தை பொங்கல் வைக்க சிறந்த நேரம் 2023 | Pongal 2023 Date and Time
நண்பர்களுக்கு வணக்கம்.. தை பொங்கல் என்பது தமிழர்களின் பாரம்பரிய அறுவடை திருநாள் ஆகும். தமிழகத்தில் இந்துக்கள் அனைவராலும் நான்கு நாள் கொண்டப்படும் ஒரு திருவிழா ஆகும். குறிப்பாக பொங்கல் என்றால் கிராமப்புறங்களில் தான் அதிகம் சிறப்பாக கொண்டாடுவார்கள். கிராமப்புறங்களில் இந்த நான்கு நாட்களிலும் விளையாட்டு போட்டி, கோலம் போட்டி, ஜல்லி கட்டு என்று நிறைய போட்டிகள் நடைபெறும். இவையெல்லாம் ஒரு வரிசையில் இருந்தாலும். தை பொங்கல் அன்று எந்த நேரம் பொங்கல் வைக்க வேண்டும் என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். அவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது இங்கு பொங்கல் வைக்க நல்ல நேரம் குறித்த தகவலை பதிவு செய்துள்ளோம் அவற்றை படித்து பயன்பெறுங்கள்..
பொங்கல் வைக்க உகந்த நேரம் 2023 | Pongal Vaikka Ugandha Neram 2023
பொங்கல் தேதி 2023:
மார்கழி மாதம் கடைசி தேதி அதாவது 14.01.2023 அன்று போகிப்பொங்கல்.
தை 1, அதாவது 15.01.2023 அன்று தை பொங்கல் கொண்டாடப்படுகிறது.
தை மாதம் 2-ஆம் தேதி அதாவது 16.01.2023 அன்று மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது.
அதற்கு அடுத்த நாள் அதாவது 17.01.203 அன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇 |
பொங்கல் திருநாள் கட்டுரை |
பொங்கல் நல்வாழ்த்துக்கள் | Pongal Wishes in Tamil |
தை பொங்கல் வைக்க நல்ல நேரம் 2023:
இந்த ஆண்டு தை பொங்கல் வைக்க உகந்த நாட்களை பற்றி பார்க்கலாம்.
பொங்கல் வைக்க சிறந்த நேரம் | |
காலை | 07.30 AM to 08.30 AM |
அதன் பிறகு | 10.30 AM to 11.30 AM |
மாலை | 03.30 PM to 04.30 PM |
மேல் கூறப்பட்டுள்ள நேரங்களில் நீங்கள் பொங்கல் வைக்கலாம்.
ராகு காலம் மற்றும் எமகண்டம்:
பொதுவாக ராகு காலம் மற்றும் எமகண்டம் ஆகிய காலங்களில் பொங்கல் வைக்க கூடாது. ஆக இந்த இரண்டு நேரங்களையும் முற்றிலும் தவிர்த்துக்கொள்ளவும்.
எமகண்டம் | மதியம் 12 PM முதல் 01.30 PM வரை |
ராகு காலம் | மாலை 04.30 PM முதல் 06.00 PM வரை |
மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம் 2023:
காலை: | 06.30 AM முதல் 07.30 AM வரை |
மாலை: | 04.30 PM முதல் 05.30 PM வரை |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |