Pengal Amavasai Viratham Irukalama
வாசகர்களுக்கு வணக்கம்..! உங்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறதா..? ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக நீங்கள்..! இது என்ன கேள்வி யாருக்கு தான் ஆன்மீகத்தில் ஈடுபாடு இல்லாமல் இருக்கும் சொல்லுங்கள் என்று சொல்வீர்கள். ஆனால் இன்றைய நிலையிலும் ஆன்மீகத்தில் ஈடுபாடு இல்லாதவர்கள் இருக்கிறார்கள். சரி அவர்களை விடுங்க..! கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்காக இந்த பதிவில் ஒரு பயனுள்ள தகவலை கூறப்போகிறேன். அது என்னவென்றால் பெண்கள் அமாவாசை விரதம் இருக்கலாமா..? இதற்கான பதிலை இந்த பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
பெண்கள் அமாவாசை விரதம் இருக்கலாமா..?
பொதுவாக நம் அனைவருக்குமே அமாவாசை விரதம் என்றால் என்ன என்று தெரியும். அமாவாசை அன்று மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நாளை தான் அமாவாசை என்று சொல்கின்றோம். அன்று அனைவரின் வீட்டிலும் சைவ உணவு சமைத்து முன்னோர்களுக்கு படைத்து வழிபடுவார்கள்.
சரி இது நம் அனைவருக்குமே தெரிந்த ஓன்று தான். அமாவாசை என்று பெண்கள் விரதம் இருக்கலாமா..? என்று நம் அனைவருக்கும் ஒரு கேள்வி இருக்கும். அதற்கான பதிலை தான் இங்கு காணப்போகின்றோம்.
👉அமாவாசை அன்று குழந்தை பிறந்தால் என்ன ஆகும் தெரியுமா
சுமங்கலி பெண்கள் அமாவாசை அன்று விரதம் இருக்க கூடாது. அதுபோல அப்பா, அம்மா இல்லை ஆனால் கணவர் இருக்கும் பெண்கள் அமாவாசை அன்று விரதம் எடுக்க கூடாது.அதுபோல தாய் தந்தை இல்லாத பெண்கள், கணவரை இழந்த பெண்கள் அமாவாசை அன்று விரதம் இருக்கலாம். அதாவது கணவரும் இல்லை, அப்பா அம்மாவும் இல்லை என்று சொல்லும் பெண்கள் அமாவாசை அன்று விரதம் இருக்கலாம்.
அதுபோல அம்மா, அப்பா இறந்துவிட்டார்கள் சகோதர்களும் இல்லாத பெண்கள் அமாவாசை அன்று கோவிலுக்கு சென்று யாருக்காவது தானம் அல்லது அன்னதானம் செய்யலாம்.
👉மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் அமாவாசை விரதம் எடுக்கலாமா
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |