பெத்தலையில் பிறந்தவரைப் பாடல் வரிகள் | Bethalayil Piranthavarai Lyrics in Tamil

Advertisement

Peththalaiyil Piranthavarai Song Lyrics in Tamil!!!

பொதுவாகவே பக்தி பாடல்கள் என்றால் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். ஒவ்வொரு சீசனுக்கு ஏத்த மாதிரி ஒவ்வொரு விதமான பாடல்கள் ஹிட் ஆகும். சொல்லப்போனா கார்த்திகை மாதம் வந்தாலே ஐயப்ப பாடல்கள் மாதிரி, டிசம்பர் மாதம் வந்தா கிறிஸ்துமஸ் பாடல்கனு, பக்தி பாடல்களுக்கு ஒரு எண்டே கிடையாது.
டிசம்பர் பிறந்தாலே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமா அந்த நாளா எல்லாரும் கொண்டாடுவாங்க, அதற்கு ஏத்தமாதிரி பாடல்கள் பாடுவாங்க. இது கிறிஸ்துமஸ் நேரம் அல்லவே அதனால இயேசு கிறிஸ்துவின் பாடல்களை ஒவ்வொண்ணா எங்க இணையத்தளத்துல பதிவிட்டு வரோம். இப்போ இந்த பதிவுல பெத்தலையில் பிறந்தவரை (peththalaiyil piranthavarai song lyrics in tamil) என்ற பாடல் வரிகள பதிவிட்டிருக்கோம், இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்னு நினைக்கிறேன்..

Bethalayil Piranthavarai Lyrics in Tamil:

பெத்தலையில் பிறந்தவரைப்

போற்றித் துதி மனமே – இன்னும்

1. சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர் – இங்கு
தாழ்மையுள்ள தாய்மடியில் தலைசாய்க்கலானார்

2. சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார் – இங்கு
பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார்

3. முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே

4. ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங்கொண்டோர் – இங்கு
ஆக்களட சத்தத்துக்குள் அழுது பிறந்தார்

5. இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை – நாம்
எண்ணமுடன் போய்த்துதிக்க ஏகிடுவோமே

மேலும் இதுபோல பாடல்வரிகள தெரிஞ்சிக்க எங்களுடன் (pothunalam.com) இணைந்திருங்கள்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal
Advertisement