பிரச்சனை தீர என்ன வழி
பொதுவாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருக்கும். ஒரு சிலருக்கு பண பிரச்சனை இருக்கும், இன்னும் ஒரு சிலருக்கு குடும்ப பிரச்சனை இருக்கும்.. மேலும், திருமண பிரச்சனை, குழந்தை பாக்கியம் பிரச்சனை இதுபோன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சனையால் கஷ்டப்பட்டு வருவார்கள். இதனால் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஏற்ற பரிகாரங்களை செய்து வருவார்கள். அதேபோல், எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வாக இருக்கக்கூடிய ஒரு எளிய பரிகாரம் ஒன்றினை பற்றி தான் இப்பதிவில் பார்க்க போகிறோம்.
Prachanai Theera Pariharam:
பரிகாரம் செய்ய தேவையான பொருட்கள்:
- சிகப்பு நிற துணி
- கோதுமை தானியம்
பரிகாரம் செய்யும் முறை:
நமக்கு பிடிக்காத அல்லது தேவையில்லாத பிரச்சனை நமக்கு இருக்கிறது என்றால் அப்பிரச்சனை நீங்க நாம் சூரிய பகவானை வணங்க வேண்டும். ஏனென்றால் அணைத்து விதமான பிரச்சனையையும் தீர்பவர் அவர்தான். எனவே சூரிய நாசகார செய்வது மிகவும் முக்கியம். இப்பதிவில் அவருக்கு உண்டான ஒரு பரிகாரத்தை பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.
முதலில் ஒரு சிகப்பு நிறத்தில் உள்ள ஒரு புதிய துணியை எடுத்து கொள்ளுங்கள். அதில் பயன்படுத்தாத மற்றும் அரைக்காத கோதுமையை வைத்து முடிச்சி ஒன்றினை போட்டு கொள்ள வேண்டும்.
அதன் பிறகு, இதனை நீங்கள் தூங்கும்போது தலையணைக்கு அடியில் வைத்துன் தூங்க வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து சூரிய பகவானை பார்த்து நமஸ்காரம் செய்து உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டி கொள்ள வேண்டும்.
எப்பேர்ப்பட்ட பணக்கஷ்டமும் தீர்ந்து போகும் செய்வாய்கிழமையில் இதை மட்டும் செய்தால் போதும் ..!
இப்பரிகாரத்தை தொடர்ந்து 7 நாட்கள் செய்து வர வேண்டும். முக்கியாக இப்பரிகாரத்தை நீங்கள் ஞாயிற்று கிழமை இரவிலிருந்துதான் செய்ய தொடங்க வேண்டும்.
உங்களுக்கு பலவிதமான பிரச்சனைகள் இருந்தால், முதலில் ஒரு பிரச்சனையை தீர வேண்டும் என்று வேண்ட வேண்டும். இந்த பிரச்சனை தீர்ந்த பிறகு அடுத்த பிரச்சனையை நினைத்து வேண்ட வேண்டும்.
இவ்வாறு ஒவ்வொரு பிரச்சனையாக நினைத்து வேண்டிக்கொள்ளும்போது உங்களுக்கான பிரச்சனை அனைத்தும் முடிவுக்கு வரும்.
அதன் பிறகு, 7 நாட்களுக்கு பிறகு, இந்த முடிச்சியினை விலங்குகளுக்கோ அல்லது பறவைகளுக்கோ கொடுத்து விடுங்கள்.
அப்படி இல்லையென்றால் மரம் அல்லது செடிகளுக்கு அருகில் கொட்டி விட வேண்டும்.
இந்த பரிகாரத்தை நீங்கள் ஒருவாரம் செய்தால் போதும்.. இருப்பினும் உங்களுக்கு பிரச்சனை சிறிய அளவில் தான் குறைந்து இருக்கு என்று தோன்றினால் மீண்டும் ஒருமுறை இப்பரிகாரத்தை செய்யலாம்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |