வீட்டு பூஜை அறையில் வைக்க கூடாத சாமி சிலைகள்

Advertisement

பூஜை அறையில் வைக்க வேண்டிய சாமி சிலைகள் 

பொதுவாக இந்துக்கள் முறையில் செய்யும் செயல்கள் அனைத்திலும் சாஸ்திரம் சம்பிரதாயம் பார்ப்பது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் நம்முடைய வீட்டின் பூஜை அறையில் சாமி புகைப்படங்கள், சிலைகள், பூஜை பொருட்கள் என்று பலவை நிறைந்திருக்கும். இந்த பொருட்களில் ஈவா பூஜை அறையில் இருக்க வேண்டும், எவை இருக்க கூடாது என்று சிந்திப்பதில்லை. வாஸ்து சாஸ்திரம் படி சில கடவுள்களின் சிலைகளை வைக்க கூடாது என்று கூறியுள்ளது. இந்த சிலைகளை வைத்து வழிபடுவதால் எந்த பலனும் கிடைக்காது என்றும் உள்ளது. உங்கள் வீட்டில் கஷ்டங்கள் நேரிடும். அதனால் இந்த முழு பதிவை படித்து எந்த சிலைகள் வைக்க வேண்டும், எந்த சிலைகள் வைக்க கூடாது என்று அறிந்து  கொள்ளுங்கள்.

எந்த சிலைகளை வைக்க கூடாது:

காளி, பைரவர், ராகு கேது மற்றும் கோபம் அல்லது வன்முறை வடிவத்தில் உள்ள கடவுள்களில் சிலை மற்றும் பூஜை படங்களை வைக்க கூடாது. சனி பகவான் நீதியின் அதிபதியாக இருக்கிறார். இருந்தாலும் இவரை வீட்டில் சில வடிவில் வைத்து வழிபட கூடாது, மீறி வைத்தால் வீதி பல கஷ்டங்களை சந்திக்க நேரிடும்.

நரசிம்மர் சிலை:

பூஜை அறையில் வைக்க வேண்டிய சாமி சிலைகள் 

வாஸ்து சாஸ்திரம் பாடி நரசிம்மர் சிலையை வீட்டில் வைக்க கூடாது. இவரை வீட்டின் பூஜை அறையில் வைத்தால் சண்டைகளை ஏற்படுத்தும்.

நடராஜமூர்த்தி:

வீட்டின் பூஜை அறையில் சிவன் சிலையை வைத்திருக்கலாம். ஆனால் நடராஜமூர்த்தி சிலையை வைக்க கூடாது. இவரை வைப்பதால் வீட்டில் எப்போதும் சண்டையாகவே இருக்க கூடும்.

லட்சுமி தேவியின் சிலை:

லட்சுமி தேவி செல்வத்தின் உருவமாக இருக்கிறார். பெரும்பாலானவர்களின் இவரின் சிலையோ அல்லது படமோ இருக்க கூடும். அப்படி உங்கள் வீட்டில் லட்சுமி தேவி சிலை இருந்தால் அவற்றை தாமரையின் மீது வைக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் லட்சுமி தேவியை சிலையை வெறுமனே வைத்திருந்தால் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

உடைந்த சிலைகள்:

நீங்கள் விலை உயர்ந்த சாமி சிலைகளை வைத்திருக்கலாம். ஆனால் எதிர்பாராத விதமாக உடைந்திருக்க கூடும். அதனை நீங்கள் வீட்டில் வைக்காதீர்கள். ஏனென்றால் இதனால் மூலம் வீட்டில் சண்டையாகவே இருக்க கூடும். அதனால் உங்கள் வீட்டில் உடைந்த சிலைகள் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்துங்கள்.

பூஜை அறையில் இந்த படங்களை வைத்திருந்தால் உடனே எடுத்து விடுங்கள்

பூஜை அறையில் வைக்க வேண்டிய சிலைகள்:

பூஜை அறையில் வைக்க வேண்டிய சாமி சிலைகள் 

செல்வம் கிடைக்க லட்சமி தேவியின் சிலையை வைக்கலாம்.

தடைகள் நீங்கவும், நீங்க தொடர கூடிய செயல் ஆனது தொடங்கவும் விநாயகரைவழிபடலாம்.

கல்வி, ஞானம், புத்தி கிடைப்பதற்கு சரஸ்வதி தேவி சிலை வைத்திருக்கலாம்.

தர்மம், பாதுகாப்பு, நல்ல காரியங்கள் நடப்பதற்கு விஷ்ணு/ராமர்/கிருஷ்ணர் சிலை வைத்திருக்கலாம்.

ஆன்மிக சக்திக்கும், நல்ல வாழ்விற்கும் சிவ லிங்கத்தை வைத்திருக்கலாம்.

கடன் பிரச்சனை, குடும்ப அமைதிக்கும் முருக சிலையை வைத்து வழிபடலாம்.

எத்தனை சிலைகள் வைத்திருக்கலாம்:

நீங்கள் அதிகமான சிலைகளை வைத்திருக்க வேண்டாம். அதாவது 3 அல்லது 5சிலைகளுக்கு மேல் வைத்திருக்க வேண்டாம்.

சிலைகள் வைத்திருப்பது முக்கியமில்லை, அதற்கு தினசரி பூஜை, தீபம், நெய்வேத்தியம் வைத்து வழிபடுவது முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement