் பீடை என்று குறிப்பிடப்பட்டிருக்கும். பீடை என்றால் துன்பம் என்று பொருள்படும்.

பீடை நீங்க என்ன செய்ய வேண்டும்.?

பீடையால் அவதிப்படவர் கிழக்கு பார்த்து அமர வைத்து, ஒரு சொம்பில் தண்ணீரை எடுத்து, அவர் தலையை லேசாக சுற்ற வேண்டும். அதன் பிறகு, ஒரு கைப்பிடி கோதுமை மாவு அல்லது கோதுமையை எடுத்து, அவர் தலையை சுற்ற வேண்டும். வலது புறமாக ஏழு முறை சுற்றிவிட்டு அந்த கோதுமையை கொண்டு பசு மாட்டிற்கு உணவாக அளிக்க வேண்டும். அல்லது குருவிகளுக்கு உணவாக போட்டு விடலாம். அதேபோல், அந்த தண்ணீரை மரம் செடிகளுக்கு ஊற்றி விட வேண்டும்.

இவ்வாறு நீங்கள் தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால் பீடை நீங்கும்.

ராசிபலனில் உள்ள தனம் என்பதற்கான அர்த்தம்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement