வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பூஜை அறையில் பல்லி சொல்லும் பலன்

Updated On: November 20, 2025 5:32 PM
Follow Us:
poojai araiyil palli sollum palan
---Advertisement---
Advertisement

பூஜை அறையில் பல்லி சொல்லும் பலன்

பொதுவாக வீடு என்று இருந்தால் பூச்சிகள் இருப்பது சாதாரணமானது தான். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பூச்சை கண்டால் அச்சம் ஏற்படும். அதில் பல நபருக்கும் பல்லிகளை கண்டால் அச்சமாக இருக்கும். சுவற்றில் ஏதவாது ஒரு பக்கத்தில் பார்த்தால் பல்லியானது இருக்கும். அதுமட்டுமில்லாமல் நாம் எதாவது நல்ல விஷயம் பற்றி பேசும் போது பல்லி சத்தம் போடும்.

அப்படி சத்தம் போடும் போது அந்த விஷயமானது நடக்கும் என்று ஆன்மிகத்தில் நம்பப்படுகிறது. சில பேர் வீட்டில் பூஜை அறையில் பல்லிகள் இருக்கும். இந்த பல்லி ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு திசையில் இருக்கும். அப்படி இருந்தால் நல்லதா கெட்டதா என்ற குழப்பம் இருக்கும். அதற்கு பதில் சொல்லும் பதிவாக இவை இருக்கும். சரி வாங்க பூஜை அறையில் பல்லி இருந்தால் என்ன பலன் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

பூஜை அறையில் பல்லி சொல்லும் பலன்:

பூஜை அறையில் பல்லி சொல்லும் பலன்

 ஆன்மிகத்தில் பூஜை அறையில் இருந்தால் நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த பல்லிகள் ஆனது லட்சுமி தேவியின் உருவமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் வீட்டில் செல்வ செழிப்பை அதிகரிக்கும். மேலும் உங்களுக்கு பண சம்மந்தமாக ஏதேனும் பிரச்சனை இருந்தால் அவை முடிவுக்கு வரும் என்பது அர்த்தமாக இருக்கிறது. 

பூஜை அறையில் பல்லி இருப்பது அதிர்ஷ்டமான ஒன்றாக இருக்கிறது. அதனால் நீங்கள் பயப்பட தேவையில்லை. இவை உங்களுக்கு நன்மையை மட்டும் கொண்டதாக இருக்கும்.  சில நேரங்களில் நாம் இந்த விஷயம் செய்யலாமா, செய்ய கூடாதா போன்ற செய்திகளை பற்றி பேசும் போது பல்லி சத்தப்போடும்.அப்படி சத்தப்போடும் போது இந்த விஷயங்ககளை செய்யலாமா செய்ய கூடாதா என்ற குழப்பிலிருந்து வெளிவர முடியும்.

பூஜை அறையில் பல்லி இருந்தால், குலதெய்வத்தின் ஆசி கிடைக்கும் என்றும், கடன் பிரச்சினைகள் தீரும் என்றும் நம்பப்படுகிறது. பல்லி சத்தம் எழுப்புவது நல்ல அதிர்வுகளையும், நல்ல விஷயங்களையும் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது

எந்த கிழமையில் பல்லி சத்தம் போட்டால் என்ன பலன்கள் கிடைக்கும்..!

சில பேருக்கு பல்லியை விரட்டி விடலாமா இல்லை, அப்படியே விடலாமா என்ற பல சந்தேகம் இருக்கும். பல்லி இருந்தால் அப்படியே விடுங்ககள். ஒரு பிரச்சனையும் இல்லை. உணவை மட்டும் மூடி வையுங்கள். உண்வு மட்டுமில்லை சாப்பிடும் பொருட்கள் எதுவாக இருந்தாலும் அதனை மூடி வைத்து விடுங்கள்.

பல்லி இருப்பது நமக்கு பாசிட்டிவ் எனர்ஜியை கொடுக்கும். நாம் இந்த விஷயத்தை செய்யலாமா என்று வீட்டில் உள்ளவர்களிடம் கேப்பீர்கள். அப்போது பல்லி சத்தப்போடும், அப்போது நாம் கடவுளே உத்தரவு கொடுத்து விட்டார் தைரியமாக செய்யலாம்.

சில வீடுகளில் பல்லிகள் இருக்கும், ஆனால் சத்தம் போதாது, அதற்கு நீங்கள் சாம்பிராணி போடும் போது அதில் மருதாணி விதை பொடி கடையில் இருக்கும், அதனையும் சேர்த்து போட வேண்டும். இப்படி போடுவதன் வீட்டில் அடைப்பு இருந்தாலும் சரி, தெய்வ வாசம் இல்லாமல் இருந்தாலும் சரி இவை சரியாகும்.

பல்லி பூஜை அறையில் தாராளமாக இருக்கலாம், தெய்வ சக்தியின் பிராணியாக இருக்கிறது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now