அகத்தியர் கூற்றுப்படி வீட்டில் வளர்க்க கூடாதவை
மரம் செடி கொடிகளை வளர்ப்பது வீட்டிற்கு மட்டும் அல்லது சுற்றுசூழலுக்கு நல்லது. மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்பார்கள். மரங்கள் மக்கள் உயிர்வாழ முக்கிய காரணியாக இருப்பதில் சந்தேகமில்லை, ஆனால் சில மரங்கள் அவை இருக்கவேண்டிய இடங்களை பொருத்து அதன் முக்கியத்துவம் மாறுபடுகிறது. நாம் வீட்டில் அழகு செடிகள் தொடங்கி பழங்களை தரக்கூடிய விதவிதமான செடிகளை நாம் வளர்ப்போம். அவற்றால் நமக்கு சுற்றுசூழல் சார்ந்த பிரச்சனைகள் இருக்குமா என்றால், கண்டிப்பாக இருக்காது ஆனால், ஒரு சில மரங்களை வீட்டிற்கு அருகில் வளர்க்க கூடாது என்பது ஐதீகம். இப்படி வீட்டிற்கு அருகில் வளர்க்க கூடாத செடிகளும் அவற்றால் உருவாகும் பிரச்சனைகளை பற்றி உங்களுக்கு தெரியுமா? அப்படி உங்களுக்கு தெரியவில்லை என்றால் கவலை வேண்டாம். இந்த பதிவில் வீட்டில் வளர்க்க கூடாத மரங்கள் என்ன என்ன? அதை என் வளர்க்க கூடாது என்று இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம் வாருங்கள்.
வீட்டில் வளர்க்க கூடாத செடிகள்:
அகத்தியரின், அகத்தியர் புனசுருட்டு என்னும் படைப்பில் வீட்டில் வளர்க்க கூடாத 17 வகையான செடிகளை பட்டியலிட்டுள்ளார்.
உங்க வீட்டில ஒரு பையன் இருந்தா இந்த மரத்தை வளர்க்காதீங்க..
ஆன்மிகம், அறிவியல் காரணிகளால் இந்த மரங்கள் வீடுகளில் வளர்ப்பது நல்லது அல்ல என்று கூறியுள்ளார்.
“பருத்தியகத்தி பனை நாவலத்தியும் எருக்கு
வெள்ளெ ருக்கு ஏற்றபுளி வேலன் முறுக்கு
கல்யாண விருட்ச மும் செருக்குமே பெரும்
பாதாள மூலியும் கரும்பூ மத்தை இலவமும்
வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிர
வேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்ச மும்
நிருத்தஞ் செய்திடும் கேளுங் குடிகட்கே
குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும்
குடிகெடுக்கு மாகாத விருட்சமப்பா மிடியாகி
குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசாதி
ராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு
இடறுமாகி அப்பனே நாடு நகர் மதியும் விட்டு
குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே
பரதேசியாயிருப்பார் பாரே”
அதாவது மேலே கூறியுள்ள பதிப்பில் உள்ள செடி, மரங்களை வீட்டில் வளர்க்க கூடாது.
1.பருத்தி:
பருத்தி செடிகள் எதிர்மறையான ஆற்றலை கொண்டுள்ளதாக கருதப்படுகிறது. அதனால் பருத்திச்செடிகளை வீட்டில் வளர்க்க கூடாது.
பருத்தி செடிகளில் தூசிகள் அதிகம் உருவாகும் இதனால் உடல் நல பாதிப்பு ஏற்படும்.
2.அகத்தி:
3.பனை:
வாஸ்து சாஸ்திரத்தின் படி, பனை மரங்களை ஒருபோதும் வீட்டில் நடக்கூடாது என்று சொல்லப்படுகிறது. பனை மரம் வளர்த்தால் வீட்டில் வறுமை ஏற்படும் என நம்ப படுகிறது. அதாவது பனை வரம் வளர்த்தல் நிதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
4.நாவல்:
நாவல் மரத்தின் குளிர்ச்சி மற்றும் அதன் தட்ப வெட்பத்திற்கு நச்சு தன்மை வாய்ந்த பூச்சிகளை ஈர்க்கும் சக்தி அதிகம் . அதனால் நாவல் செடிகளை வீட்டிற்கு அருகில் வளர்க்க கூடாது.
5.அத்தி மரம்:
அத்தி பழம், வௌவால் அதிகம் விரும்பும் பழ வகைகள் ஆகும். அதனால் வௌவால் அதிகம் அத்தி மரங்களில் குடியிருக்கும் இதனால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அத்தி மரங்களை வீட்டிற்கு அருகே வளர்க்க கூடாத மரம் என்று அகத்தியர் கூறுகிறார்.
6.எருக்கு:
7.வெள்ளெருக்கு:
8.புளியமரம்:
வீட்டு வளாகத்தில் புளியமரத்தை வளர்க்கக்கூடாது. புளியமரம் அருகில் வீடு கட்டுவதையும் தவிர்க்க வேண்டும். புளியமரத்தின் வேர்கள் சீக்கிரம் வளரக்கூடியது. அவை உங்கள் வீடுகளை சேதப்படுத்தும் வல்லமை கொண்டது.
9.கருவேலன்:
10.முருங்கை:
11. கல்யாண முருங்கை:
12.கள்ளி:
கள்ளிச்செடி வீட்டில் மோசமான சக்தியை கடத்தும். இந்த செடிகள் வீட்டில் துரதிர்ஷ்டத்தை கொண்டு வருகிறது. மேலும் கூர்மையான முட்கள் குடும்பத்திற்குள் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
13.கருவூமத்தை:
14.இலவம் :
15.வில்வம்:
16.உருத்திராட்சம்:
17.உதிரவேங்கை:
இந்த 17,வகைகளை வீட்டில் வளர்க்கவே கூடாது. இருக்கா ?
பித்ரு பக்ஷத்தின் கடைசி நாளில் வரும் சூரிய கிரகணத்தால் பலன்கள் அடையும் ராசிகள் …
மண்ணே இல்லாமல், 5 நாளில் கொத்தமல்லியை உங்க வீட்டிலேயே வளர்க்கலாம் ..
வீட்டில் இருக்க கூடாத பொருட்கள் மீறி வைத்திருந்தால் பணம் கஷ்டம் தான்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |