108 பெருமாள் போற்றி
வணக்கம் நண்பர்களே இன்று நம் ஆன்மிகம் பதிவில் பெருமாளின் 108 போற்றிகளை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். இந்த பெருமாளின் 108 போற்றிகளை சொல்வதினால் பல நன்மைகளும் வந்துசேரும் என்று சொல்லப்படுகிறது. இந்த பெருமாள் கடவுள் 10 அவதாரங்களை எடுத்த கடவுள் ஆவர். இவர் ஒரு பணக்கார சாமி என்பதால் இவரை வழிப்பட்டு அவருடைய நாமங்களை உச்சரிப்பதன் மூலம் தீராத கடன் பிரச்சனைகள், மன கஷ்டங்கள் எல்லாம் நீங்கும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் நம் பதிவின் மூலம் பெருமாள் சாமியை எப்படி வழிப்பட்டால் நன்மைகள் கிடைக்கும் என்றும், அவருடைய 108 போற்றிகளை பற்றியும் நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.
108 நந்தி போற்றி |
பெருமாளை வழிபடும் முறை:
வீட்டில் உள்ள வறுமைகள் எல்லாம் நீங்கி செல்வங்கள் செழிப்பதற்கு பெருமாளை எப்படி வணங்க வேண்டும் என்றால், திருப்பதியில் உள்ள வெங்கடேச பெருமாளின் படம் ஒன்றை வீட்டில் வைத்து அவரின் மந்திரங்களை சொல்லி பூஜை செய்யவேண்டும்.
அதன்பிறகு அவருக்கு மாவினால் விளக்கு செய்து அதில் நெய்யில் விளக்கு ஏற்றி, பெருமாளுக்கு மிகவும் உகந்த துளசி மாலையை கட்டி பெருமாள் படத்தில் போட வேண்டும். பெருமாளுக்கு வைக்க வேண்டிய உணவுகள் சர்க்கரை பொங்கல், வடை போன்றவற்றை வைத்து நெய்வேத்தியம் செய்ய வேண்டும்.
பெருமாளுக்கு பூஜைகளை செய்யும் பொழுது உறவினர்களையும், நண்பர்களையும் அல்லது யாராக இருந்தாலும் “கோவிந்த கோவிந்த” என்று அழைப்பது மிகவும் நல்லது என்றும் சொல்லப்படுகிறது.
Perumal 108 Potrigal:
இந்த பெருமாளின் 108 போற்றிகளை ஏகாதசி அல்லது சனி கிழமைகள் அன்று பெருமாள் கோவிலுக்கு சென்று இந்த 108 போற்றிகளை சொல்வதினால் பெருமாளின் அருளும், மகாலட்சுமியின் அருளும் கிடைத்து செல்வ செழிப்புடன் வாழலாம் என்றும் சொல்லப்படுகிறது.
ஓம் ஹரி ஹரி போற்றி
ஓம் ஸ்ரீஹரி போற்றி
ஓம் நர ஹரி போற்றி
ஓம் முர ஹரி போற்றி
ஓம் கிருஷ்ணா ஹரி போற்றி
ஓம் அம்புஜாஷா போற்றி
ஓம் அச்சுதா போற்றி
ஓம் உச்சிதா போற்றி
ஓம் பஞ்சாயுதா போற்றி
ஓம் பாண்டவர் தூதா போற்றி
ஓம் லட்சுமி சமேதா போற்றி
ஓம் லீலா விநோதா போற்றி
ஓம் கமல பாதா போற்றி
ஓம் ஆதி மத்தியாந்த ரகிதா போற்றி
ஓம் அநாத ரக்ஷகா போற்றி
ஓம் அகிலாண்டகோடி போற்றி
ஓம் பரமானந்தா போற்றி
ஓம் முகுந்தா போற்றி
ஓம் வைகுந்தா போற்றி
ஓம் கோவிந்தா போற்றி
ஓம் பச்சை வண்ணா போற்றி
ஓம் கார்வண்ணா போற்றி
ஓம் பன்னகசயனா போற்றி
ஓம் கமலக்கண்ணா போற்றி
ஓம் ஜனார்த்தனா போற்றி
ஓம் கருடவாகனா போற்றி
ஓம் ராட்சஷ மர்த்தனா போற்றி
ஓம் காளிங்க நர்த்தனா போற்றி
ஓம் சேஷசயனா போற்றி
ஓம் நாராயணா போற்றி
ஓம் பிரம்ம பாராயணா போற்றி
ஓம் வாமனா போற்றி
ஓம் நந்த நந்தனா போற்றி
ஓம் மதுசூதனா போற்றி
ஓம் பரிபூரணா போற்றி
ஓம் சர்வ காரணா போற்றி
ஓம் வெங்கட ரமணா போற்றி
ஓம் சங்கட ஹரனா போற்றி
ஓம் ஸ்ரீதரா போற்றி
ஓம் துளசிதரா போற்றி
ஓம் தாமோதரா போற்றி
ஓம் பீதாம்பரா போற்றி
ஓம் பலபத்ரா போற்றி
ஓம் பரமதயா பரா போற்றி
ஓம் சீதா மனோகரா போற்றி
ஓம் மச்ச கூர்ம அவதாரா போற்றி
ஓம் பரமேஸ்வரா போற்றி
ஓம் சங்கு சக்கரா போற்றி
ஓம் சர்வேஸ்வரா போற்றி
ஓம் கருணாகரா போற்றி
ஓம் ராதா மனோகரா போற்றி
ஓம் ஸ்ரீரங்கா போற்றி
ஓம் ஹரிரங்கா போற்றி
ஓம் பாண்டுரங்கா போற்றி
ஓம் லோகநாயகா போற்றி
ஓம் பத்மநாபா போற்றி
ஓம் திவ்ய சொரூபா போற்றி
ஓம் புண்ய புருஷா போற்றி
ஓம் புரு÷ஷாத்தமா போற்றி
ஓம் ஸ்ரீ ராமா போற்றி
ஓம் ஹரிராமா போற்றி
ஓம் பலராமா போற்றி
ஓம் பரந்தாமா போற்றி
ஓம் நரஸிம்ஹா போற்றி
ஓம் திரிவிக்ரமா போற்றி
ஓம் பரசுராமா போற்றி
ஓம் சகஸ்ரநாமா போற்றி
ஓம் பக்தவத்சலா போற்றி
ஓம் பரமதயாளா போற்றி
ஓம் தேவானுகூலா போற்றி
ஓம் ஆதிமூலா போற்றி
ஓம் ஸ்ரீ லோலா போற்றி
ஓம் வேணுகோபாலா போற்றி
ஓம் மாதவா போற்றி
ஓம் யாதவா போற்றி
ஓம் ராகவா போற்றி
ஓம் கேசவா போற்றி
ஓம் வாசுதேவா போற்றி
ஓம் தேவதேவா போற்றி
ஓம் ஆதிதேவா போற்றி
ஓம் ஆபத் பாந்தவா போற்றி
ஓம் மகானுபாவா போற்றி
ஓம் வசுதேவ தனயா போற்றி
ஓம் தசரத தனயா போற்றி
ஓம் மாயாவிலாசா போற்றி
ஓம் வைகுண்டவாசா போற்றி
ஓம் சுயம்பிரகாசா போற்றி
ஓம் வெங்கடேசா போற்றி
ஓம் ஹ்ருஷி கேசா போற்றி
ஓம் சித்தி விலாசா போற்றி
ஓம் கஜபதி போற்றி
ஓம் ரகுபதி போற்றி
ஓம் சீதாபதி போற்றி
ஓம் வெங்கடாசலபதி போற்றி
ஓம் ஆயாமாயா போற்றி
ஓம் வெண்ணெயுண்ட நேயா போற்றி
ஓம் அண்டர்களேத்தும் தூயா போற்றி
ஓம் உலகமுண்டவாயா போற்றி
ஓம் நானாஉபாயா போற்றி
ஓம் பக்தர்கள் சகாயா போற்றி
ஓம் சதுர்புஜா போற்றி
ஓம் கருடத்துவஜா போற்றி
ஓம் கோதண்டஹஸ்தா போற்றி
ஓம் புண்டரீகவரதா போற்றி
ஓம் விஷ்ணு போற்றி
ஓம் பகவானே போற்றி
ஓம் பரமதயாளா போற்றி
ஓம் நமோ நாராயணா போற்றி ! போற்றி.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |