Personality By Date Astrology in Tamil
நாம் பிறந்த தேதியை வைத்து தான் ராசி, நட்சதிரம் எழுதுவார்கள். இதனை வைத்து தான் அவர்களுடைய தலையெழுத்து எப்படி இருக்க போகிறது என்பதை அறிந்து கொள்வார்கள். அது போல ஒவ்வொரு மனிதனுக்கும் குணம் என்பதுமாறுபடும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம் இருக்கும். எல்லாரும் ஒரே மாதிரி அன்பை செலுத்த மாட்டார்கள். சில பேர் அன்பை வெளிப்படையாக காட்டுவார்கள். சில பேருக்கு அந்த அன்பை வெளியில காட்ட தெரியாது. இப்படி இருக்கும் போது சில பேர் தைரியமானவர்களாக இருப்பார்கள். சில பேர் பயந்த சுபாவத்தோடு காணப்படுவார்கள். இந்த பதிவில் எந்தெந்த தேதிகளில் பிறந்தவர்கள் தைரியமாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்வோம்.
3,12,21,30 பிறந்த தேதி:
3,12,21,30 தேதிகளில் பிறந்தவர்கள் அடிக்கடி தங்களை நிரூபிக்கவும், அனைவரின் கவனம் அவர்கள் மீது படவும் தங்களை வெளிப்படுத்தி கொண்டே இருப்பார்கள். யாராவது ஒருவர் அவர்களை மட்டம் தட்டி பேசினால் அவ்வளவு தான் அவர்களது திமிரான குணம் வெளிப்படும்.
9,18,27 பிறந்த தேதி:
9,18,27 தேதிகளில் பிறந்தவர்கள் எப்போதும் கர்வமாகவே இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவும் குணம் இவர்களிடம் அதிகமாக காணப்படும். உலகத்தை மாற்ற முயற்சிக்கும் அதீத எண்ணம் கொண்டவர்கள். வேலை என்று வந்து விட்டால் வெள்ளை காரன் என்பது போல கொடுத்த வேலையை அவ்வளவு அருமையாக முடித்து விடுவார்கள். அதனால் இவர்களிடம் எந்த வேலையையும் நம்பி கொடுக்கலாம்.
சித்திரை மாதம் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்
1,10,19,28 தேதிகளில் பிறந்தவர்கள்:
1,10,19,28 ஆம் தி தேதியில் பிறந்தவர்கள் அதிகார பண்பு கொண்டவர்களாக திகழ்வார்கள். அவர்களின் அதீத நம்பிக்கை அவர்களை பொறுப்பாக செயல்பட வைக்கும். எப்போதும் தாங்கள் தான் மற்றவர்களை விட சிறந்தவர்கள் ஆக இருக்க வேண்டும் என்ற எண்ணம் காணப்படும்.
8,17,26 பிறந்த தேதி:
8,17,26 தேதிகளில் பிறந்தவர்கள் போட்டி மற்றும் லட்சிய ஆளுமை போன்ற குணம் உடையவர்களாக இருப்பார்கள். எப்போதும் வெற்றியை அடைவதற்காக என செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து கொண்டே இருப்பார்கள். ஆனால் மற்றவர்களள் யாரும் உதவி என்று கேட்டு வந்தால் இல்லையென்று சொல்லாமல் உதவும் குணம் உடையவர்களாக இருப்பார்கள். மேலும் யாரும் பிரச்னையில் இருந்தால் அவர்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள்.
5,14,23 பிறந்த தேதி:
5,14,23 தேதிகளில் பிறந்தவர்கள் சுதந்திரமானவர்களும், தைரியமானவர்களுமாக இருப்பார்கள். எந்த ஒரு விதிமுறையையும் கடைபிடிக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். இவர்கள் வைப்பது தான் சட்டம் என்று நினைத்து செயல்படுவார்கள். இவர்கள் மற்றவர்களை விட எப்போது தாம் தான் சிறந்து விளங்க வேண்டும் என்ற கர்வம் உடையவர்களாக இருப்பார்கள்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |