இந்த பூச்சிகள் கனவில் வந்தால் கெட்டது நடக்குமா..?

Advertisement

Poochigal Kanavil Vanthal Enna Palan

நண்பர்களுக்கு வணக்கம்..! மனிதனாக பிறந்த அனைவருக்குமே கனவுகள் வரும். பொதுவாக நம் ஆழ்மனதில் இருக்கும் எண்ணங்கள் தான் கனவாக வருகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கு பின்னாலும் ஒரு பலன் இருக்கிறது. அதை தான் நாம் தினமும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று பூச்சிகள் கனவில் வந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம் வாங்க..!

நந்தி கனவில் வந்தால் என்ன பலன்

பூச்சிகள் கனவில் வந்தால் என்ன பலன்: 

பொதுவாக நம் அனைவருக்கும் ஒரே மாதிரியான கனவுகள் வரும் என்று சொல்ல முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள் வரும். சிலர் காணும் கனவுகளை பெரிய விஷயமாக எடுத்து கொள்ள மாட்டார்கள். ஆனால் சிலர் எந்த கனவாக இருந்தாலும் அதற்கு நல்ல பலன்களாக இருக்குமா அல்லது கெட்ட பலன்களாக இருக்குமா என்று யோசிப்பார்கள்.

அதுபோல சிலரின் கனவில் பூச்சிகள் வரும். அப்படி எந்த பூச்சிகள் வந்தால் என்ன பலன் என்று இங்கு காணலாம்.

பட்டாம் பூச்சி : பட்டாம்பூச்சி கனவில் வந்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும் என்று அர்த்தம். பிரிந்த சென்ற உறவுகள் வந்து சேரும் என்று அர்த்தம். அதுபோல பட்டாம்பூச்சி கூட்டமாக வீட்டை விட்டு வெளியே செல்வது போல் கனவு வந்தால் பண பற்றாக்குறை ஏற்படும்.

கரப்பான் பூச்சி : பெரும்பாலும் நம் அனைவரின் வீட்டிலும் கரப்பான் பூச்சி இருக்கும். அதை நாம் பார்த்துவிட்டு சென்றால் தூக்கத்தில் கரப்பான் பூச்சி தான் வரும். அப்படி கரப்பான்பூச்சி கனவில் வந்தால் குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்படும் என்று அர்த்தம்.

குலதெய்வத்தை கனவில் கண்டால் என்ன பலன்

ஈக்கள் : பெரும்பாலும் ஈக்கள் இல்லாத இடங்களே கிடையாது. சரி உங்கள் கனவில் ஈக்கள் வந்தால் வியாதிகள் வர வாய்ப்பு இருக்கிறது என்று அர்த்தம்.

வெட்டுக்கிளி : வெட்டுக்கிளி கனவில் வந்தால் செய்யும் தொழிலில் சில தடைகள் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது.

தேனீ : தேனீக்கள் கனவில் வந்தால் சில பிரச்சனைகள் ஏற்படும். அதாவது, பயணங்கள் அல்லது சாலைகளில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று அர்த்தம்.

பூரான் : நம் கனவில் பூரான் வந்தால் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு பணவரவு கிடைக்கும் என்று அர்த்தம்.

சிலந்தி : சிலந்தி பூச்சி நம் கனவில் வந்தால் பொருள் சேரும் வாய்ப்பு இருக்கிறது. சிலந்தி கூட்டை அழிப்பது போல கனவு கண்டால் நல்லதல்ல. அது குடும்பத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

கோவில் கனவில் வந்தால் என்ன பலன்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement