பூஜையறையில் வைக்க வேண்டிய மங்களகரமான பொருட்கள்….

Advertisement

பூஜையில் அறையில் கண்ணாடி 

ஒவ்வொருவரின் வீட்டிலும் பூஜை அறை என்பது கட்டாயம் இருக்கும். பூஜையறை இல்லாத வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் குறையும் என்பது ஐதீகம்.  பூஜை அறையில் நாம் செய்யக் கூடிய சிறு சிறு விஷயங்கள் கூட வீட்டில் சுபீட்சம் நிலைத்திருக்க காரணமாக அமையும். ஒருவருடைய பூஜை அறையில் என்ன என்ன பொருட்கள் இருக்கின்றது, எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து தான் அவர்களுடைய அவர்களுடைய வளர்ச்சியும் நிம்மதியும் இருக்கும்.

பூஜை அறையின் சூழல் அவர்களின் பக்தியின் நிலையை வெளிப்படும். தினமும் விளக்கேற்றும் வீடுகளில் அள்ள அள்ள குறையாத செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் பூஜை அறையில் இருக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை முழுமையாக படியுங்கள்…

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

பூஜையறையில் கண்டிப்பாக இருக்க வேண்டிய  பொருட்கள்:

மஞ்சள் தூள்:

மஞ்சள் தூள் முதற்கடவுள் விநாயகரின் ஒரு உருவமாக பார்க்கபடுகிறது. அதனால் கண்டிப்பாக பூஜை அறையில் மஞ்சள் இருக்க வேண்டும். பூஜை அறையில் பயன்படுத்தும் மஞ்சள் எந்த ஒரு கலப்படமும் இல்லாததாக இருக்க வேண்டும். வீட்டிலே மஞ்சளை அரைத்து அதனை பயன்படுத்தலாம்.

மஞ்சள் சிறந்த கிருமிநாசினியாகவும், ஒரு நேர்மறையான உணர்வை ஏற்படுத்த கூடியதாகவும் இருக்க வேண்டும்.

குங்குமம்:

மஞ்சள் துளோடு சேர்த்து தயாரித்த குங்குமம் பூஜை அறையில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

சந்தானம்:

சந்தனம் ஸ்ரீமஹாலக்ஷ்மியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. அதனால் சுத்தமான சந்தனம் எப்போதும் வீட்டு பூஜையறையில் இருக்க வேண்டும். அதன் மூலம் செல்வங்கள் பெருகும் என்பது நம்பிக்கை.

வீட்டில் எப்போதும் குறையாத அளவு பணமிருக்க வசம்பு மட்டும் போதும்..

தண்ணீர் ( ஜலம் ):

பூஜை செய்யும் பொழுது நீங்கள் தீர்த்தம் தயாரித்து வைக்காவிட்டாலும் பரவாயில்லை! ஆனால் கட்டாயம் தீர்த்த பாத்திரத்தில் தண்ணீர் மட்டுமாவது வைத்திருக்க வேண்டும். தண்ணீர் இல்லாமல் பூஜை செய்வது நல்லது அல்ல.

ஜலம் எந்தமாதிரியான எதிர்மறையான சக்தியையும் உள்வாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது. அதனால் உங்கள் பூஜை அறைகளில் அதனை வைப்பதால் உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறையான சக்திகள் குறையும்.

ஜலத்தை பஞ்ச பாத்திரத்தில் வைக்க வேண்டும். அல்லது தாமிர உலோகத்தில் ஆன  பாத்திரத்தில் வைக்க வேண்டும். நீங்கள் பூஜை ஆரம்பிக்கும் முன் வைக்கும் ஜலத்தை தினமும் மற்ற வேண்டும். முதல் நாள் வைத்த ஜலத்தை அடுத்த நாள் பூஜைக்கு முன் மாத்திவிட வேண்டும்.எதிர்மறையான

நீங்கள் சங்கு வைத்து  பூஜை செய்ப்பவர்கள் என்றால், சங்கில் எப்போதும் ஜலம் இருக்க வேண்டும். அதில் இருக்கும் தண்ணீரையும் தினமும் மாற்ற வேண்டும். சங்கு சமுத்திரத்தில் இருக்கும் பொருள் என்பதனால், அதனுள் எப்போதும் ஒரு ஓங்கார நதம் ஒளிந்துகொண்டு இருக்கும். அதற்கு சங்கில் எப்போதும் தீர்த்தம் இருக்க வேண்டும்.

பூஜை மணி:

அனைத்து வீட்டு பூஜையறையிலும் பூஜை மணி இருக்க வேண்டும். பூஜை மணியின் மேல் பகுதியில் நந்தி, ஹனுமன், சுதர்சன சக்கரம் இருக்குப்படியாக பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த தேவதைகள் அசுரனை அழிக்கும் வல்லமை பெற்றவர்கள் அதனால், உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறையான சக்திகளை எந்த மணி ஓசை கட்டு படுத்தும்.

பல முன்னேற்றங்களை தரும் ஆவணி மாதம் … ஆவணி மாத ராசிபலன்கள் 2023

முகம் பார்க்கும் கண்ணாடி:

பூஜை அறையில் கட்டாயம் இருக்க வேண்டிய கண்ணாடி.  உங்களுடைய குல தேவதை மற்றும் முன்னோர்கள் பூஜை அறையில் இருக்கும் கண்ணாடி வழியே தங்களை வெளிப்படுத்துவதாக சாஸ்திரம் சொல்லுகிறது.

நீங்கள் பூஜை செய்யும் பொழுதும் மற்ற நேரங்களிலும் அந்த கண்ணாடி பூஜை அறையில் இருக்க வேண்டும்.

அந்த கண்ணாடியில் குலதேவதையும் பித்ருக்களும் பிரதிபலிப்பார்கள். எனவே கட்டாயம் கண்ணாடியை பூஜை செய்யும் போது வைத்துக் கொள்ளுங்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement