பிறந்த நேரம் தேதி இரண்டும் தெரியாது வாழ்க்கை பலன்களை எப்படி பார்ப்பது | Pirantha Thethi Jathagam in Tamil

Pirantha Thethi Jathagam in Tamil

பிறந்த தேதி நேரம் வைத்து ஜாதகம் 

நண்பர்களே வணக்கம் இன்று ஆன்மிகம் பதிவில் பிறந்த தேதி நேரம் தெரியாது ஆனால் வாழ்க்கை பலன்களை எப்படி தெரிந்துகொள்வது. என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். பொதுவாக ஜாதகம் பார்த்து பொருத்தம் சரியாக  இருந்தால் மட்டும் தான் கல்யாண பேச்சி வார்த்தையை பற்றி பேசுவார்கள்.

ஆனால் இன்னும் சிலர் ஜாதகம் பார்க்காமல் கூட கல்யாணம் செய்து நன்றாக வாழ்கிறார்கள். அதற்கு காரணம் அவர்கள் கை ரேகை வைத்து  பலன்கள் பார்த்து கல்யாணம் செய்கிறார்கள்.

உங்கள் ஜாதகம் யோக ஜாதகமா?

பிறந்த தேதி நேரம் வைத்து ஜாதகம்:

  • குழந்தை பிறக்கும் போது நன்றாக பிறக்க வேண்டும் என்பதில் மிகவும் அச்சத்தில் இருப்பார்கள் அதனால் குழந்தை பிறக்கும் போது அவர்கள் பிறக்கும் நேரத்தை குறிக்காமல் பதட்டத்தில் விட்டு விடுவார்கள். அதற்காக ஜாதகம் இல்லாமல் யாரும் வாழ்வதில்லையா என்ன?
  • ஜாதகம் பார்த்து வாழ்வதை விட பார்க்காமல் நன்றாக வாழ்கிறார்கள். இருந்தாலும் ஜாதகம் பார்த்து இருந்தால் இன்னும் நன்றாக வாழ்ந்திருக்கலாம் என்று எல்லோரு மனதிலும் இந்த எண்ணம் தோன்றிருக்கும். பிறந்த தேதி நேரம் இல்லாமல் ஜாதகம் பார்க்கிறார்கள்.

கை வடிவமைப்பு:

  • முதலில் கைகளில் பார்ப்பது விரலின் அம்சங்கள் தான் ஒவ்வொரு விரலுக்கும் ஒவ்வொரு அம்சங்கள் உள்ளது. அது படி உங்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
  • இரண்டாவதாக உள்ளங்கையில் உள்ள கிரக ரேகைகளை வைத்து கணித்த பின் ஜாதகம் இல்லாதவர்களுக்கு பலன்கள் ஜோதிடர்கள் சொல்வார்கள்.
  • சிலருக்கு கைகளில் சில விதமான வித்தியாசமான குறியீடுகள் இருக்கும். அது அவர்களுக்கு அதிஷ்டமாக இருக்கலாம் இல்லையென்றால் அது அவர்கள் வாழ்க்கைக்கு அது நஷ்டத்தையும் கஷ்டத்தையும் தரும். இதை வைத்தும் அவர்களின் ஜாதக பொருத்தை பார்ப்பார்கள்.
  • உள்ளங்கையிலுள்ள கிரக மேடுகள். ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கும். அதற்கு ஏற்றது போல் வாழ்க்கை துணை அமைந்தால் உங்களின் வாழ்க்கை நன்றாக அமையும். ராசி பார்த்து அவர்களின் ஜாதகம் பொருத்தம் பார்ப்பார்கள். கைகளில் முக்கியமாக பார்க்கப்படுவது சூரிய மேடு, சந்திர மேடு, குரு மேடு, புதன் மேடு பல கிரக மேடுகள் உள்ளன அதில் சதுரக் கை, சங்கு கை, வட்டக் கை என மூன்று வகைகளும் நன்றாக அமைந்தால் அவரின் வாழ்க்கை நனறாக அமையும். அதுமட்டுமில்லாமல் அவர் அதிர்ஷ்டம் வாய்ந்தவராக இருப்பார்கள். ஜாதகம்  இல்லாதவர்கள் இது போல் கைரேகை கிரக மேடுகளை வைத்து கணித்து பொருத்தம் பார்த்து அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று சொல்வார்கள்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்