முக்கியமாக பெண்கள் தெரிந்துகொள்ள விஷயங்கள்

Advertisement

Pengal Therinthu Kolla Vendiyavai in Tamil

பெண்களை ஒவ்வொன்றையும் சாஸ்திர சம்பிரதாயம் படி செய்ய சொல்வார்கள். எந்தெந்த விஷயங்களை எப்படி செய்ய வேண்டும் என்று ஆன்மிகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. திருமணம் ஆன பெண்கள் குங்குமத்தை கீழையும், தலைக்கு உச்சியிலும் வைப்பார்கள். திருமணம் ஆகாதவர்கள் குங்குமத்தை மேலே வைப்பார்கள். இது இப்படி தான் வைக்க வேண்டும் என்ற முறையோடு வைக்கிறார்கள். இது போல் என்னென்ன ஆன்மிகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று தெரிந்துகொள்வோம் வாங்க..!

இதையும் படியுங்கள் ⇒ பெண்கள் திருமணத்திற்கு முன் தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள்

நெற்றியில் குங்குமம் வைப்பது எப்படி.?

பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பது உடலுக்கு நல்லது. ஆனால் இந்த காலத்தில் யார் குங்குமம் வைக்கிறார்கள். எல்லாரும் ஸ்டிக்கர் பொட்டு தான் வைக்கிறார்கள். கேட்டால் பேஷன் என்று சொல்கிறார்கள். நாம் செய்யும் செயல்களுக்கு பின் கண்டிப்பா அறிவியல் பூர்வமான விஷயம் ஒளிந்திருக்கும். அதனால் முன்னோர்கள் சொல்வார்கள் முகத்திற்கு மஞ்சள் தேய்த்து குளிக்க சொல்வார்கள். அந்த காலத்தில் உள்ளவர்கள் மஞ்சள் தேய்த்து குளிப்பார்கள். இந்த காலத்தில் ஒரு சிலர் மஞ்சள் தேய்த்து குளிப்பார்கள். மஞ்சள் தேய்த்து குளிப்பதால் முகத்தில் பருக்கள் வராது என்பதற்காக சொல்வார்கள்.

திருமணமான பெண்கள் நெற்றியின் உச்சி, நெற்றி, மாங்கல்யம் போன்றவற்றில் குங்குமத்தை வைக்க வேண்டும்.

தாலி கோர்ப்பது எப்படி.?

பெண்களுக்கு தாலி என்பது மங்களமான விஷயம். இந்த தாலியை நினைத்த நேரத்திற்கு கழட்டவோ, மாட்டாவோ கூடாது. மற்ற அணிகலன்கள் போல் கழட்டி மாட்ட கூடாது. தாலி கழுத்திலே இருப்பது தான் நல்லது.

புடவை கட்டும் முறை:

பெண்கள் புடவை கட்டிருக்கும் போது முந்தானை தொங்க கூடாது. முந்தானையை எடுத்து பிடித்து கொள்ள வேண்டும். இல்லையெனில் முந்தானையை எடுத்து சொருகிகொள்ள வேண்டும். முந்தானை சொருகாமல் நடந்தால் குடும்பத்தில் கஷ்டம் ஏற்படுமாம் என்று ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது.

உணவு சமைக்கும் முறை:

அடுப்பை தினமும் கழுவ வேண்டும். அந்த காலத்தில் காலையில் எழுந்தவுடன் அடுப்பில் உள்ள சாம்பலை எடுத்துவிட்டு தான் மறு வேலைகளை பார்ப்பார்கள். இப்போது அப்படி இல்லை நிறைய நபர்கள் கேஸ் அடுப்பில் தான் சமைக்கிறார்கள். எந்த அடுப்பில் சமைக்க தொடங்கினாலும் மனதில் இதை மட்டும் நினைத்துக்கொண்டு சமைக்க ஆரம்பியுங்கள். இன்று செய்யும் உணவை அனைவரும் சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு சமைக்க ஆரம்பியுங்கள்.

கோலம் போடும் முறை:

வீட்டில் எந்த பக்கம் வாசல் இருக்கிறதோ அந்த பக்கம் நின்று தான் கோலம் போடுவார்கள். ஆனால் கோலத்தை கிழக்கு திசை பார்த்து தான் கோலம் போட  வேண்டும். வேறு எந்த திசையும் பார்த்து கோலம் போட கூடாது.

விளக்கு போடுவது எப்படி.?

கோவிலுக்கு எண்ணெய், சூடம், பக்தி எடுத்து செல்வோம். பக்தி, சூடம் இவை இரண்டும் தனித்தனியாக ஏற்றுவோம் வைப்போம். ஆனால் விளக்கை மட்டும் இன்னொருவர் ஏற்றி வைத்திருக்கும் விளக்கில் எண்ணையை ஊற்றுவோம். இந்த தவறை இனிமேல் செய்யாதீர்கள். யாரும் ஏற்றதா விளக்கில் தான் விளக்கு ஏற்ற வேண்டும்.

பெருமாள் கோவில் தீர்த்தம்:

பெருமாள் கோவிலில் தீர்த்தம் கொடுப்பார்கள். அந்த தீர்த்தத்தை இடது கைக்கும், வடது கைக்கும் கீழ் புடவை முந்தானையை பிடித்து தீர்த்தம் வாங்க வேண்டும்.

இதையும் படியுங்கள் ⇒ பெண்கள் அதிகாலை எழுந்தவுடன் கடைபிடிக்க வேண்டியவை..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement