பிறந்த நாளில் செய்ய கூடாதவை
ஒருவரின் பிறந்தநாள் என்பது சாதாரண நாள் அல்ல. அது ஒரு மகத்தான நாள். இந்த உலகிற்கும் உங்களுக்கும் தொடர்பு ஏற்பட்ட நாள். தங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவத்தை பலர் உணரவேயில்லை. சி பேர் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடுவார்கள். சில பேர் பிறந்த நாளை இது என்ன கொண்டாடுறது வயசு ஆகுறதெல்லாம் கொண்டாட முடியுமா.! வேற வேலையில்லயா என்று கேட்பார்கள். நம் முன்னோர்கள் பிறந்த நாள் தான கோவிலுக்கு போய்ட்டு வா என்று கூறுவார்கள். இப்படி ஆன்மிகத்தில் பல கருத்துக்கள் உள்ளது. அதனால் தான் இந்த பதிவில் பிறந்த நாளன்று என்னவெல்லாம் செய்ய கூடாது என்று அறிந்து கொள்வோம் வாங்க..
பிறந்த நாளன்று செய்ய கூடாதவை:
பிறந்த நாளன்று ஏதவாது உடல் நல பிரச்சனைக்காக புதிதாக மருந்துகளை சாப்பிட கூடாது.
அன்றைய நாள் திருமணம் மற்றும் வளைக்காப்பு செய்ய கூடாது.
நீங்கள் அசைவ உணவுகளை சாப்பிடவும் கூடாது, மற்றவர்களுக்கும் விருந்து அளிக்கவும் கூடாது.
பிறந்த நாளன்று கேக் வெட்டுவீர்கள், அதில் மெழுகுவர்த்தி ஏற்றப்படும், அதன் பிறகு இதனை அணைத்து விட்டு கேக் வெட்டுவீர்கள், இது போல செய்தல் கூடாது. மெழுகுவர்த்தியை நீங்க வாயால் ஊதி அணைக்க கூடாது.
மற்றவர்களிடம் வீண் விவாதம், சண்டை போன்றவை அன்றைய தினம் கண்டிப்பாக வச்சுக்க கூடாது.
பள்ளியில் ஆசிரியர்களாக இருப்பீர்கள், அல்லது காவல் துறையில் வேலை பார்ப்பீர்கள், அல்லது வேறு ஏதேனும் துறைகளில் இருந்தாலும் சரி உங்களின் பிறந்த நாளன்று மற்றவர்களை தண்டிக்க கூடாது.
உங்களுடைய சொத்துக்கள் பற்றிய விவரத்தை அன்றைய நாள் நெனெகல் மற்றவர்களிடம் சொல்ல கூடாது.
பிறந்த நாளில் திருமணம் செய்யலாமா..?
பிறந்த நாளன்று செய்ய வேண்டியவை:
காலையில் எழுந்து தலை குளித்து விட்டு புத்தாடைகள் ஏதும் இருந்தால் அணிந்து கொள்ளலாம். இந்த புத்தாடைகளை வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களிடம் குங்குமத்தை ஆடைகளில் வைத்து விட்டு அதன் பிறகு அதனை அணியலாம்.
பெற்றோர் மற்றும் வீட்டில் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும். இவர்களின் கையால் இனிப்புகளை வாங்கி சாப்பிட வேண்டும்.
குலதெய்வம் அல்லது வீட்டில் பக்கத்தில் உள்ள கோவிலுக்கு சென்று வரலாம்.
கோவிலில் உங்களின் பெயர் மற்றும் ராசி, நட்சத்திரம் சொல்ல அர்ச்சனை செய்ய வேண்டும்.
புதிதாக சொத்துக்கள், வாகனங்கள் போன்றவை வாங்கலாம்.
மேலும் அன்றைய நாள் உங்களால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்ய வேண்டும்.
நீங்கள் புதிதாக கற்க விரும்பினாலோ அல்லது பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்ல விரும்பினால் அன்றைய நாள் செல்வது சிறந்ததாக இருக்கும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |