நீங்கள் பிறந்த கிழமையும் செய்ய வேண்டிய வழிபாடுகள்

பிறந்த கிழமை பலன்கள்| Pirantha Kizhamai Palangal

பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் வைத்து பலன்கள் தெரிந்து கொள்வது போல பிறந்த கிழமை வைத்தும் ஒருவரின் பண்புகள் மற்றும் அதனால் வரும் தீமைகள் பற்றியும், அந்த தீமைகளுக்கான வழிபாடுகள் பற்றியும் தெரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் நாம் இன்றைய ஆன்மிகம் பகுதியில் நீங்கள் பிறந்த கிழமையில் உங்களுக்கான பலன்களையும், செய்ய வேண்டிய வழிபாடுகள் பற்றியும் பார்க்கலாம் வாங்க.

ஞாயிற்றுகிழமை பிறந்த பலன்:

ஞாயிற்றுகிழமை பிறந்த பலன்

  • ஞாயிற்றுகிழமையில் பிறந்தவர்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும், கஷ்டமான வேலைகளை தங்களுடைய ஆற்றலால் எளிமையாக முடிக்க கூடியவர்களாக இருப்பார்கள்.
  • மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்களாகவும், போட்டி மனப்பான்மை மற்றும் ஆளுமைதிறன் உடையவர்களாக இருப்பார்கள்.
  • தன்னுடன் இருப்பவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள்.

வழிபாடுகள்:

  • இந்த தேதியில் பிறந்தவர்கள் அதிகாலையில் எழுந்து ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வது மிகவும் நல்ல பலன்களை கொடுக்கும். தெய்வ வழிபாடு செய்யும்போது கோதுமையால் செய்யப்பட்ட நெய்வேய்தியம் செய்தால் நல்லது.

திங்கட்கிழமை பிறந்த பலன்:

பிறந்த கிழமை பலன்

  • இந்த கிழமையில் பிறந்தவர்கள் பொறுமை குணம் உடையவர்களாகவும், அமைதியான மனம் படைத்தவர்களாகவும் இருப்பார்கள். நகைச்சுவை பேச்சால் மற்றவர்களை எளிதில் கவர்ந்து விடுவார்கள்.
  • நல்ல கற்பனை வளம் கொண்டவர்களாக இருப்பார்கள். தர்ம நியாயங்களை கடைபிடிப்பவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு சொந்த தொழில் கை கொடுக்கும்.

வழிபாடுகள்:

  • திங்கட்கிழமையில் பிறந்தவர்கள் தாயை வணங்கி ஆசி பெறுவதால் நல்ல பலன்களை அடையலாம். சக்தி கோவிலுக்கு சென்று வெள்ளை பூக்களால் அர்ச்சனை செய்து கற்கண்டு நெய்வேய்தியம் செய்தால் நல்லது.

செவ்வாய்க்கிழமை பிறந்த பலன்:

செவ்வாய்க்கிழமை பிறந்த பலன்

  • இவர்கள் செய்யும் செயலில் வெற்றி அடைய கூடியவர்களாக இருப்பார்கள். குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். பிரச்சனைக்கு போக மாட்டர்கள், ஆனால் வந்த சண்டையை விட மாட்டார்கள்.
  • உதவும் குணம் கொண்டவர்கள், நியாயம், தர்மத்திற்கு, கட்டுப்பட்டவர்கள். மற்றவர்களிடம் ஆலோசனை கேட்பார்கள் ஆனால் இறுதியில் தான் நினைப்பதே சரி என்ற மனப்போக்கு உடையவர்களாக இருப்பார்கள்.

வழிபாடுகள்:

  • காலையில் முருகப்பெருமனை அரளிப்பூவால் அர்ச்சனை செய்தால் நல்லது நடக்கும். மாலையில் பைரவரை வழிபடுவது நல்லது.

புதன்கிழமை பிறந்த பலன்:

pirantha kilamai palangal

 

  • இந்த கிழமையில் பிறந்தவர்கள் இளமையான தோற்றமும், நல்ல பேச்சாற்றலும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
  • இவர்கள் கல்வியில், தொழிலில் சிறந்து விளங்குவார்கள். தன்னுடைய செயலை முடிப்பதற்கு எதையும் செய்வார்கள். ரகசியத்தை பாதுகாக்க கூடியவர்கள், தெய்வபக்தி அதிகம் உடையவர்கள்.

வழிபாடுகள்:

  • அதிகாலையில் துளசி மற்றும் மரிக்கொலுந்தால் மகாவிஷ்ணுவை வழிபட்டால் நல்லது நடக்கும். கடவுளுக்கு பாசிப்பயறு சுண்டல் நெய்வேய்தியம் செய்தால் நல்லது.

வியாழக்கிழமை பிறந்த பலன்:

வியாழக்கிழமை பிறந்த பலன்

  • இந்த கிழமையில் பிறந்தவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். செல்வ செழிப்புடன் வாழ்வார்கள். மற்றவர்களை நல்வழிப்படுத்துவதில் வல்லவர்களாக இருப்பார்கள்.
  • இவர்கள் எந்த துறையில் பணிபுரிந்தாலும் அதில் முன்னேற்றம் காண்பார்கள், உறவினர்களுக்கு உதவும் குணம் படைத்தவர்கள்.

வழிபாடுகள்:

  • சூரிய உதயத்திற்கு முன் தட்சிணாமூர்த்தி அஷ்டகத்தை பாராயணம் செய்வது நல்லது. மஞ்சள் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
  • கருட தரிசனம் செய்வது மிகவும் நல்லது.

வெள்ளிக்கிழமை பிறந்த பலன்:

pirantha kilamai palangal

 

 

  • இந்த கிழமையில் பிறந்தவர்கள் தம்முடைய பேச்சாற்றலால் மற்றவர்களை தன் வயப்படுத்துவார்.
  • தமது பேச்சை கேட்காதவர்களை புறக்கணித்து விடுவார்கள். எந்த வேலையையும் சிரமம் இல்லாமல் பூர்த்தி செய்வார்கள். கணவன் அல்லது மனைவியின் அளவற்ற அன்பையும், பாசத்தையும் கொண்டிருப்பார்.

வழிபாடுகள்:

  • அதிகாலையில் எழுந்து நீராடி மல்லிகைப் பூக்களால் ஸ்ரீராஜராஜேஸ்வரி அஷ்டகம், ஸ்ரீலலிதா திரிசதி ஆகியவற்றை பாராயணம் செய்வது சிறப்பு.
  • பால், பழம், கற்கண்டு, தேன் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வழிபடுவது விசேஷம்.

சனிக்கிழமை பிறந்த பலன்:

சனிக்கிழமை பிறந்த பலன்

  • இந்தக் கிழமையில் பிறந்தவர்கள் பொறுமைசாலிகள். வேலை என்று வந்துவிட்டால் அதை முடித்துவிட்டே மற்ற வேலைகளைத் துவங்குவர்.
  • சான்றோரிடமும் ஆன்றோரிடமும் மிகுந்த பக்தி உள்ளவர். எப்போதும் தான் உண்டு தன்வேலை உண்டு என நினைப்பவர்

வழிபாடுகள்:

  • காலையில் எழுந்து நீலாம்பரம், நீல சங்குபூ, வில்வம் சாற்றி சிவனாரை வழிபடுவது சிறப்பு. சிவாலயங்களில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபட்டு வந்தால் தோஷங்கள் நீங்கும்.
  • வீட்டில் பூஜைக்கு பிறகு காகத்துக்கு எள் கலந்த நெய்சாதம் இடவேண்டும். கருட தரிசனமும் நலம் பயக்கும்.
பிறந்த தேதி பலன்கள்

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்