பிரதோஷம் நாட்கள் 2023 | பிரதோஷ விரதம் 2023 | Pradosh Vrat Dates 2023
Pradosh Vrat 2023 / பிரதோஷம் நாட்கள் 2023:- பிரதோஷம் என்பது சிவபெருமானை வழிபட உகந்த காலமாக கருதப்படுகிறது. இந்த பிரதோஷ காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோஷ வழிபாடு என்றும், பிரதோஷ நாட்களில் கடைபிடிக்கும் விரதத்தினை பிரதோஷ விரதம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பிரதோஷத்துக்கான புராண கதை என்னவென்றால் செல்வத்திற்காக அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடையும் பொழுது ஆலகாலம் எனும் விசம் வெளிப்பட்டது. அதற்கு அஞ்சிய தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானிடம் தங்களை காக்கும் படி வேண்டினர். அவர்களுக்காக சிவபெருமான் ஆலகால விஷத்தினை உண்டார். தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக்கண்ட பார்வதி தேவி தன் கைகளால் சிவபெருமானின் கழுத்தினை இறுகப்பிடித்தார். பார்வதி தேவி தொட விஷம் சிவனின் நெஞ்சுக் குழியிலேயே நின்றுவிட்டதால் இறைவன் நீலகண்டனானார். இந்த நேரம் தான் பிரதோஷ காலம் என்று வணங்கப்படுகிறது.
இந்த பிரதோஷ காலத்தில் சிவபெருமான் ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனளிக்கும். மாதந்தோறும் இருமுறை – அதாவது வளர் பிறை மற்றும் தேய் பிறை திரயோதசி (13-ம் நாள்) பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் சிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும் என்பது அனைவரது நம்பிக்கை.
சோமவார விரதம் இருக்கும் முறை..! |
பிரதோஷ விரதம் நாட்கள் 2023 | Pradosh Vrat 2023 List:
பிரதோஷம் நாட்கள் 2023 | கிழமை | Pradosh Vrat Dates / Pradosh Vrat Date 2023 |
04.01.2023 | புதன் | பிரதோச விரதம் |
19.01.2023 | வியாழன் | பிரதோச விரதம் |
03.02.2023 | வெள்ளி | பிரதோச விரதம் |
18.02.2023 | சனி | மகா சிவராத்திரி, சனி பிரதோஷம் |
04.03.2023 | சனி | சனி பிரதோஷம் |
19.03.2023 | ஞாயிறு | பிரதோச விரதம் |
03.04.2023 | திங்கள் | சோமா வார பிரதோசம் |
17.04.2023 | திங்கள் | சோமா வார பிரதோசம் |
03.05.2023 | புதன் | பிரதோஷம் விரதம் |
17.05.2023 | புதன் | பிரதோஷம் விரதம் |
01.06.2023 | வியாழன் | பிரதோஷம் விரதம் |
15.06.2023 | வியாழன் | பிரதோஷம் விரதம் |
01.07.2023 | சனி | சனி பிரதோஷம் |
15.07.2023 | சனி | சனி பிரதோஷம் |
13.08.2023 | ஞாயிறு | பிரதோச விரதம் |
28.08.2023 | திங்கள் | சோமா வார பிரதோசம் |
12.09.2023 | செவ்வாய் | பிரதோச விரதம் |
27.09.2023 | புதன் | பிரதோச விரதம் |
12.10.2023 | வியாழன் | பிரதோச விரதம் |
26.10.2023 | வியாழன் | பிரதோச விரதம் |
10.11.2023 | வெள்ளி | பிரதோச விரதம் |
24.11.2023 | வெள்ளி | பிரதோச விரதம் |
10.12.2023 | ஞாயிறு | பிரதோச விரதம் |
24.12.2023 | ஞாயிறு | பிரதோச விரதம் |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |