பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லாம் இப்படி தான் இருப்பார்களா..?

Advertisement

Pooram Natchathiram

பொதுவாக ஒருவரின் குணத்தினை எளிமையாக அறிவது என்பது மிகவும் கடினம். ஏனென்றால் சிலர் வெளியில் பேசும் போது சாதாரணமாகா பேசுவார்கள். ஆனால் வீட்டில் வேறு மாதிரியாக இருப்பார்கள். இவர்களின் குணத்தினை புரிந்துகொள்வது என்பது நம்மால் முடியாத ஒன்றாக தான் இருக்கிறது. அதேபோல் ஒவ்வொருவரின் குணம் என்பது ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டு காணப்படுகிறது. இதன் படி பார்க்கையில் ஆன்மீகத்தில் 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்ளின் அடிப்படையில் ஒவ்வொருவரின் குணம் மற்றும் வாழ்க்கை ரகசியம் ஆனது சொல்லப்படுகிறது. அதனால் இன்று சிம்ம ராசி பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்றும் அவர்களின் வாழ்க்கை ரகசியத்தை பற்றியும் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!

பூரம் நட்சத்திரம் குணங்கள்:

 பூரம் நட்சத்திரம் குணங்கள்

ராசியில் 5-வது ராசியாகவும் நட்சத்திரத்தில் 16-வது நட்சித்திரமாக இருப்பது சிம்ம ராசி பூரம் நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக சுக்கிரன்  இருக்கிறார். அதனால்

இந்த நட்சத்திரக்காரர்கள் ஆளுமை குணம் கொண்டவராகவும் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் அழகினையும் கொண்டிருப்பார்கள். 

அதேபோல் பூரம்  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை எளிதில் வெல்வது எப்படி என்று அதிகமாக சிந்திக்கும் மனப்பான்மை கொண்டவராக இருப்பார்கள்.

இத்தகைய நட்சத்திரக்காரர்கள் நடப்பதை பற்றி யோசிப்பதை விட எதிர்காலத்தில் வரும் நிகழ்வுகளை அறிந்து அதற்கு ஏற்றவாறு செயல்படும் திறமை கொண்டவராக காணப்படுவார்கள்.

மேலும் இவர்கள் நிறைய ஆற்றலையும், அறிவினையும் பெற்றிருந்தாலும் கூட அதிகம் கோபம் கொள்ளும் குணம் கொண்டவராக இருப்பார்கள். அதேபோல் நேர்மை குணத்திற்கு அதிக முக்கித்துவம் கொடுக்கும் தன்மை கொண்டவராகவும் இருப்பார்கள்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் தெரியுமா

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை:

கல்வி மற்றும் தொழில்:

கற்கும் கல்வியில் பூரம் நட்சத்திரக்காரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். மேலும் கல்வியில் அதிக புத்திசாலித்தனத்துடனும் இருப்பார்கள்.

இந்த நட்சத்திரக்காரர்கள் செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் அதில் லாபத்தினை கொண்டு வரும் வகையில் கடின உழைப்பினை செலுத்துவார்கள். அதேபோல் இசை, அரசியல், கலை, ஆன்மீகம் மற்றும் ஆடல் பாடல் ஆகிய துறைகளிலும் சிறப்பாக செயல்படும் வாய்ப்புகள் உள்ளது.

குடும்ப வாழ்க்கை:

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் காதல் திருமணத்தை விரும்பக்கூடிய நபராக தான் இருப்பார்கள். அதற்கான நல்ல வாய்ப்புகளும் இவர்களுக்கு உள்ளது.

குடும்பத்தில் உள்ளவர்களின் மீது அதீத அன்பு கொண்டவராக இருப்பார்கள். ஆனால் சிறு சிறு விஷயங்களை வாழ்க்கையில் இழக்க வேண்டிய சூழல் உண்டாகும். மேலும் சோகமும் அடிக்கடி காணப்படும்.

உடல் ஆரோக்கியம்: 

வாழும் வாழ்க்கையில் நினைத்தது நிறைவேறி மகிழ்ச்சியாக வாழ்ந்தாலும் கூட உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து கொண்டே தான் இருக்கும். அதனால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

கும்ப ராசி சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் பற்றி தெரியுமா 

அதிர்ஷ்டமான எண், மந்திரம் மற்றும் நிறம்:

மந்திரம்:

ஸம் பூஜயாமி அர்ய மானம் பல்குனி தார தேவதாம் தூம் ரவர்ணம் ரதாருடம் ஸ சக்திகர சோயினம்.

அதிர்ஷ்டமான எண்:

பூரம் நட்சத்திரக்கர்களுக்கு அதிர்ஷ்டமான எண் 3, 6, 8 ஆகும்.

அதிர்ஷ்டமான நிறம்:

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை.

ராசி கல்:

வைரம் கல் இவர்களுக்கு ராசியான கல் ஆகும்.

அதிபதி:

சுக்கிரன்.

பூரம் நட்சத்திரம் பொருந்தும் நட்சத்திரம்:

பெண் நட்சத்திரம்:

உத்திரம் 1-ஆம் பாதம், அஸ்வனி, பூரட்டாதி 1, 2, மற்றும் 3-ஆம் பாதம் ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தக்கூடிய நட்சத்திரங்கள் ஆகும்.

ஆண் நட்சத்திரம்:

உத்திரம், அஸ்தம், சுவாதி, திருவோணம் மற்றும் உத்திராடம் 1-ஆம் பாதம் ஆகிய நட்சத்திரங்கள் பூரம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு பொருந்தக்கூடிய நட்சத்திரம் ஆகும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement