போகி அன்று அசைவம் சாப்பிடலாமா
தை மாதம் என்றாலே பொங்கல் தான் நினைவிற்கு வரும். தை மாதம் பிறப்பதற்கு முன் 15 நாட்களுக்கு முன்பே வீட்டை ஒட்டடை அடித்து, வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சுத்தம் செய்வார்கள். மேலும் வீட்டில் பெயிண்ட் அடித்து வீட்டை அழகு படுத்துவார்கள். இந்த நாட்களில் பல கேள்விகள் இருக்கும். போகி அன்று செய்வது, பொங்கல் அன்று என்ன செய்ய வேண்டும், மாட்டு பொங்கல் அன்று செய்வது என்ற பல கேள்விகள் இருக்கும். இதற்கான பதில்கள் தான் நம்முடைய பதிவில் பதிவிட்டு வருகிறோம். அது போல போகி அன்று அசைவம் சாப்பிடலாமா என்ற கேள்வி பலரின் மனதில் இருக்கும். அதற்கு பதில் சொல்லும் விதமாக இந்த பதிவு இருக்கும்.
போகியின் மகத்துவம்:
மார்கழியின் கடைசி நாளில் கொண்டாடப்படும் போகி பண்டிகை “பழையன கழிதலும் புதியன புகுதலுமே” என்ற சாராம்சத்தை அடிப்படியாக கொண்டது. பழைய பொருட்கள் மற்றும் பயனற்றவையை தூக்கி எறியும் நாளாக இது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் வீட்டை தூய்மை செய்து பயன்படுத்தாத அல்லது தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துவது வழக்கம். மேலும் நம் மனதில் உள்ள தீய எண்ணங்களை நீக்கி விட்டு நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டும் என்பதையும் குறிக்கிறது.
போகியின் நம்பிக்கை:
போகி அன்று அசைவம் சாப்பிடலாமா என்பது முழுக்க முழுக்க நம்பிக்கைக்கு உரியதாக இருக்கிறது. பொதுவாக ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு நம்பிக்கை இருக்கும். நம்பிக்கை என்று சொல்வதை விட பாரம்பரிய பழக்க முறை என்று இருக்கும். இந்த பழக்க முறைப்படி தான் ஒவ்வொரு பண்டிகையையும் கொண்டாடுவார்கள்.
அது போல இந்த போகி பண்டிகையானது புதியதாக ஒரு தொடக்கத்தை தொடங்கும் நாளாக இருக்கிறது. ஆகவே இந்த நாளில் சில பேர் அசைவ உணவுகளை சமைக்காமல் சைவ உணவுகளை சமைப்பார்கள். அதுமட்டுமில்லாமல் இந்திரன், சூரியன், வீட்டு தெய்வங்களை வழிபடுவதால், சிலர் அசைவ உணவுகளை சமைக்காமல் இருப்பார்கள். மேலும் இன்றைய நாள் மது அருந்துவது மற்றும் பகலில் உறங்காமல் இருப்பது போன்ற செயல்களை தவிர்ப்பது நல்லது.
போகி அன்று எதை செய்கிறீர்களோ இல்லையோ இதை கட்டாயம் செய்திடுங்கள்
போகி அன்று அசைவம் சாப்பிடலாமா:
போகி அன்று அசைவம் சாப்பிடலாமா என்பது குடும்பத்தின் பழக்க வழக்கத்தை பொறுத்து மாறுபடும். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை பின்பற்றுங்கள். இந்த நாளில் மகிழ்ச்சியாக தொடங்குங்கள்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |