பொய்யின்றி மெய்யோடு பாடல் வரிகள்

Advertisement

பொய்யின்றி மெய்யோடு பாடல் வரிகள்

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் இந்துக்களுக்கு சிறப்புக்குரியதாக இருக்கிறது. எடுத்துக்காட்டிற்கு ஆடி மாதம் என்றால் கோவில்களில் விசேஷமாக இருக்கும். புரட்டாசி மாதம் என்றால் பெருமாளுக்கு உரியதாக இருக்கிறது. இணைத்த மாதத்தில் இந்துக்கள் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவார்கள்.

இது போல் மாதத்தில் சிறப்புக்குரியதாக கார்த்திகை மற்றும் மார்கழி மாதம் இருக்கிறது. ஏனென்றால் இந்த மாதத்தில் தான் ஐயப்பனுக்காக 48 நாட்கள் விரதம் இருந்து மலைக்கு செல்வார்கள். ஆகையால் இந்த மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் ஐயப்பனுடைய பாடல்களை கேட்பார்கள் மற்றும் பாடுவார்கள். அதனால் தான் இந்த பதிவில் பொய்யின்றி மெய்யோடு பாடல் வரிகளை அறிந்து கொள்வோம் வாங்க.

Poi Indri Meiyodu Lyrics in Tamil:

பொய்யின்றி மெய்யோடு பாடல் வரிகள்

பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம்
சபரியில் ஐயனை நீ காணலாம்

பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம்
சபரியில் ஐயனை நீ காணலாம்
அய்யப்பா சுவாமி அய்யப்பா
அய்யப்பா சரணம் அய்யப்பா
அவனை நாடு அவன் புகழ் பாடு
புகழோடு வாழவைப்பான் அய்யப்பன் -உன்னை
புகழோடு வாழவைப்பான் அய்யப்பன்
இருப்பது காடு வணங்குது நாடு
அவனைக் காண – தேவை பண்பாடு

பகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள்

அய்யப்பா சுவாமி அய்யப்பா
அய்யப்பா சரணம் அய்யப்பா
பூஜைகள் போடு தூய அன்போடு
பெயரோடு வாழவைப்பான் அய்யப்பன் -நல்ல
பெயரோடு வாழவைப்பான் அய்யப்பன்
அனைவரும் வாருங்கள் ஐயனை நாடுங்கள்
அருள் வேண்டும் அன்பரை எல்லாம் வாழவைப்பான் (x2)

அய்யப்பா சுவாமி அய்யப்பா
அய்யப்பா சரணம் அய்யப்பா

பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம்
சபரியில் ஐயனை நீ காணலாம்

அய்யப்பா சுவாமி அய்யப்பா
அய்யப்பா சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா

எங்கே ஓடுது எங்கே ஓடுது ஐயப்பன் பாடல் வரிகள்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement