பெண்கள் கனவில் வந்தால் என்ன பலன்

Advertisement

Pengal Kanavil Vanthal Enna Palan

பொதுவாக நாம் தூங்கும் போது ஏற்படுவது தான் கனவு. இந்த கனவுகளில் பல வகைகள் உள்ளது. அதாவது சில கனவுகள் காலையில் ஞாபகம் இருக்கும், சில கனவுகள் ஞாபகம் இருக்காது, விடியற் காலையில் கண்டா கனவுகள் பலிக்கும் என்று பல விதமாக சொல்வார்கள். பொதுவாக கனவு என்பது நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது ஏற்படுவது தான் கனவு. ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் ஆன்மிகத்தில் கூறப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இன்றைய பெண்களை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

சிவப்பு நிற புடவை கட்டிய பெண் கனவில் வந்தால்:

சிவப்பு நிற புடவை கட்டிய பெண் கனவில் வந்தால்

சிவப்பு நிற புடவை கட்டிய பெண்ணை கனவில் கண்டால் இதுவரை உங்களின் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மேலும் குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும்.

புதுமண பெண் அழுவது போல் கனவு கண்டால்:

புதுமண பெண் அழுவது போல் கனவு கண்டால் உங்களுடைய நண்பர்கள் அல்லது உறவினர்கள், சகோதரர்,இளைய சகோதரர் போன்றவர்களிடம் சண்டை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் தான் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த கனவு உணர்த்துகிறது.

வீட்டில் இதை எல்லாம் செய்யாமல் இருந்தாலே போதும் உங்கள் கடன் பிரச்சனை தீர்ந்து செல்வம் பெருகும்.

பெண் நடனம் ஆடுவது போல கனவு கண்டால்:

பெண் நடனம் ஆடுவது போல கனவு கண்டால்

நீங்கள் பெண் நடனம் ஆடுவது போல கனவு கண்டால் உங்களுடைய திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட போகிறது. மேலும் நீங்கள் காதல் செய்து கொண்டிருந்தாலும் அதிலும் பிரச்சனை ஏற்பட போகிறது அதனால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது.

கன்னி பெண் கனவில் வந்தால்:

நீங்கள் கன்னி பெண்ணை கனவில் கண்டால் உங்களின் வாழ்க்கையில் நீங்கள் செய்கின்ற செயல் அனைத்தும் நன்மையில் நடக்க போகிறது என்பதை குறிக்கிறது.

வெள்ளை ஆடை அணிந்த பெண் கனவில் கண்டால்:

வெள்ளை ஆடை அணிந்த பெண்ணை கனவில் கண்டால் தொழிலானது நல்லபடியாக நடக்கும். ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகிறது.

பெண் விளையாடுவது போல கனவு கண்டால்:

பெண் விளையாடுவது போல கனவு கண்டால்

பெண் விளையாடுவது போல கனவு கண்டால் உங்களுடைய வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அடிக்க போகிறது. மேலும் செல்வ செழிப்போடு வாழ போகிறீர்கள் என்பதை குறிக்கிறது.

பெண்களுக்கு பரிசு அளிப்பது போல கனவு கண்டால்:

நீங்கள் பெண்ணுக்கு பரிசளிப்பது போல கனவு கண்டால் வருங்காலத்தில் நீங்கள் பிரச்சனைகளை சந்திக்க போகிறீர்கள் என்பதை குறிக்கிறது. அதனால் நீங்கள் இது போல கனவு கண்டால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

வீட்டு பாத்ரூமில் 1 கைப்பிடி கல் உப்பை வைத்தால் வாஸ்துப்படி என்ன பலன் தெரியுமா..?

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement