உங்கள் ராசிக்கேற்ற செல்ல பிராணிகள் என்ன தெரியுமா?

Pet Animal For Rasi In Tamil

உங்கள் ராசிக்கேற்ற பிராணிகள்

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் உங்கள் ராசிக்கேற்ற செல்ல பிராணிகள் என்னவென்றுதான் பார்க்கப்போகிறோம். இந்த செல்ல பிராணிகளை வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்றும் தெரிந்துகொள்ளலாம். பொதுவாக சிலர் வீட்டில்  செல்ல பிராணிகள் என்று சொல்லி நாய், கிளி, love birds, பசு மாடு, ஆடு, கோழி என்று பலவகையான பறவைகளையும், விலங்குகளையும் வளர்ப்பார்கள் ஆனால் சிலர் வீட்டில் செல்ல பிராணிகள் வளர்த்தால் ராசி கிடையாது வளர்த்தால் இறந்து விடும் என்றும் சொல்லவர்கள். ஒவ்வொரு ராசிக்கும் எந்த செல்ல பிராணிகளை வளர்த்தால், வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம் வாங்க.

அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் மணி பிளான்ட் செடியை எந்த திசையில் வைக்க வேண்டும் என்று தெரியுமா..?

உங்கள் ராசிக்கேற்ற செல்ல பிராணிகள் என்ன தெரியுமா:

பொதுவாகவே வளர்ப்பு பிராணிகளுக்கு வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகளை கண்டுபிடிக்கும் ஆற்றல்கள் அதிகம். அதுமட்டுமின்றி வீட்டில் இருப்பவர்களை துஷ்ட சக்திகளில் இருந்து பாதுகாப்பதற்கும் இந்த செல்ல பிராணிகள் உதவியாக இருக்கிறது. மேலும் உங்கள் ராசிக்கான செல்ல பிராணிகள் என்னவென்று பார்க்கலாம்.

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கான செல்ல பிராணிகள் ஆடு, கோழி,  சேவல், குதிரை போன்றவையாகும். இந்த பிராணிகளை வளர்ப்பதால் வீட்டிற்கு நல்ல அதிஷ்டகள் உண்டாகும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்கள் பசு, காளை, முயல்  போன்ற விலங்குகளை வளர்ப்பதால் இல்லத்தில் சந்தோஷமும், அதிஷ்டமும்  பெறலாம்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்கள் love birds, கிளி, நாட்டு கோழி, பூனை  போன்ற செல்ல பிராணிகளை வளர்ப்பதால் முன்னேற்றமும், அதிஷ்டங்களையும் பெறலாம்.

கடகம்:

கடக ராசிக்காரர்கள் கோழி, வான்கோழி, வாத்து போன்ற பறவைகளை வளர்ப்பதால் குடும்பத்தில் நிம்மதி மற்றும் அதிஷ்டகள் உண்டாகும். இவர்கள் நாய் வளர்க்கவே கூடாது, சூரியன் பகை வீடாக இருந்தால் நாய் வளர்ப்பதை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் ஆடு, மாடு, நாய், கோழி போன்றவற்றை வளர்ப்பதால் அதிஷ்டகள் உண்டாகும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்கள் நாய், கிளி, love birds போன்ற செல்ல பிராணிகளை வளர்ப்பதால் அதிஷ்டம் பெறலாம். அதிலும் இவர்கள் love birds  வளர்ப்பதால்  குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் மற்றும் கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகள் சரியாகும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்கள் விலங்குகளை வளர்ப்பதை விட பறவைகளை வளர்ப்பது நல்ல அதிஷ்டத்தை தரும் அதிலும் புறா, கிளி, பஞ்சவர்ண கிளி போன்றவற்றை வளர்ப்பதால் பல நன்மைகளும் அதிஷ்டகளும் தேடி வரும். இவர்கள் நாய் வளர்ப்பதை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்:

விருச்சிகம் ராசிக்காரர்கள் கோழி இனத்தை சேர்ந்த எந்த விதமான பறவைகளை வேண்டுமாலும் வளர்க்கலாம். இது போன்ற பறவைகளை வளர்ப்பதால் பல அதிஷ்டங்களை பெற்றுத்தரும். அப்படி பறவைகள் வளர்க்க முடியவில்லை என்றால் அதிகம் புழங்கும் இடத்தில் பறவைகளின் படத்தை வைப்பது நல்லது.

தனுசு:

தனுசு ராசிக்காரர்கள் பசு மாடு வளர்ப்பது நல்ல அதிஷ்டத்தை உண்டாக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதோடு யானை மற்றும் மயிலை படமாக வைத்து கொள்ளலாம்.

மகரம்:

மகர ராசிக்காரர்கள் கழுத்தை பன்றி போன்றவற்றை வளர்ப்பதால் நல்ல அதிஷ்டத்தை தரும் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால்  இதை வீட்டில் வளர்க்க முடியாது, படமாக மாட்டி வீட்டில் வைப்பதால் அதிஷ்டகள் ஏற்படும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்கள் காக்காவுக்கு உணவு தருவது நல்லது, இவர்கள் love birds, பஞ்சவர்ண கிளி, புறா போன்ற எந்தவிதமான பறவையாக இருந்தாலும் வளர்க்கலாம். நாய் வளர்க்க கூடாது.

மீனம்:

மீன ராசிக்காரர்கள் ஆடு, மீன், கோழி போன்ற விலங்குகளை வளர்ப்பது நல்லது. இது போன்ற விலங்குகளை வளர்ப்பதால் அதிஷ்டத்தை தரும் மற்றும் நேர்மறை ஆற்றலை உண்டாகும், குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும்.

 

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>www.pothunalam.com