Pitru 108 Potri Lyrics in Tamil | பித்ரு 108 போற்றி
பொதுவாக வருடா வருடம் நம்முடைய முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்..! இதனை தர்ப்பணம் செய்வது என்றும் சொல்வார்கள். அப்படி செய்யும் போதும் இதனை எதனால் செய்கிறோம் என்றால் நம்முடைய முன்னோர்கள் மேலோகத்திலிருந்து நம்மை ஆசீர்வாதம் செய்து நாம் செய்யும் தர்ப்பணத்தை அவர்கள் உண்டு, அவர்கள் ஆசிர்வாதம் செய்வார்கள். அப்படி நாம் தர்ப்பணம் செய்யும் போதும் சரி அதேபோல் வீட்டில் அமாவாசை நாட்களில் விரதம் இருக்கும் போது இந்த மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் அவர்களின் ஆசிர்வாதம் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். ஆகவே அந்த நாட்களில் இதுபோன்ற மந்திரங்களை சொல்லி அவர்களை வணங்குவது நல்லது.
அமாவாசை நாட்களில் பித்ருக்களை வழிபடும்போது பித்ருகளை திருப்திப்படுத்த பித்ரு 108 போற்றி மந்திரங்களை கூற வேண்டும். பித்ரு 108 போற்றி மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம், பித்ரு தோஷங்கள் நீங்கி, முன்னோர்களின் ஆசி கிடைக்கும். எனவே, பித்ருக்களை வழிபடுவதற்கு உகந்த நாளாக இருக்கும் தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை போன்ற நாட்களில் பித்ருக்களின் 108 மந்திரத்தை கூற மறந்து விடாதீர்கள்.
Pitru 108 Potri Lyrics in Tamil:
ஓம் ஸ்ரீ சூரிய நாராயண தேவதா மூர்த்தி போற்றி
ஓம் ஸ்ரீ வசுபித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீ ருத்ரப் பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீ ஆதித்யப் பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீஜெய க்ஷீராஸ் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீதரணி பந்து பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீ ஸரயு பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீ கும்ப சோபித பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீச்ரவண பாத பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீ ருத்ர தரணி பந்து பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீவலம்பரப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீதன்வந்த்ரீ லோக சடாட்சர ஸ்ரீவாரி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீசுதவாணி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீகஜபுஜ பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீபிரமாம்புல பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீரீதாம்பரப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீகடாட்ச வாணி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீசதவேத பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீமேத விதான பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீஸ்கந்த கோஷ்ட பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீஸ்கந்த லோக பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீபார்திப ப்ரித்விக் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீபருதி பவித்ரப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீகோதாயன பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீஸ்வர்ண மாதவ பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீகோமதி லோக கோதாயன பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீமங்கள தேவ பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீ வரிவஸ்யப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீஹரி கடாட்ச வாணி பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீபகுள சோபித பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீபூவர்த்தன காயத்ரீ மண்டல பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீவேதராஜ பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீஔஷத தண்டுல பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீஔஷத லோகப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீபிரசன்ன பாத பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீபந்து தரணி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீகாரணீய பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீ ச்ராவண பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீவாமன கண பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீ சாண்டில்யப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீசந்தான உதக கும்ப பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீதச பூர்வபித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீவாயு பித்ரு தேவதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீசூரிய லோக பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீசாந்த ருத்ர குண பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீஜல த்வீப பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீசப்த த்வீப பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீஅஷ்ட சுத பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீசூரிய வம்ச பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீக்ஷீர அம்ருத பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீ வாதுல்ய தரணிப் பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீஅதிதி லோக பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீஅங்காரக லோக பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீமார்க விதான பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீகாச்யப தரண பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீஜெய மார்த்தாண்ட பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீமுகுந்தா வர்தன பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீபுரவாஸ பித்ருதேவதைகள் போற்றி
ஓம் ஸ்ரீகஜோ புத பித்ருதேவதைகள் போற்றி
ஓம் ஸ்ரீபிரகத பித்ருதேவதைகள் போற்றி
ஓம் ஸ்ரீதண்டுலப் பித்ருதேவதைகள் போற்றி
ஓம் ஸ்ரீசகரப் பித்ருதேவதைகள் போற்றி
ஓம் ஸ்ரீபித்ரு அதிகார பூஷண பித்ருதேவதைகள் போற்றி
ஓம் ஸ்ரீபித்ரு சண்டேஸ்வரர் தேவதைகள் போற்றி
ஓம் ஸ்ரீபித்ரு துவார பாலக தேவதைகள் போற்றி
ஓம் ஸ்ரீநாகப் பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீகுசஸ்பதி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீசந்தான மாத்ரயப் பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீபரிபாலய பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீசந்தன சந்திராதித்ய பித்ரு தேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீகல்பித பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீவாரிலோக பித்ருதேவதா போற்றி
ஓம் ஸ்ரீகுரு மஹாதேவ தீர்கதரிசி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீஜீவ சௌபாக்ய தீர்கதரிசி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீமதுலித முராரி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீஆயுஷ்யதன பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீதிட தீர்க தரிசி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீப்ரவேச தீர்கதரிசி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீகர்ம பரிபாலன தீர்கதரிசி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீகாருண்ய தீர்கதரிசி பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீதவபர ஔஷத பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
ஓம் நம சிவாய மந்திரம் மற்றும் சிவனின் 108 போற்றி
ஓம் ஸ்ரீமாளா சாங்க்ய பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீஸ்வர்ணவதி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீஜல தீப பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீஜல மண்டல பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீகடக தேவதை பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீபவதாரண்ய பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீபுண்டரீக மண்டல பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீகாயத்ரீ சவிதா மண்டல பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீசந்தான உதக கும்ப பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீசப்த தீப பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீஅஷ்ட சுத பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீகாருண்ய பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீபிரசன்ன பரசத் விக பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீ கர்த்தம பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீதரணி பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீபித்ரு மஹா தேவதைகள் போற்றி
ஓம் ஸ்ரீஜெய மாங்கல்ய பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீஜீவ சௌபாக்ய பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீவாராஹி வரவாரண பித்ரு தேவதாமூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீபுருஷோத்தம மண்டல பித்ருதேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீபித்ரு கணதேவதைகளே போற்றி
ஓம் ஸ்ரீபித்ரு நட்சத்திர தேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீபித்ரு ஹோம தேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீபித்ரு யக்ஞ தேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீதர்ப்பண தேவதா மூர்த்திகள் போற்றி
ஓம் ஸ்ரீபித்ரு தேவக்ரஹங்கள் போற்றி
ஓம் ஸ்ரீபித்ருபத்னிகள்தேவதா மூர்த்திகள் போற்றி
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |