ப்ரபோ கணபதி பாடல் | Prabho Ganapathe Lyrics in Tamil..!
நாம் வணங்கும் கடவுகளுக்கு எல்லாம் முதல் கடவுளாய் விளங்குவது விநாயகப் பெருமாள் தான். இத்தகைய விநாயகரை கணேசர் என்றும் அழைக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் எந்த கோவிலுக்கு சென்றாலும் அங்கு முதல் பூஜை என்பது விநாயருக்கு தான் அளிக்கப்டுகிறது. இப்படிப்பட்ட சிறப்பினை கொண்டுள்ள விநாயகருக்காக மாதம்தோறும் சதுர்த்தியும், வருடத்தில் ஒரு நாள் விநாயகர் சதுர்த்தியும் கொண்டாடப்படுகிறது. இத்தகைய முறையில் தினமும், மாதந்தோறும் மற்றும் வருடத்திற்கு ஒரு முறை என வணங்கும் போது அவருக்கு உரிய பாடல்களை பாடி பூஜை செய்வது என்பது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் இன்று ப்ரபோ கணபதி பாடல் வரிகளை தான் பார்க்கப்போகிறோம். ஒருவேளை உங்களுக்கும் இந்த பாடல் வரிகள் தெரியாமல் இருந்தால் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு முறைகள் பற்றி தெரியுமா
ப்ரபோ கணபதி பாடல்:
ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே
ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே
ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே
சார்ந்து வணங்கி துதி பாடி ஆடி உந்தன்
சன்னதி சரணடைந்தோமே
சாந்த சித்த சௌபாக்கியம் யாவையும்
தந்தருள் சற்குரு நீயே—ப்ரபோ
ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே
ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே
ஆதி மூல கணநாத கஜானன
அற்புத தவள சொரூபா
தேவ தேவ ஜெய விஜய விநாயக
சின்மய பர சிவ தீபா—ப்ரபோ
ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே
ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே
தேடி தேடி எங்கோ ஓடுகின்றார் உள்ளே
தேடி கண்டு கொள்ளலாமே
கோடி கோடி மத யானைகள் பணிசெய்ய
குன்றென விளங்கும் பெம்மானே—ப்ரபோ
ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே
ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே
ஞான வைராக்ய விசார சார ஸ்வர
ராகலய நடன பாதா
நாம பஜன குண கீர்த்தன நவவித
நாயக ஜெய ஜெகந்நாதா–ப்ரபோ
ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே
ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே
பார்வதி பாலா அபார வார வர
பரம பகவ பவ தரணா
பக்த ஜன சுமுக ப்ரவண விநாயக
பாவன பரிமள சரணா–ப்ரபோ
ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே
ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |