பெண்களே இப்படி தான் பொட்டு வைக்கிறீர்களா..? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

பெண்கள் பொட்டு வைக்கும் முறை

நெற்றியில் பொட்டு வைப்பது என்பது இந்துக்கள் முறையில் கடைபிடிக்கபட்டு வருகிறது. சில பெண்கள் பொட்டு வைக்காமல் இருந்தால், அதை பெரியவர்கள் பார்த்து முதலில் பொட்டு வைத்து விட்டு வா என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட பொட்டை எப்படி வைப்பது என்று இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

பெண்கள் பொட்டு வைக்கும் முறை:

பெண்கள் பொட்டு வைக்கும் முறை

திருமணமாகாத பெண்கள்:

கன்னி பெண்கள் எந்த கலரில் வேண்டுமானாலும் பொட்டு வைத்து கொள்ளலாம். அந்த பொட்டை இரு புருவத்தின் இடையில் வைக்க வேண்டும். அந்த பொட்டானது குங்குமம் மற்றும் மையாக இருப்பது நல்லது. எப்படியென்றால் குங்குமத்தை கையால் எடுத்து புருவத்தின் இடையில் வைக்கும் போது கையை வைத்து அந்த இடத்தில் சுழற்றுவதால் கருப்பைக்கு நல்லது.

இதையும் படியுங்கள் ⇒ பெண்கள் கட்டாயம் இந்த 5 அணிகலன்ளை அணிய வேண்டும் ஏன் தெரியுமா..?

இப்போதெல்லாம் ஸ்டிக்கர் பொட்டு தான் வைத்து கொள்கிறோம். அழகுக்கு தான் பொட்டை வைத்து கொள்கிறார்கள். நம் பாட்டி  எல்லாம் குங்குமத்தை தான் வைத்தார்கள். அதனால் தான் அவர்கள் ஆரோக்கியமாக இருந்தார்கள்.

இல்லை என்னால் குங்குமம் வைக்க முடியாது என்றால் ஸ்டிக்கர் பொட்டிற்கு மேலாவது குங்குமத்தை வைத்து கொள்ளவும்.

திருமணமான பெண்கள்:

பெண்கள் பொட்டு வைக்கும் முறை

திருமணமான பெண்கள் நெற்றியில் கருப்பு பொட்டு வைக்க கூடாது. சிவப்பு நிறத்தில் தான் பொட்டு வைக்க வேண்டும். ஏனென்றால் லட்சுமி கடாட்சகமாக இருப்பதால் நெற்றியில் சிவப்பு நிற பொட்டை அணிவது நல்லது. வேண்டுமென்றால், கருப்பு நிற மையை அணிந்து கொள்ளவும். இரு புருவத்திற்கு இடையிலும், நெற்றியின் வகிடுலும் குங்குமம் வைப்பது அவசியமானது.

 பெண்கள் நெற்றியின் வகுட்டில் பொட்டு வைக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. மேலும் நெற்றியில் உள்ள பிட்யூட்டரி நரம்புகளை தூண்டுவதன் மூலம் குழந்தை பேறு உடனடியாக கிடைக்கும் என்பதற்காக தான் நெற்றி வகிட்டில் பொட்டு வைக்க சொன்னார்கள்.  

திருநீறு வைக்கும் முறை:

பெண்கள் பொட்டு வைக்கும் முறை

தனக்கு தானே திருநீறு வைக்கும் போது மோதிர விரலை பயன்படுத்தி தான் திருநீறு வைக்க வேண்டும். மற்றவர்களுக்கு வைக்கும் போது கட்டை விரல் பயன்படுத்தி வைக்கலாம்.

இதையும் படியுங்கள் ⇒ பெண்கள் புடவை அணிவதற்கான அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement